11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.

    (a)

    துகளின் திசைவேகம் மற்றும் வேகம் மாறிலி

    (b)

    துகளின் முடுக்கம் மற்றும் வேகம் மாறிலி

    (c)

    துகளின் திசைவேகம் மற்றும் முடுக்கம் மாறிலி

    (d)

    துகளின் வேகம் மற்றும் முடுக்கத்தின் எண்மதிப்பு மாறிலி

  2. மேசைமீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்? 

    (a)

    புவி, புத்தகத்தின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

    (b)

    புத்தகம், புவியின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

    (c)

    புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்துவிசை

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  3. k என்ற விசை மாறிலி கொண்ட  ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது _______.

    (a)

    \(\frac { 2 }{ 3 } k\)

    (b)

    \(\frac { 3 }{ 2 } k\)

    (c)

    3K

    (d)

    6K

  4. திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து கீழ்நோக்கி அமைதி நிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்______.

    (a)

    \(\sqrt { \frac { 4 }{ 3 } gh } \)

    (b)

    \(\sqrt { \frac { 10 }{ 7 } gh } \)

    (c)

    \(\sqrt { 2gh } \)

    (d)

    \(\sqrt { \frac { 1 }{ 2 } gh } \)

  5. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர், சென்றால் அவர் எடையானது_____.

    (a)

    அதிகரிக்கும் 

    (b)

    குறையும் 

    (c)

    மாறாது 

    (d)

    அதிகரித்து பின்பு குறையும் 

  6. கீழ்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?

    (a)

    நீளம் = 200 cm, விட்டம் 0.5 mm 

    (b)

    நீளம் = 200 cm, விட்டம் 1 mm 

    (c)

    நீளம் = 200 cm, விட்டம் 2 mm 

    (d)

    நீளம் = 200 cm, விட்டம் 3 mm 

  7. நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுதிறன் ______.

    (a)

    6.25%

    (b)

    20%

    (c)

    26.8%

    (d)

    12.5%

  8. மாறா வெப்பநிலையில் கொடுக்கப்பட்ட வாயு மூலக்கூறின் மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வு வளைகோட்டின் பரப்பு பின்வருவனவற்றுள் எதற்குச் சமமாகும்.

    (a)

    \(PV\over kT \)

    (b)

    \(kT\over PV\)

    (c)

    \(P\over NkT \)

    (d)

    PV

  9. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகைக்கெழு சமன்பாடு தடையுறு அலையியற்றியை குறிக்கும்?

    (a)

    \({d^2y\over dt^2}+y=0\)

    (b)

    \({d^2y\over dt^2}+\gamma{dy\over dt}+y=0\)

    (c)

    \({d^2y\over dt^2}+k^2y=0\)

    (d)

    \({dy\over dt^2}+y=0\)

  10. ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன், ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து 600 வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0k Hz. ஊஞ்சலில் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலில் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்_______.

    (a)

    2.027kHz

    (b)

    1.974kHz

    (c)

    9.74kHz

    (d)

    1.011kHz

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment