Important Question-I

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  28 x 1 = 28
 1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

  (a)

  மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

  (b)

  மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

  (c)

  கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

  (d)

  மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

 2. ஒரு மெட்ரிக் டன் என்பது

  (a)

  100 குவின்டால்

  (b)

  10 குவின்டால்

  (c)

  1/10 குவின்டால்

  (d)

  1/100 குவின்டால்

 3. மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?

  (a)

  10-6

  (b)

  10-3

  (c)

  10-9

 4. ஒரு கருவியினால் அளவிடக் கூடிய மிகச்சிறிய அளவு ________ எனப்படும்.

  (a)

  மீச்சிற்றளவு

  (b)

  முதன்மை கோல் அளவு

  (c)

  வெர்னியர் அளவு

 5. ஒரு வானியல் அலகு என்பது

  (a)

  1.496 x 1011 மீ

  (b)

  9.46 x 1015 மீ

  (c)

  1.496 x 10-11 மீ

 6. முடுக்கத்தின் அலகு

  (a)

  மீ / விநாடி

  (b)

  மீ / விநாடி2

  (c)

  மீ விநாடி

  (d)

  மீ விநாடி2

 7. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை

  (a)

  மையநோக்கு விசை

  (b)

  மையவிலக்கு விசை

  (c)

  புவிஈர்ப்பு விசை

  (d)

  நிலை மின்னியல் விசை

 8. திசைவேகம் - காலம் வரைப்பத்தில் உள்ள பரப்பளவு குறிப்பது 

  (a)

  இயங்கும் பொருளின் திசைவேகம் 

  (b)

  இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி 

  (c)

  இயங்கும் பொருளின் வேகம் 

  (d)

  மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை 

 9. சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை ______.

  (a)

  f = mv2/r

  (b)

  f = mvr

  (c)

  f = mr2/v

  (d)

  f = v2/r

 10. சரியான அறிக்கையை தேர்வு செய்க.

  (a)

  வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.

  (b)

  வினை மற்றம் எதிர்வினை விசைகள்  வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.

  (c)

  (a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி 

 11. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊ்டகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?

  (a)

  0o

  (b)

  45o

  (c)

  90o

 12. பெரிதான ,மாய பிம்பங்களை உருவாக்குவது______

  (a)

  குழியாடி

  (b)

  குவியாடி

  (c)

  சமதளஆடி

 13. குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.

  (a)

  மெய்

  (b)

  மாய

  (c)

  தலைகீழ்

 14. ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______

  (a)

  குவிய தூரம்

  (b)

  குவியம்

  (c)

  வளைவு ஆரம்

 15. _______பிம்பத்திற்கும் உருப்பெருக்கத்தின் மதிப்பு நேர்குரியாக இருக்கும்

  (a)

  மெய்பிம்பம்

  (b)

  மாயபிம்பம்

  (c)

  தலைகீழ் பிம்பம்

 16. __________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.

  (a)

  தூய பொருள்

  (b)

  கலவை 

  (c)

  கூழ்மம்

  (d)

  தொங்கல் 

 17. கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில்  ____________ அவசியம்.

  (a)

  பிரிபுனல்

  (b)

  வடிதாள்

  (c)

  மைய விலக்கு இயந்திரம்

  (d)

  சல்லடை

 18. __________ எளிதில் அழுத்தக்கூடியது.

  (a)

  திண்மம்

  (b)

  திரவம்

  (c)

  வாயு

 19. ஆக்ஸிஜனின் உருகுநிலை மதிப்பு ________.

  (a)

  -219o C

  (b)

  98o C

  (c)

  100o C

 20. பற்பசை ஒரு ____________

  (a)

  கூழ்களிமம்

  (b)

  கூழ்மம்

  (c)

  கரைசல்

 21. நீயூக்ளியான் குறிப்பது

  (a)

  புரோட்டான் + எலக்ட்ரான்

  (b)

  நியூட்ரான் மட்டும்

  (c)

  எலக்ட்ரான் + நியூட்ரான்

  (d)

  புரோட்டான் + நியூட்ரான்

 22. \(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை

  (a)

  80, 80, 35

  (b)

  35, 55,80

  (c)

  35, 35, 80

  (d)

  35, 45, 35

 23. உட்கருவை கண்டறிந்தவர் _________.

