11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.

  2. கொடுக்கப்பட்ட வெக்டர் \(\overrightarrow{r}=2\hat{i}+3\hat{j}+5\hat{k}\) மற்றும் வெக்டர் \(\overrightarrow{F}=3\hat{i}-2\hat{j}+4\hat{k}\) ஆகியவற்றின் தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{\tau}=\overrightarrow{r}\times\overrightarrow{F }\) ஐக் காண்க.

  3. இருசக்கர வாகனங்களில் தனித்தனியே பயணம் செய்யும் இருவரில், ஒருவர் தரையைப் பொருத்து மாறா திசைவேகத்தில் பயணம் செய்கிறார். மற்றொருவர் தரையை பொருத்து \(\overrightarrow { a } \) என்ற முடுக்கத்துடன் பயணம் செய்கிறார். இவ்விரண்டு பயணிகளில் எந்தப் பயணி நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தலாம்?

  4. ஒரு பெட்டி 25 N விசையினால் 15 m இடப்பெயர்ச்சி ஏற்படுமாறு இழுக்கப்படுகிறது. விசைக்கும் இடப்பெயர்ச்சிக்கும் இடையே உள்ள கோணம் 30° எனில் விசையினால் செய்யப்பட்ட வேலையைக் காண்க.

  5. கீழ்கண்ட கூற்று தவறு எனக் காட்ட ஓர் உதாரணம் தருக "ஏதேனும் இரு விசைகள் ஒன்றிணைந்து ஒரே தொகுபயன் விசையாக ஒரு பொருளின் மீது செயல்படும் போது, விசை ஒரே விளைவைக் கொடுக்கும்".

  6. புவியின் விடுபடு வேகம் என்றால் என்ன?

  7. தகைவு மற்றும் திரிபு - வரையறு 

  8. நிலை மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

  9. வெப்பநிலையின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?

  10. ஒத்ததிர்வு விளக்குக. எடுத்துக்காட்டு தருக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Book back 2 Mark Questions with Solution Part - I)

Write your Comment