" /> -->

Half Yearly Model Question

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  5 x 1 = 5
 1. ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவியுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2.1 இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளில் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்? 

  (a)

  இரண்டும் 

  (b)

  கம்பி-2

  (c)

  கம்பி-1

  (d)

  எதுவும் இல்லை 

 2. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

  (a)

  எலக்ட்ரான்களின் ஏற்பு

  (b)

  புரோட்டான்களின் ஏற்பு

  (c)

  எலக்ட்ரான்களின் இழப்பு

  (d)

  புரோட்டான்களின் இழப்பு

 3. சகப்பிணைப்பு ____________ மூலம் உருவாகிறது

  (a)

  எலக்ட்ரான் பரிமாற்றத்தின்

  (b)

  எலக்ட்ரான் பங்கீடு

  (c)

  ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு

 4. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் ஆரஞ்சில் உள்ள அமிலம் ______

  (a)

  சிட்ரிக் அமிலம்

  (b)

  அஸ்கார்பிக் அமிலம்

 5. மிருதுவான தசை காணப்படுவது

  (a)

  கர்ப்பப்பை

  (b)

  தமனி

  (c)

  சிறை

  (d)

  அவை அனைத்திலும்

 6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

  3 x 1 = 3
 7. எலக்ட்ரான்கள் ________ மின்னழுத்தத்திலிருந்து _________ மின்னழுத்தத்திற்கு இயங்கும்.

  ()

  அதிக, குறைந்த 

 8. மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி ________ ஆகும்.

  ()

  மின்கலன் / மின்னியற்றி 

 9. குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் ________ பகுதியில் உள்ளன.

  ()

  சுவாசக்குழாய், சிறுநீரகக்குழல், அண்டக்குழல் 

 10. III சரியா தவறா எனக் கூறுக: 

  2 x 1 = 2
 11. ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.

  (a) True
  (b) False
 12. எபிதீலிய திசு விலங்கு பாதுகாப்பு திசுவாகும்.

  (a) True
  (b) False
 13. பகுதி- 

  ஏதேனும் 15 வினாக்களுக்கு மட்டும்  விடையளி :

  6 x 2 = 12
 14. 25 கிராம் நீரை 0oC இருந்து 100oC க்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் கணக்கிடுக.அதனை கலோரியாக மாற்றுக.(நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் =4.18 j/goC)

 15. நெகிழி சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது,எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 16. காந்தப் பாய அடர்த்தி வரையறுக்க.

 17. மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.

 18. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

 19. நமது உடலில் கொழுப்பை சேமிக்கும் திசுவின் பெயர் என்ன?

 20. கட்டத்தில் விடுபட்ட இடங்களை நிரப்புக:

  செயல்முறை  கட்டம் I  கட்டம் II 
  பதங்கமாதல்    ஆவி 
  திண்மமாதல்    திடப்பொருள் 
    திடப்பொருள்  திரவப்பொருள் 
  உறைதல்  திரவப்பொருள்   
  குளிர்தல்    திரவப்பொருள் 
 21. கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க:

  தனிமம்  எலக்ட்ரான்களின் எண்ணிக்கை  துணைக் கூடுகளின் அணு அமைப்பு 
  7 7 1s22s22p3
  9F   9 1s2s2p
  11Na     
  17Cl    
  18Ar    
 22. கருத்து: மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
  காரணம்: சூரியக்கதிர்கள் வெப்பக் கதிவீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.

 23. கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.
  காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறு பாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம் 
  அ)கூற்று சரியானது,காரணம் கூற்றை விளக்குகிறது 
  ஆ)கூற்று தவறானது,ஆனால் காரணம் சரியானது 

 24. கூற்று:எபிதீலியம் மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு இடையே பொருட்கள் பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது.
  காரணம்:எபிதீலிய செல்களில் இரத்த நாளங்கள் இல்லை.
  a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
  c. கூற்று சரி ஆனால் காரணம் தவறு 
  d. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 25. வெப்பநிலை அளவீட்டை மாற்றுக
  i) 35°C ஐ பாரன்ஹீட் (°F) அளவீட்டிக்குரு மாற்றுக.
  ii) 14 °F ஐ 0C அ்ளவீட்டில் எழுதுக

 26. கம்பியொன்றின் குறுக்குவெட்டு பரப்பை 25 கூலூம் அளவிலான மின்னூட்டம் 50 வினாடி காலத்தில் கடந்து சென்றால் அதனால் விளையும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

 27. ஒரு வானொலிப்பெட்டியில் அது வீட்டின் முதன்மைச் சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.இது ஏற்று மின்மாற்றியா அல்லது இறக்கு மின்மாற்றியா?

