Important Question Part-II

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    28 x 1 = 28
  1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

    (b)

    மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

    (c)

    கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

    (d)

    மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

  2. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

    (a)

    நிறை

    (b)

    எடை

    (c)

    காலம்

    (d)

    நீளம்

  3. வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு ________.

    (a)

    0.01 செ.மீ.

    (b)

    0.01 செ. மீ.

    (c)

    0.1 செ.மீ.

  4. திருகு அளவியின் மீச்சிற்றளவு ______.

    (a)

    0.01மி.மீ.

    (b)

    0.01மி. மீ.

    (c)

    0.1 மி.மீ.

  5. நிலவின் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _______.

    (a)

    1.63 மி.வி.-2 

    (b)

    4.63 மி.வி.-2

    (c)

    9.8 மி.வி.-2

  6. ஒரு மகிழுந்து 20 மீ / விநாடி வேகத்தில் இயக்கப்படுகிறது.தடையைப் பயன்படுத்தி 5 விநாடி கால இடைவெளியில் அது ஓய்வு நிலையைப் பெறுகிறது. இதில் ஏற்பட்ட எதிர்மறை முடுக்கம் என்ன

    (a)

    4 மீ / விநாடி2

    (b)

    - 4 மீ / விநாடி2

    (c)

    - 0.25 மீ / விநாடி2

    (d)

    0.25 மீ / விநாடி2

  7. கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?

    (a)

    சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்

    (b)

    வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்.

    (c)

    வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து

    (d)

    கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்

  8. முடுக்கத்தின் அலகு 

    (a)

    மீ / விநாடி 

    (b)

    மீ / விநாடி2

    (c)

    மீவி 

    (d)

    மீவி

  9. மையநோக்கு விசையின் எண் மதிப்பு ____ 

    (a)

    \(F=\frac { { mv } }{ { r }^{ 2 } } \)

    (b)

    \(F=\frac { { m^{ 2 }v } }{ { r } } \)

    (c)

    \(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)

  10. V < u எனில் திசைவேகத்தின் மதிப்பு ______ 

    (a)

    அதிகரிக்கிறது 

    (b)

    குறைகிறது 

    (c)

    மாறிலி 

  11. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______ 

    (a)

    குழியாடி

    (b)

    குவியாடி

    (c)

    சமதளஆடி

  12. ஒளியின் திசைவேகம் ________ ல் பெருமமாக உள்ளது.

    (a)

    வெற்றிடத்தில்

    (b)

    கண்ணாடியில்

    (c)

    வைரத்தில்

  13. ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______

    (a)

    குவிய தூரம்

    (b)

    குவியம்

    (c)

    வளைவு ஆரம்

  14. குழி ஆடியில் ஈரிலாத் தொலைவில் பொருள் வைக்கப்படும் போது பிம்பம் எந்த இடத்தில் கிடைக்கும்?

    (a)

    முதன்மை குவியத்தில்

    (b)

    ஈறிலியல்

    (c)

    ஆடிக்கு பின்னால்

  15. முழு அக எதிரொலிப்பு நிகழ ஒளியானது_____லிருந்து _____க்கு செல்லவேண்டும்

    (a)

    அடர்மிகு;அடர்குறை

    (b)

    அடர்குறை:அடர்குறை

    (c)

    அடர்மிகு;அடர்மிகு

  16. பின்வருவனவற்றுள் ______ ஒரு கலவை.

    (a)

    சாதாரண உப்பு

    (b)

    தூய வெள்ளி

    (c)

    கார்பன் டை  ஆக்ஸைடு

    (d)

    சாறு

  17. மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை ______________ .

    (a)

    வடிகட்டல்

    (b)

    வண்டல்  

    (c)

    சாய்த்து வடித்தல்   

    (d)

    மைய விலக்கம்

  18. திண்மங்களில் துகள்கள் _________ இடைவெளியில் இருக்கும்.

    (a)

    மிக அதிக

    (b)

    மிக குறைந்த

  19. மாற்றுக. 90C = _______ K

    (a)

    363 K

    (b)

    383 K

    (c)

    303 K

  20. கூழும் கரைசல் ஒரு ___________ கலவை

    (a)

    ஒருபடித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    சேர்மம்

  21. தவறான ஒன்றைக் கண்டுபிடி

    (a)

    8O18, 17cl37

    (b)

    18Ar40,7N14

    (c)

    14Si30, 15pd31

    (d)

    20ca40, 19K39

  22. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

    (a)

    2,8,9

    (b)

    2,8,1

    (c)

    2,8,8,1

    (d)

    2,8,8,3

  23. அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.

    (a)

    ஆர்பிட்

    (b)

    உட்கரு

    (c)

    புரோட்டான்

  24. நியூட்ரான்களின் மின்சுமை _________.

    (a)

    நேர்

    (b)

    எதிர்

    (c)

    சுழி

  25. ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.

