Carbon and its Compounds Important Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    15 x 1 = 15
  1. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

    (a)

    மாற்றியம்

    (b)

    புறவேற்றுமை வடிவம்

    (c)

    சங்கிலித் தொடராக்கம் 

    (d)

    படிகமாக்கல் 

  2. கிராஃபைட் கார்பனிலுள்ள தனித்த எலக்ட்ரோன்களின் எண்ணிக்கை

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  3. ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகள்.

    (a)

    நான்முகி மற்றும் ஐங்கரம் 

    (b)

    ஐங்கரம் மற்றும் அறுங்கோணம்

    (c)

    அறுங்கோணம் மற்றும் ஏழுகோணம் 

    (d)

    ஏழுகோணம் மற்றும் எண்முகி

  4. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்

    (a)

    புறவேற்றுமை வடிவம் மாற்றியம்

    (b)

    நான்கு இணைதிறன்

    (c)

     சங்கிலி தொடராக்கம்

    (d)

    இவை அனைத்தும்

  5. வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனென்னில்,

    (a)

    அதன் கடினத் தன்மை

    (b)

    அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை

    (c)

    அதன் சீரான வடிவம்

    (d)

    அது நீரில் கரைவதில்லை

  6. கீழ்கண்டவற்றுள் இரட்டைப் பிணைப்பு இல்லாதது எது?

    (a)

    CO2

    (b)

    C2H4

    (c)

    HCl

    (d)

    O2

  7. கீழ்கண்டவற்றுள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது எது?

    (a)

    கார்பன் டைஆக்ஸைடு

    (b)

    கார்பன் மோனோக்ஸைடு

    (c)

    கால்சியம் கார்பனேட் 

    (d)

    சோடியம் பைகார்பனேட்

  8. நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

    (a)

    பாலிஸ்டைரீன்

    (b)

    பி.வி.சி

    (c)

    பாலிபுரோப்பலீன்

    (d)

    எல்.டி.பி.இ

  9. பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (ABS) முலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?

    (a)

    2

    (b)

    5

    (c)

    6

    (d)

    7

  10. கீழ்க்கண்டவற்றுள் எந்த நெகிழி தமிழக அரசால் ஜனவரி 1, 2019 முதல் தடை  செய்யப்பட்டுள்ளது?

    (a)

    நெகிழித்தாள்

    (b)

    நெகிழித் தேநீர் குவளை

    (c)

    நெகிழித் தண்ணீர் பைகள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  11. கிராஃபைட்டை உராய்வுக் குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்தக் காரணம் என்ன ?

    (a)

    அது நல்ல மின்கடத்தி

    (b)

    அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.

    (c)

    அதன் அதிக அடர்த்தி

    (d)

    அது வலிமையானது மற்றும் மிருதுவானது

  12. பென்சில் முனையில் இருப்பது எது?

    (a)

    கிராஃபைட்

    (b)

    வைரம்

    (c)

    காரியம்

    (d)

    கரி

  13. ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?

    (a)

    வைரம்

    (b)

    ஃபுல்லரின்

    (c)

    கிராஃபைட்    

    (d)

    வாயு கார்பன்

  14. நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக் குறிகளால் உருவாக்கப்பட்ட _________ டன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின் சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.

    (a)

    சின்னம் 

    (b)

    மறு சுழற்சி

    (c)

    சதுரம் 

    (d)

    முக்கோணம்

  15. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988ன் கீழ் வருகின்றன.

    (a)

    வனத்துறை

    (b)

    வனவிலங்கு

    (c)

    சுற்றுச்சுழல் 

    (d)

    மனித உரிமைகள்

  16. 5 x 3 = 15
  17. வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்

  18. தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?

  19. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?

  20. கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?

  21. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?

  22. 6 x 5 = 30
  23. சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை  உருவாக்குகிறது?

  24. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

  25. கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?

  26. குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?

  27. டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?

  28. யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் கார்பனும் அவற்றின் சேர்மங்களும் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Carbon and Its Compounds Chapter Important Questions and Answers )

Write your Comment