HIS - நவீன யுகத்தின் தொடக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

    (a)

    லியானார்டோ டாவின்சி

    (b)

    பெட்ரார்க்

    (c)

    ஏராஸ்மஸ்

    (d)

    தாமஸ் மூர்

  2. வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.

    (a)

    சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

    (b)

    பூமியே பிரபஞ்சத்தின் மையம்

    (c)

    புவியீர்ப்பு விசை

    (d)

    இரத்தத்தின் சுழற்சி

  3. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

    (a)

    மாலுமி ஹென்றி

    (b)

    லோபோ கோன்ஸால்வ்ஸ்

    (c)

    பார்த்தலோமியோ டயஸ்

    (d)

    கொலம்பஸ்

  4. அமெரிக்க கண்டம் ._________என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

    (a)

    அமெரிகோ வெஸ்புகி

    (b)

    கொலம்பஸ்

    (c)

    வாஸ்கோடகாமா

    (d)

    ஹெர்நாண்டோ கார்டஸ் 

  5. கீழ்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    கரும்பு

    (b)

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு

    (c)

    அரிசி

    (d)

    கோதுமை

  6. 5 x 1 = 5
  7. நிலப்பிரபுத்துவம்

  8. (1)

    சமூக பொருளாதார அமைப்பின் படிநிலை

  9. மனிதாபிமானம்

  10. (2)

    ஐரோப்பாவிற்கு அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றம்

  11. நீதி  விசாரணை

  12. (3)

    ஏகபோக வர்த்தகம்

  13. மெர்க்கண்டலிசம்

  14. (4)

    மனித கௌரவம்

  15. கொலம்பிய பரிமாற்றம்

  16. (5)

    மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை 

    1 x 5 = 5
  17. மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின்  வருகையைப் பறை சாற்றின - விவாதி.

  18. 2 x 1 = 2
  19. அ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர், அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்.
    ஆ) ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.
    இ) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.
    ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

  20. அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசர்களிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.
    ஆ) குதிரைகள் அமெரிக்கவை பிறப்பிடமாகக் கொண்டவை.
    இ) நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை.
    ஈ) போர்ச்சுசீக்கியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

  21. 2 x 2 = 4
  22. மத சீர்திருத்தம்
    அ) மார்ட்டின் லூதர் தேவாலயத்தை ஏன் எதிர்த்தார்?
    ஆ) 'நம்பிக்கையினால் நியாப்படுத்துதல்' என்ற கொள்கை குறித்து எழுது.
    இ) எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் திருச்சபையை ஏன் நிறுவினார்?
    ஈ) இக்னேஷியஸ்  லயோலாவின் பங்களிப்பு குறித்து எழுதுக.

  23. புவியியல்சார் கண்டுபிடிப்புகள்.
    அ) மாலுமி ஹென்றி என்பவர் யார்?
    ஆ) புவியியல்சார் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களை வரிசைசைப்படுத்து.
    இ) அமெரிக்காவில் உள்ளூர் மக்களின் அழித்தொத்தொழிப்புக்கு இட்டுச் சென்றது எது?
    ஈ) முக்கோண வர்த்தகம் என்றால் என்ன?

  24. 3 x 3 = 9
  25. ஆச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை  விவரி.

  26. கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துக்களை விவரி.

  27. 'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் - HIS - நவீன யுகத்தின் தொடக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Social Science - HIS - The Beginning of the Modern Age Model Question Paper )

Write your Comment