    (a)

    ஐசோடோன்

    (b)

    ஐசோடோப்பு

    (c)

    ஐசோபார்

  26. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்

    (a)

    நடுக்கமுறு வளைதல்

    (b)

    ஒளிச்சார்பசைவு

    (c)

    நீர்சார்பசைவு

    (d)

    ஒளியுறு வளைதல்

  27. தாவரத்தின் வேர் ____________ ஆகும்
    I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
    II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
    III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
    IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு

    (a)

    I மற்றும் II

    (b)

    II மற்றும் III

    (c)

    III மற்றும் IV

    (d)

    I மற்றும் IV

  28. ____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.

    (a)

    வேர் 

    (b)

    தண்டு

    (c)

    கிளைகள்

    (d)

    இலைகள்

  29. Section - II

    18 x 2 = 36
  30. அளவீடு என்றால் என்ன ?

  31. புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?

  32. ஒரு நியூட்டன் வரையறு.

  33. சீரான, சீரற்ற இயக்கம் வேறுபடுத்துக்க?

  34. தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?

  35. காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக

  36. நேரான பெரிதாக்கப்பட்ட பிம்பம் மற்றும் அதே அளவுள்ள தலைகீழான பிம்பம், இவற்றைத் தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை ?

  37. முதன்மை குவியம் என்றால் என்ன?

  38. குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?

  39. குழி ஆடியில் P மற்றும் C க்கு இடையே உள்ள தொலைவு 10 cm எனில் குவியத் தூரத்தை காண்க.

  40. பருப்பொருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது

  41. உருகுநிலை என்றால் என்ன?

  42. பயன்படுத்தும் முன் நன்றாகக் கலக்கவும். இது மருந்து சாடியின் மேல் உள்ள குறிப்பு. அந்த சாடியில் என்ன மாதிரியான கலவை உள்ளது? காரணம் தருக.

  43. K மற்றும் Cl ஆகியவற்றின் எலக்ட்ரான் பகிர்வை எழுதுக.

  44. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

  45. ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.       

  46. பச்சையம் என்றால் என்ன?

  47. நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

  48. Section - III

    6 x 3 = 18
  49. நிலையான அலகு முறையின் தேவை என்ன?

  50. சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்?

  51. உண்மையான வேகம் சராசரி வேகத்திலிருந்து ஏன் மாறுபடுகிறது?

  52. குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம்  கொண்ட  பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.

  53. கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
    i) ஒன்றாக கலக்கும் திரவங்கள்
    ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்

  54. ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.

  55. Section - IV

    6 x 5 = 30
  56. 98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.

  57. ஒரு சோதனையில், விண்வெளிக் கப்பலிலிருந்து புறப்பட்ட சைகை (சிக்னல்), 5 விநாடிக்குப் பிறகு தரை தரைக்கட்டுப்பாட்டு நிலையம் வந்தடைந்தது. விண்வெளிக் கப்பலுக்கும் தரைக்காட்டுப்பாட்டு நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு? சைகை பயணிக்கும் வேகம் 3 \(\times\) 108 மீ / விநாடி

  58. குழியாடியின் முன் 7 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படும்போது அதன் ஒன்றின் மும்மடங்கு உருப்பெருக்கப்பட்ட பிம்பம் கிடைக்கிறது எனில், பிம்பம்  எவ்விடத்தில் கிடைக்கும்?(விடை : 21 செ .மீ தொலைவில்)

  59. எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது? (பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்).

  60. தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?

  61. A, B மற்றும் C என்று மூன்று தாவங்கள் உள்ளன. A தாவரத்தில் உள்ள மலரின் இதழ்கள் பகல் நேரத்தில் பிரகாசமான ஒளியில் திறக்கும். ஆனால் ஒளி மங்கும்போது இருளில் மூடிக்கொள்ளும். தாவரம் B ல் உள்ள மலர்களின் இதழ்கள் இரவு நேரத்தில் திறந்த நிலையில் இருக்கும். ஆனால் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் மூடிக்கொள்ளும். தாவரம் C யில் உள்ள இலைகளை விரல்களால் தொட்டால் அல்லது திடப் பொருள் ஏதும் அதன் மீது பட்டால் மூடிக்கொள்ளும்.
    அ) தாவரம் A மற்றும் B யின் மலர்களில் நிகழும் நிகழ்வினைப் பெயரிடுக.
    ஆ) தாவரம் A மற்றும் B யின் மலர்களின் பெயரினை எழுதுக.
    இ) தாவரம் C யின் இலைகளில் ஏற்படும் நிகழ்வினைப் பெயரிடுக
    ஈ) தாவரம் C யின் இலைகளில் நிகழும் நடத்தை போன்று வேறு ஒரு தாவரத்தின் பெயரினை எழுதுக

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020  ( 9th Standard Science Tamil Medium Important Question All Chapter 2020 )

Write your Comment