Important Question-V

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    28 x 1 = 28
  1. ஒரு மெட்ரிக் டன் என்பது _______.

    (a)

    100 குவின்டால்

    (b)

    10 குவின்டால்

    (c)

    1/10 குவின்டால்

    (d)

    1/100 குவின்டால்

  2. சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?

    (a)

    கிலோ  மீட்டர்      

    (b)

    மீட்டர்

    (c)

    சென்டி மீட்டர்     

    (d)

    மில்லி மீட்டர்

  3. மாற்றுக : 300K = _________ 0

    (a)

    230 C

    (b)

    2730 C

    (c)

    270 C

  4. மாற்றுக : 104 F = _________ 0 C

    (a)

    2730 C

    (b)

    1040 C

    (c)

    400 C

  5. ஒரு வானியல் அலகு என்பது

    (a)

    1.496 x 1011 மீ

    (b)

    9.46 x 1015 மீ

    (c)

    1.496 x 10-11 மீ

  6. கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?

    (a)

    சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்

    (b)

    வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்.

    (c)

    வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து

    (d)

    கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்

  7. மையவிலக்கு விசை ஒரு

    (a)

    உண்மையான விசை

    (b)

    மையநோக்கு விசைக்கு எதிரான விசை

    (c)

    மெய்நிகர் விசை

    (d)

    வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை

  8. முடுக்கத்தின் அலகு 

    (a)

    மீ / விநாடி 

    (b)

    மீ / விநாடி2

    (c)

    மீவி 

    (d)

    மீவி

  9. சரியான அறிக்கையை தேர்வு செய்க.

    (a)

    வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.

    (b)

    வினை மற்றம் எதிர்வினை விசைகள்  வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.

    (c)

    (a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி 

  10. ஒரு பொருளின் சம காலத்தில் சமமற்ற தொலைவுகளை கடக்குமானால் அது _____ இயக்கம்.

    (a)

    சீரான இயக்கம் 

    (b)

    சிரற்ற  இயக்கம் 

    (c)

    வட்ட  இயக்கம் 

  11. இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது

    (a)

    சமதள ஆடி

    (b)

    குழியாடி

    (c)

    குவியாடி

  12. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______ 

    (a)

    குழியாடி

    (b)

    குவியாடி

    (c)

    சமதளஆடி

  13. ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______

    (a)

    குவிய தூரம்

    (b)

    குவியம்

    (c)

    வளைவு ஆரம்

  14. குவி ஆடிக்கு u மற்றும் v ன் மதிப்பு எப்போதும்_______

    (a)

    எதிர்குறி

    (b)

    நேர்குறி

    (c)

    சுழி

  15. முழு அக எதிரொலிப்பு நிகழ ஒளியானது_____லிருந்து _____க்கு செல்லவேண்டும்

    (a)

    அடர்மிகு;அடர்குறை

    (b)

    அடர்குறை:அடர்குறை

    (c)

    அடர்மிகு;அடர்மிகு

  16. பின்வருவனவற்றுள் ______ ஒரு கலவை.

    (a)

    சாதாரண உப்பு

    (b)

    தூய வெள்ளி

    (c)

    கார்பன் டை  ஆக்ஸைடு

    (d)

    சாறு

  17. __________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.

    (a)

    தூய பொருள்

    (b)

    கலவை 

    (c)

    கூழ்மம்

    (d)

    தொங்கல் 

  18. சோடியத்தின் கொதிநிலை மதிப்பு _________.

    (a)

    290C

    (b)

    890C

    (c)

    2900C

  19. நீர் மற்றும் உப்பு ஒரு ________ கலவை.

    (a)

    ஒருபடித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    சேர்மம்

  20. கூழும் கரைசல் ஒரு ___________ கலவை

    (a)

    ஒருபடித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    சேர்மம்

  21. தவறான ஒன்றைக் கண்டுபிடி

    (a)

    8O18, 17cl37

    (b)

    18Ar40,7N14

    (c)

    14Si30, 15pd31

    (d)

    20ca40, 19K39

  22. \(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    80, 80, 35

    (b)

    35, 55,80

    (c)

    35, 35, 80

    (d)

    35, 45, 35

  23. உட்கருவை கண்டறிந்தவர் _________.

    (a)

    ரூதர்போர்டு

    (b)

    J.J. தாம்சன்

    (c)

    ஹென்றி பெக்கோரல்

  24. அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.

    (a)

    ஆர்பிட்

    (b)

    உட்கரு

    (c)

    புரோட்டான்

  25. கால்சியம் மற்றும் ஆர்கான் _________.

