11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.

    (a)

    8%

    (b)

    2%

    (c)

    4%

    (d)

    6%

  2. m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?

    (a)

    \(\sqrt{{h}_{1}\over{h}_{2}}\)

    (b)

    \(\sqrt{{m}_{1}{h}_{1}\over{m}_{2}{h}_{2}}\)

    (c)

    \({{{m}_{1}}\over{{m}_{2}}}\sqrt{{{h}_{1}\over{h}_{2}}}\)

    (d)

    \({{m}_{1}\over{m}_{2}}\)

  3. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.

    (a)

    1

    (b)

    1 ஐ விடக் குறைவு

    (c)

    1 ஐ விட அதிகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  4. 4 m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல் _______.

    (a)

    mv2

    (b)

    \(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)

    (c)

    2mv2

    (d)

    4mv2

  5. திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது ______.

    (a)

    L

    (b)

    L/2

    (c)

    2L

    (d)

    \(\frac { L }{ \sqrt { 2 } } \)

  6. புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை _____.

    (a)

    எப்பொழுதும் சுழி 

    (b)

    எப்பொழுதும் நேர்குறி உடையது 

    (c)

    நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும் 

    (d)

    எப்பொழுதும் எதிர்க்குறி உடையது 

  7. வெப்ப நிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே  _____.

    (a)

    அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்

    (b)

    அதிகரிக்கும் மற்றும் குறையும் 

    (c)

    குறையும்  மற்றும் அதிகரிக்கும்

    (d)

    குறையும்  மற்றும் குறையும்  

  8. மேசை மீது வைக்கப்பட்ட சூடான தேநீர் சிறிது நேரத்தில் சூழலுடன் வெப்பச் சமநிலையை அடைகிறது. அறையில் உள்ள காற்று மூலக்கூறுகளை வெப்ப அமைப்பு என்று கருதினால் கீழ்கண்டவற்றுள் எக்கூற்று பொருத்தமானது.

    (a)

    \(\Delta \)U > O , Q = O ,

    (b)

    \(\Delta \)U > O , W < O ,

    (c)

    \(\Delta \)U > O , Q  > O ,

    (d)

    \(\Delta \)U = O , Q  > O ,

  9. வாயு மூலக்கூறுகளின் சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றல் பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்தது?

    (a)

    மோல்களின் எண்ணிக்கை மற்றும் வெப்பநிலை

    (b)

    வெப்பநிலையை மட்டும்

    (c)

    அழுத்தம் மற்றும் வெப்பநிலை

    (d)

    அழுத்தத்தை மட்டும்

  10. m நிறையுடன் இணைக்கப்பட்ட சுருள்வில்லானது செங்குத்தாக அலைவுறும்போது அதன் அலைவுநேரம் T ஆகும். அச்சுருளிவில்லானது இரு சமபாகங்களாக வெட்டப்பட்டு அவற்றுள் ஒன்றுடன் அதே நிறை தொங்கவிடப்பட்டுள்ளது அதன் செங்குத்து அலைகளின் அலைவுநேரம்_______.

    (a)

    \(T' =\sqrt2t \)

    (b)

    \(T' ={T\over \sqrt2}\)

    (c)

    \(T' =\sqrt{2t }\)

    (d)

    \(T' ={ \sqrt{T\over2}}\)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment