" /> -->

Important Question Part-X

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  33 x 1 = 33
 1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

  (a)

  கொரில்லா

  (b)

  சிம்பன்ஸி

  (c)

  உராங் உட்டான் 

  (d)

  கிரேட் ஏப்ஸ் 

 2. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேன் நேரடி முன்னோர் ____________ ஆவர்.

  (a)

  ஹோமோ ஹேபிலிஸ்

  (b)

  ஹோமோ எரக்டஸ்

  (c)

  ஹோமோ சேபியன்ஸ்

  (d)

  நியாண்டர்தால் மனிதன்

 3. தமிழகத்துக்கு அப்பால் சே சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள  பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன

  (a)

  புலிகேசி

  (b)

  அசோகர்

  (c)

  சந்திரகுப்தர்

  (d)

  தனநந்தர்

 4. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.

  (a)

  கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

  (b)

  பிறைநிலப் பகுதி

  (c)

  ஸோலோ ஆறு

  (d)

  நியாண்டர் பள்ளத்தாக்கு

 5. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது

  (a)

  கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

  (b)

  கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு

  (d)

  கூற்றும் காரணமும் தவறானவை

 6. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________________ என்கிறோம்

  (a)

  லோகோகிராபி

  (b)

  பிக்டோகிராபி

  (c)

  ஐடியாகிராபி

  (d)

  ஸ்ட்ராட்டிகிராபி

 7. சுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்

  (a)

  பிக்டோகிராபி

  (b)

  ஹைரோகிளிபிக்

  (c)

  சோனோகிராம்

  (d)

  க்யூனிபார்ம்

 8. கூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
  காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

  (a)

  கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

  (b)

  கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு

  (d)

  கூற்றும் காரணமும் தவறானவை

 9. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

  (a)

  கரிகாலன்

  (b)

  முதலாம் இராஜராஜன்

  (c)

  குலோத்துங்கன்

  (d)

  முதலாம் இராஜேந்திரன்

 10. (i) பதிற்றுப்பத்து பாண்டி அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.
  (ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.
  (iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும், அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்.
  (iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.

  (a)

  (i) சரி 

  (b)

  (ii) மற்றும் (iii) சரி 

  (c)

  (iii) சரி 

  (d)

  (iv) சரி 

 11. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

  (a)

  புத்தர்

  (b)

  லாவோட்சே

  (c)

  கன்ஃபூசியஸ்

  (d)

  ஜொராஸ்டர்

 12. மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

  (a)

  தனநந்தர் 

  (b)

  சந்திரகுப்தர்

  (c)

  பிம்பிசாரர்

  (d)

  சிசுநாகர்

 13. (i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள். 
  (ii) மெகஸ்தனிஸ் எழுதிய 'இண்டிகா' என்னும் வரலாற்றுக் குறிப்பு மெளரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமுகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது. 
  (iii) ஒரே பேரரசைக்  கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மெளரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
  (iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார். 
   

  (a)

  (i)  சரி 

  (b)

  (ii) சரி 

  (c)

  (i) மற்றும் (ii) சரி 

  (d)

  (iii) மற்றும் (iv) சரி 

 14. புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்

  (a)

  கருவம்

  (b)

  கவசம்

  (c)

  புவி மேலோடு

  (d)

  உட்கரு

 15. புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும் 

  (a)

  மடிப்பு

  (b)

  பிளவு

  (c)

  மலை

  (d)

  புவிஅதிர்வு

 16. எரிமலைமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்

  (a)

  எரிமலை வாய்

  (b)

  துவாரம்

  (c)

  பாறைக்குழம்புத் தேக்கம்

  (d)

  எரிமலைக் கூம்பு

 17.  i. ஃபியூஜி மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்
  ii. கிளிமஞ்சாரோ மலைமலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.
  iii. தான்சான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்.

  (a)

  (i) உண்மையானது.

  (b)

  (ii) உண்மையானது.

  (c)

  (iii) உண்மையானது

  (d)

  (i), (ii) மற்றும் (iii) உண்மையானது

 18. கூற்று: பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்.
  காரணம்: புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி.

  (b)

  கூற்று சரி, காரணம் தவறு.

  (c)

  கூற்று தவறு, காரணம் சரி.

  (d)

  கூற்று, காரணம் இரண்டும் தவறு

 19. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது

  (a)

  வானிலைச் சிதைவு

  (b)

  அரித்தல்

  (c)

  கடத்துதல்

  (d)

  படியவைத்தல்

 20. இயற்கை காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்காகின்றோம்.

  (a)

  பதிவுகளால் நிரப்படுத்தல்

  (b)

  அரிப்பினால் சமப்படுத்துதல்

  (c)

  நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

  (d)

  ஏதுமில்லை

 21. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________

  (a)

  கடல் அலை அரித்தல்

  (b)

  ஆற்று நீர் அரித்தல்

  (c)

  பனியாறு அரித்தல்

  (d)

  காற்றின் படியவைத்தல்

 22. 1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
  2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
  3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

  (a)

  1, 2 மற்றும் 3ம் சரி

  (b)

  1, 2 சரி

  (c)

  1 மற்றும் 3ம் சரி

  (d)

  1 மட்டும் சரி

 23. வாக்கியம் : சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்
  காரணம்: நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது

  (a)

  வாக்கியம் சரி. காரணம் தவறு

  (b)

  வாக்கியம் தவறு. காரணம் சரி

  (c)

  வாக்கியம் மற்றும் காரணம் தவறு

  (d)

  வாக்கியம் மற்றும் காரணம் சரி

 24. நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவம் நோக்கிச் செல்ல செல்ல வெப்பம்_______________.

  (a)

  கூடுகிறது

  (b)

  மாற்றம் ஏதுமில்லை

  (c)

  குறைகிறது

  (d)

  நிலையாக இருக்கிறது

 25. _______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

  (a)

  சூரியன்

  (b)

  சந்திரன்

  (c)

  நட்சத்திரங்கள்

  (d)

  மேகங்கள்

 26. _______________ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

  (a)

  நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்

  (b)

  துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்

  (c)

  துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்

  (d)

  துருவ உயர் அழுத்த மண்டலம்

 27. பருவக்காற்று என்பது ______ 

  (a)

  நிலவும் காற்று

  (b)

  காலமுறைக் காற்றுகள்

  (c)

  தலக்காற்று

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 28. _______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  அழுத்தம்

  (b)

  காற்று

  (c)

  சூறாவளி

  (d)

  பனி

 29. ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை

  (a)

  தனி நபராட்சி

  (b)

  முடியாட்சி

  (c)

  மக்களாட்சி

  (d)

  குடியரசு

 30. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

  (a)

  சேரர்கள்

  (b)

  பாண்டியர்கள்

  (c)

  சோழர்கள்

  (d)

  களப்பிரர்கள்

 31. கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?

  (a)

  இந்தியா

  (b)

  பிரிட்டன்

  (c)

  கனடா

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 32. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு

  (a)

  கனடா

  (b)

  இந்தியா

  (c)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  (d)

  சீனா

 33. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது

  (a)

  சமூகச் சமத்துவம்

  (b)

  பொருளாதார சமத்துவம்

  (c)

  அரசியல் சமத்துவம்

  (d)

  சட்ட சமத்துவம்

 34. Section - II

  10 x 2 = 20
 35. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?

 36. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.

 37. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக

 38. ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.

 39. சுண்ணாம்பு பாறைப் பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?

 40. மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.

 41. வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல்முறைகளை – விளக்குக

 42. கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?

 43. மழைப் பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

 44. குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.

 45. Section - III

  7 x 5 = 35
 46. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

 47. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு

 48. சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக

 49. புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக

 50. நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி

 51. சூறாவளிகள் எவ்வாவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி

 52. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை? விவரி

 53. Section - IV

  1 x 10 = 10
 54. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
  அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
  ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
  இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
  ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
  உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

 55. Section - V

  9 x 3 = 27
 56. தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.

 57. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறு.

 58. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.

 59. புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?

 60. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் புவியின் உள்அமைப்போடு நேரடி தொடர்பு கொண்டுள்ளதா என்று வகைப்படுத்தி காரணம் கூறுக.
  அ) புவி அதிர்ச்சி நிகழ்வு
  ஆ) எரிமலைகள் 
  இ) புவியின் காந்தப்புலம் 
  ஈ) புவி ஈர்ப்பு விசை 
  உ) தோண்டி எடுக்கப்பட்ட பாறைகள் 
  ஊ) எரிகற்கள் 

 61. உயிரினச் சிதைவு என்றால் என்ன?

 62. வரையறு – அ) மொரைன் ஆ) டிரம்லின் இ) எஸ்கர்

 63. ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக

 64. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II 2019 -2020 (9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter II 2019-2020)

Write your Comment