 28. 5A மின்னோட்டம் பாயும் 50 செமீ நீளமுடைய ஒரு கடத்தியானது 2x 10-3 T வலிமையுடைய காந்த புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தி மீது செயல்படும் விசையை  கண்டுபிடிக்க.

 29. மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?

 30. எண்ம விதியை எடுத்துக்காட்டுடன் கூறுக 

 31. அமிலங்களின் பயன்கள் ஏதேனும் நான்கினை எழுதவும்.

 32. தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை? 

 33. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி,எவையேனும் மூன்றனை விளக்குக.

 34. விடையைக் கண்டுபிடி 
  1.எலக்ட்ரான் பரிமாற்றத்தால் உருவாகும் பிணைப்பு (8எழுத்துகள்).
  2.எலக்ட்ரான் ஏற்பு (5எழுத்துகள்).
  3.பிணைப்பில் ஈடுபடாத இரண்டு எலக்ட்ரான்கள் (4எழுத்துகள்).
  4.எலக்ட்ரான் நீக்கம் (8எழுத்துகள்)
  5. எலக்ட்ரான்கள் பங்கீடு செய்யப்படுவதால் உருவாகும் பிணைப்பு (7எழுத்துகள்)
  6.எட்டு எலக்ட்ரான்களைப் பற்றிக் கூறும் விதி(5எழுத்துக்கள்).

  அ  ய  னி  ப்  பி  ப்  பு  ஆ 
  ஃ  ஒ  ந்  எ  ர்  ய்  உ  க் 
  அ  டு  ச  கா  ஹ  ல  ப்  சி 
  ழ்  க்  ஷ்  ச  வி  னா மீ  ஜ 
  ஜ  க  ள்  ஓ  ஈ  ஏ   னே 
  ஹா  ம்  ரெ  த  னி  ணை  ஓ  ற் 
  ஆ  க் சி ஜ  னே  ற  ம்  ற 
  ப  இ  டா  ளை  ஞா  ஸ்  ஆ  ஒ 
  ச  க  ப்  பி  ணை  பு    டு 
  கா  டி  ந  ப்  ந்  ண  தி  க் 
  னீ  மா  எ  ண்  ம  தி  பா  க 
  வி  க்ஷி  ழ்   ய் இ  லா  பீ  ம்
 35. கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக 
  1.இது உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது 
  2.சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நிட்சியுடையது-
  3.பெளமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து 
  4சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய் 
   5.விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு.

 36. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக 

  1 2 3 4 5
  அ. கருப்பை நாளம்  கருக்குழல்  கர்ப்பப்பை  செர்விக்ஸ்  யோனி 
  ஆ.கருங்குழல்  செர்விக்ஸ்  யோனி  அண்டகம்  விந்துக்குழல் 
  இ.அண்டகம்  கருக்குழல்  கர்ப்பப்பை  யோனி  செர்விக்ஸ் 
  ஈகருப்பை நாளம் அண்டகம்  செர்விக்ஸ்  கர்ப்பப்பை  யோனி 
 37. பகுதி- 

  அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

  4 x 5 = 20
  1. அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.

  2. 2\(\Omega \) மற்றும் 5\(\Omega \) மின் தடைகள் கொண்ட இரு மின் தடையங்கள் தொடரிணைப்பில் உள்ளவாறு மின்சுற்று ஒன்றை வரைக. அதனுடன் பக்க இணைப்பில் உள்ளவாறு ஒரு 3\(\Omega \) மின்தடை கொண்ட மின்தடையத்தை இணைக்கவும்.

  1. ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.

  2. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக 

  1. ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளை விவரி.

  2. சல்பியூரிக் அமிலம் "வேதிப் பொருள்களின் அரசன் " என்றழைக்கப்படுகிறது ஏன்?

  1. ஆக்குத்திசுக்கள்  யாவை? பல்வேறு வகையான ஆக்குத்திசுகள் பரவியுள்ளதையும் மற்றும் அவற்றின் செயல்பாடுகளையும் விவரிக்க.

  2. சிறுநீரகத்தின் அமைப்பினையும்,சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு அறிவியல் அரையாண்டு தேர்வு கேள்வி வினா விடை ( 9th science half yearly questions )

Write your Comment