Important Question Part-VII

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    33 x 1 = 33
  1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

    (a)

    கொரில்லா

    (b)

    சிம்பன்ஸி

    (c)

    உராங் உட்டான் 

    (d)

    பெருங்குரங்கு

  2. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.

    (a)

    ஹோமோ ஹேபிலிஸ்

    (b)

    ஹோமோ எரக்டஸ்

    (c)

    ஹோமோ சேபியன்ஸ்

    (d)

    நியாண்டர்தால் மனிதன்

  3. தமிழகத்துக்கு அப்பால் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள  பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன

    (a)

    புலிகேசி

    (b)

    அசோகர்

    (c)

    சந்திரகுப்தர்

    (d)

    தனநந்தர்

  4. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.

    (a)

    கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

    (b)

    பிறைநிலப் பகுதி

    (c)

    ஸோலோ ஆறு

    (d)

    நியாண்டர் பள்ளத்தாக்கு

  5. சுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்

    (a)

    பிக்டோகிராபி

    (b)

    ஹைரோகிளிபிக்

    (c)

    சோனோகிராம்

    (d)

    க்யூனிபார்ம்

  6. சிந்துவெளி மக்கள் ‘இழந்த மெழுகு செயல்முறை’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _________  ஆகும்  

    (a)

    ஜாடி

    (b)

    மதகுரு அல்லது அரசன்

    (c)

    பறவை

    (d)

    நடனமாடும் பெண்

  7. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

    (a)

    புத்தர்

    (b)

    லாவோட்சே

    (c)

    கன்ஃபூசியஸ்

    (d)

    ஜொராஸ்டர்

  8. மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

    (a)

    தனநந்தர் 

    (b)

    சந்திரகுப்தர்

    (c)

    பிம்பிசாரர்

    (d)

    சிசுநாகர்

  9. புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.

    (a)

    கருவம்

    (b)

    வெளிக்கரு

    (c)

    கவசம்

    (d)

    மேலோடு

  10. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா ___________ கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

    (a)

    கோண்டுவானா

    (b)

    லொரேசியா

    (c)

    பாந்தலாசா

    (d)

    பாஞ்சியா

  11. எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்

    (a)

    எரிமலை வாய்

    (b)

    துவாரம்

    (c)

    பாறைக்குழம்புத் தேக்கம்

    (d)

    எரிமலைக் கூம்பு

  12. புவி அதிர்வு உருவாகும் புள்ளி _____________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    மேல்மையம்

    (b)

    கீழ்மையம்

    (c)

    புவி அதிர்வு அலைகள்

    (d)

    புவி அதிர்வின் தீவிரம்

  13. இயற்கை காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.

    (a)

    பதிவுகளால் நிரப்படுத்தல்

    (b)

    அரிப்பினால் சமப்படுத்துதல்

    (c)

    நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

    (d)

    ஏதுமில்லை

  14.  ________  ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்

    (a)

    துள்ளல்

    (b)

    வண்டல் விசிறி

    (c)

    டெல்டா

    (d)

    மலை இடுக்கு

  15. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்______ஆகும்

    (a)

    காற்றடி வண்டல்

    (b)

    பர்கான்

    (c)

    ஹமாடா

    (d)

    மணல் சிற்றலைகள்

  16. கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

    (a)

    ஆசியா

    (b)

    தக்காண பீடபூமி 

    (c)

    குலு பள்ளத்தாக்கு

    (d)

    மெரினா கடற்கரை

  17. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.

    (a)

    கீழடுக்கு

    (b)

    மீள் அடுக்கு

    (c)

    வெளியடுக்கு

    (d)

    இடையடுக்கு

  18. _______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

    (a)

    நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்

    (b)

    துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்

    (c)

    துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்

    (d)

    துருவ உயர் அழுத்த மண்டலம்

  19. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது

    (a)

    இடைப்பட்ட திரள் மேகங்கள்

    (b)

    இடைப்பட்ட படை மேகங்கள்

    (c)

    கார்படை மேகங்கள்

    (d)

    கீற்றுப்படை மேகங்கள்

  20. பருவக்காற்று என்பது ______ 

    (a)

    நிலவும் காற்று

    (b)

    காலமுறைக் காற்றுகள்

    (c)

    தலக்காற்று

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  21. _______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    அழுத்தம்

    (b)

    காற்று

    (c)

    சூறாவளி

    (d)

    பனி

  22. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை

    (a)

    சிறுகுழு ஆட்சி

    (b)

    மதகுருமார்களின் ஆட்சி

    (c)

    மக்களாட்சி

    (d)

    தனிநபராட்சி

  23. ஆபிரகாம் லிங்கன் _________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்

    (a)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    சோவியத் ரஷ்யா

    (d)

    இந்தியா

  24. எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது?

    (a)

    கிரேக்கம்

    (b)

    லத்தீன்

    (c)

    பாரசீகம்

    (d)

    அரபு

  25. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

    (a)

    நாடாளுமன்றம்

    (b)

    மக்கள்

    (c)

    அமைச்சர் அவை

    (d)

    குடியரசு தலைவர்

  26. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது

    (a)

    சமூகச் சமத்துவம்

    (b)

    பொருளாதார சமத்துவம்

    (c)

    அரசியல் சமத்துவம்

    (d)

    சட்ட சமத்துவம்

  27. Section - II

    10 x 2 = 20
  28. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.

  29. கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.

  30. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக

  31. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக

  32. மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?

  33. வளிமண்டல அடுக்குகள் யாவை?

  34. வெயிற்காய்வு என்றால் என்ன?

  35. சமவெப்பக் கோடுகள் என்றால் என்ன?

  36. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

  37. Section - III

    7 x 5 = 35
  38. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

  39. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு

  40. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு

  41. எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி

  42. காற்று படியவைத்தல் செயலினை விவரி.

  43. சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி

  44. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை? விவரி

  45. Section - IV

    1 x 10 = 10
  46. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  47. Section - V

    9 x 3 = 27
  48. தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.

  49. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.

  50. இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.

  51. கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன?

  52. வானிலைச் சிதைவு – வரையறு.

  53. குறுட்டு ஆறு என்றால் என்ன?

  54. ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக

  55. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் II - 2020  ( 9th Standard Social Science Tamil Medium Important Question All Chapter II 2020 )

Write your Comment