    (a)

    ஐசோடோப்பு

    (b)

    ஐசோபார்

    (c)

    ஐசோடோன்

  26. ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள்_________.

    (a)

    ஒளி சார்பசைவு

    (b)

    புவி சார்பசைவு

    (c)

    தொடு சார்பசைவு

    (d)

    வேதிசார்பசைவு 

  27. நீராவிப்போக்கு பின்வரும் எந்த வாக்கியத்தின் அடிப்படையில் சிறந்தது என வரையறுக்கப்படுகின்றது.

    (a)

    தாவரங்கள் மூலம் நீர் இழப்பு.

    (b)

    தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்

    (c)

    தாவரத்தின் தரைக்கு கீழ் உள்ள பாகத்திலிருந்து நீர் நீராவியாக இழக்கப்படுதல்

    (d)

    தாவரத்தின் நீர்வளிமண்டலத்திற்கு வெளியேறுதல்

  28. ஒரு தாவரம் இருட்டறையில் 24 மணிநேரம் வைக்கப்படுவது எந்த ஒரு ஒளிச்சேர்கை சோதனை செய்வதற்காக? _____.

    (a)

    இலைகளில் பச்சையத்தை நீக்க 

    (b)

    இலைகளில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க 

    (c)

    ஒளிச்சேர்க்கை நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி செய்ய 

    (d)

    நீராவிபோக்கை நிரூபிக்க

  29. Section - II

    18 x 2 = 36
  30. 2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?

  31. விண்ணியல் ஆரம் என்றால் என்ன?

  32. புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?

  33. தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?

  34. முடுக்கம் - வரையறு.

  35. நேரான பெரிதாக்கப்பட்ட பிம்பம் மற்றும் அதே அளவுள்ள தலைகீழான பிம்பம், இவற்றைத் தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை ?

  36. குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது பிம்பம் எங்கே உருவாகும்?

  37. குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?

  38. விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?

  39. "இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?

  40. பருப்பொருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது

  41. 22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய்.அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?

  42. டிண்டால் விளைவு உண்மைக் கரைசலில் உண்டாவது இல்லை. ஏன்?

  43. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
    கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்

  44. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

  45. இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. 

  46. பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
    அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
    ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.

  47. பின்வரும் படங்களைப்  பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.

    தூண்டல்  ஒளி  புவிஈர்ப்பு 
    தண்டு  + -
    வேர்  ? +

  48. Section - III

    6 x 3 = 18
  49. SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை ?

  50. எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?

  51. அ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியின் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என வரைந்து காட்டுக.
    ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும் 

  52. கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
    i) ஒன்றாக கலக்கும் திரவங்கள்
    ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்

  53. ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.

  54. Section - IV

    6 x 5 = 30
  55. ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிகோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.

  56. கீழ்வரும் அட்டவணையிலிருந்து கிடைக்கும் வரைபடத்தைச் சரிபார்க்கவும்.

    நேரம் (விநாடி) 0 2 4 6 8 10 12
    திசைவேகம் (மீ/விநாடி) 0 20 40 40 40 20 0
  57. ஒளிவிலகல் விதிகளைக் கூறு.

  58. தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.

  59. போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.

  60. உயிரினம் Aயினால் ஓர் இடம் விட்டு ஓரிடம் நகரமுடியாது. சுற்றுச்சூழலில் கிடைக்கும், C மற்றும் D யினைக் கொண்டு B என்ற எளிமையான உணவு உருவாக்குகிறது. இந்த உணவு G என்ற நிகழ்வினால் சூரிய ஒளியின் முன்னிலையில் F உறுப்புகளில் காணப்படும். E என்ற பச்சை நிறமுள்ளப் பொருளின் முன்னிலையில் உருவாக்கப்படுகின்றது. சில B எளிய உணவு சேமிப்பு நோக்கத்திற்காக கடினமான H-ஆக மாற்றப்படுகிறது, H அயோடின் கரைசல் உடன் சேர்த்தால் கருநீல நிறமாக மாறுகிறது.
    அ)  i) A உயிரினம் (ii) உணவு B மற்றும் உணவு H ஆகியன யாவை?
    ஆ) C மற்றும் D ஆகியன யாவை?
    இ) பெயரிடு: பச்சைநிறமுள்ள E மற்றும் உறுப்பு F
    ஈ) நிகழ்வு G ன் பெயர் என்ன?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 9th Standard Science Tamil Medium Important Questions 2019-2020 )

Write your Comment