  (a)

  ரூதர்போர்டு

  (b)

  J.J. தாம்சன்

  (c)

  ஹென்றி பெக்கோரல்

 24. நியூட்ரானைக் கண்டறிந்தவர் _________.

  (a)

  ஜேம்ஸ் சாட்விக்

  (b)

  ரூதர்போர்டு

  (c)

  J.J. தாம்சன்

 25. ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.

  (a)

  ஐசோடோன்

  (b)

  ஐசோடோப்பு

  (c)

  ஐசோபார்

 26. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்

  (a)

  நடுக்கமுறு வளைதல்

  (b)

  ஒளிச்சார்பசைவு

  (c)

  நீர்சார்பசைவு

  (d)

  ஒளியுறு வளைதல்

 27. ____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.

  (a)

  வேர் 

  (b)

  தண்டு

  (c)

  கிளைகள்

  (d)

  இலைகள்

 28. நீராவிப்போக்கு ________ ல் நடைபெறும்

  (a)

  பழம்

  (b)

  விதை

  (c)

  மலர்

  (d)

  இலைத்துளை

 29. Section - II

  18 x 2 = 36
 30. SI அலகின் விரிவாக்கம் என்ன ?

 31. வானியல் அலகு என்றால் என்ன?

 32. ஒரு நியூட்டன் வரையறு.

 33. தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?

 34. வட்ட இயக்கம் என்றால் என்ன?

 35. காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக

 36. வெற்றி்டத்தில் ஒளியின் வேகம் என்ன?

 37. குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?

 38. விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?

 39. "இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?

 40. டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்போது கலவை கலங்கலாக மாறுகிறது. ஏன்?

 41. கடல் நீரை உப்பு நீக்குதல் என்றால் என்ன

 42. வாயுக்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றிருக்கவில்லை?

 43. முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.

 44. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
  கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்

 45. இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. 

 46. தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலின் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் என்ன? 

 47. பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக
  அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்
  ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்

 48. Section - III

  6 x 3 = 18
 49. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?

 50. சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்?

 51. ஒரு மோட்டார் சைக்கிள் 20 மீ / விநாடி வேகத்தில்,செல்லும்போது அதன் முடுக்கம் 4 மீ / விநாடி2. அதன் திசைவேகத்தை அது எப்படி விளக்குகிறது எனக் கூறவும்.

 52. குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம்  கொண்ட  பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.

 53. பின்வருவனவற்றுள் எவை தூய பொருட்கள்? பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ரோகுளளோரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீர்.

 54. பெருக்கல் விகித விதியினை வரையறு

 55. Section - IV

  6 x 5 = 30
 56. கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து அளவீடு தொடர்பான குறைந்தது பத்து வார்த்தைகளைக் கண்டுபிடிக்க

 57. கீழ்க்காணும் வரைபடம் ஒரு பொருளின் திசைவேகம்-காலம் வரைபடம் ஆகும். எந்த நேர இடைவெளியில் அது முடுக்கப்பட்டது? பகுதி ‘a’ வில் கொடுக்கப்பட்டுள்ள கால இடைவெளியில் அதன் முடுக்கம் என்ன? அதே கால இடைவெளியில் அப்பொருள் கடந்த தூரம் எவ்வளவு?

 58. அ) கதிரப்படங்கள் மூலம் ஒரு குழியாடி பின்வரும் நிலைகளில் எவ்வாறு பிம்பத்தை உருவாக்குகி்றது என வரைந்து காட்டுக.
  i) c – இல் ii) c – க்கும் F- க்கும் இடையில் iii) F- க்கும் P-க்கும் இடையில்
  ஆ) மேற்கண்ட மூன்று நிலைகளிலும் பிம்பத்தின் நிலை (இடம்), தன்மை ஆகியவற்றைப் படத்தில் குறிப்பிடுக

 59. தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.

 60. புரோட்டானின் நிறையை கணக்கிடுக
  அதன் மின்சுமை = 1.60\(\times\)10-19c
  மின்சுமை / நிறை = 9.55\(\times\)108c kg-1

 61. நீர் சார்பசைவு - நிரூபிக்க ஒரு சோதனையை வடிவமைத்து விளக்கவும். 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020  ( 9th Standard Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )

Write your Comment