Important Question Part-VI

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    33 x 1 = 33
  1. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.

    (a)

    ஹோமோ ஹேபிலிஸ்

    (b)

    ஹோமோ எரக்டஸ்

    (c)

    ஹோமோ சேபியன்ஸ்

    (d)

    நியாண்டர்தால் மனிதன்

  2. தமிழகத்துக்கு அப்பால் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள  பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன

    (a)

    புலிகேசி

    (b)

    அசோகர்

    (c)

    சந்திரகுப்தர்

    (d)

    தனநந்தர்

  3. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
    அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
    ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
    இ) கூற்று சரி; காரணம் தவறு.
    ஈ) கூற்றும் காரணமும் தவறானவை .

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  4. கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
    காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
    கூற்று சரி; காரணம் தவறு.
    கூற்றும் காரணமும் தவறானவை.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  5. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _________ என்கிறோம்.

    (a)

    அழகெழுத்து

    (b)

    சித்திர எழுத்து

    (c)

    கருத்து எழுத்து

    (d)

    மண்ணடுக்காய்வு

  6. சுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்

    (a)

    பிக்டோகிராபி

    (b)

    ஹைரோகிளிபிக்

    (c)

    சோனோகிராம்

    (d)

    க்யூனிபார்ம்

  7. சிந்துவெளி மக்கள் ‘இழந்த மெழுகு செயல்முறை’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _________  ஆகும்  

    (a)

    ஜாடி

    (b)

    மதகுரு அல்லது அரசன்

    (c)

    பறவை

    (d)

    நடனமாடும் பெண்

  8. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

    (a)

    ஆங்கிலம்

    (b)

    தேவநாகரி

    (c)

    தமிழ்-பிராமி

    (d)

    கிரந்தம்

  9. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

    (a)

    புகளூர்

    (b)

    கிர்நார்

    (c)

    புலிமான்கோம்பை

    (d)

    மதுரை

  10. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

    (a)

    புத்தர்

    (b)

    லாவோட்சே

    (c)

    கன்ஃபூசியஸ்

    (d)

    ஜொராஸ்டர்

  11. மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

    (a)

    தனநந்தர் 

    (b)

    சந்திரகுப்தர்

    (c)

    பிம்பிசாரர்

    (d)

    சிசுநாகர்

  12. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

    (a)

    புத்தர்

    (b)

    மகாவீரர்

    (c)

    லாவோட்சே

    (d)

    கன்ஃபூசியஸ்

  13. பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _____________ .

    (a)

    புவிமேலோடு

    (b)

    கவசம்

    (c)

    கருவம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  14. டையஸ்ட்ரோபிசம் _____________ உடன் தொடர்புடையது

    (a)

    எரிமலைகள்

    (b)

    புவிஅதிர்ச்சி

    (c)

    புவித்தட்டு நகர்வு

    (d)

    மடிப்புகள் மற்றும் பிளவுகள்

  15. எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்

    (a)

    எரிமலை வாய்

    (b)

    துவாரம்

    (c)

    பாறைக்குழம்புத் தேக்கம்

    (d)

    எரிமலைக் கூம்பு

  16. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது

    (a)

    வானிலைச் சிதைவு

    (b)

    அரித்தல்

    (c)

    கடத்துதல்

    (d)

    படியவைத்தல்

  17. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்

    (a)

    பனியாறு

    (b)

    காற்று

    (c)

    கடல் அலைகள்

    (d)

    நிலத்தடி நீர்

  18. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை

    (a)

    சர்க்

    (b)

    மொரைன்

    (c)

    டிரம்லின்

    (d)

    எஸ்கர்

  19. ________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன

    (a)

    காற்று

    (b)

    பனியாறு

    (c)

    ஆறு

    (d)

    நிலத்தடி நீர்

  20. ________ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.

    (a)

    ஹீலியம்

    (b)

    கார்பன் – டை ஆக்சைடு

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    மீத்தேன்

  21. _______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

    (a)

    நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்

    (b)

    துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்

    (c)

    துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்

    (d)

    துருவ உயர் அழுத்த மண்டலம்

  22. அனைத்து வகை மேகங்களும் _______________ ல் காணப்படுகிறது

    (a)

    கீழடுக்கு

    (b)

    அயன அடுக்கு

    (c)

    இடையடுக்கு

    (d)

    மேலடுக்கு

  23. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது

    (a)

    இடைப்பட்ட திரள் மேகங்கள்

    (b)

    இடைப்பட்ட படை மேகங்கள்

    (c)

    கார்படை மேகங்கள்

    (d)

    கீற்றுப்படை மேகங்கள்

  24. _______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    அழுத்தம்

    (b)

    காற்று

    (c)

    சூறாவளி

    (d)

    பனி

  25. முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை

    (a)

    சிறுகுழு ஆட்சி

    (b)

    நாடாளுமன்றம்

    (c)

    மக்களாட்சி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  26. ஆபிரகாம் லிங்கன் _________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்

    (a)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    சோவியத் ரஷ்யா

    (d)

    இந்தியா

  27. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

    (a)

    நாடாளுமன்றம்

    (b)

    மக்கள்

    (c)

    அமைச்சர் அவை

    (d)

    குடியரசு தலைவர்

  28. Section - II

    10 x 2 = 20
  29. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?

  30. வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.

  31. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக

  32. சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.

  33. சுண்ணாம்பு பாறைப் பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?

  34. வெப்பத் தலைகீழ் மாற்றம் - சிறுகுறிப்பு வரைக

  35. கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?

  36. மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

  37. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

  38. Section - III

    7 x 5 = 35
  39. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

  40. ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு

  41. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு

  42. புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக

  43. நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி

  44. மேகங்களின் வகைகளை விவரி.

  45. இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிலைமைகளை விளக்குக

  46. Section - IV

    1 x 10 = 10
  47. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  48. Section - V

    9 x 3 = 27
  49. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறு.

  50. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.

  51. இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.

  52. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.

  53. ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக?

  54. குறுட்டு ஆறு என்றால் என்ன?

  55. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

  56. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் II 2020  (9th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter II 2020)

Write your Comment