11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன?

 2. கொடுக்கப்பட்ட சார்பு x = A0 + A1t + A2 t2 இன் வகைக்கெழுவினை t ஐ பொறுத்துக் காண்க. இங்கு A0, A1 மற்றும் A2 ஆகியவை மாறிலிகள் ஆகும்.

 3. இருசக்கர வாகனங்களில் தனித்தனியே பயணம் செய்யும் இருவரில், ஒருவர் தரையைப் பொருத்து மாறா திசைவேகத்தில் பயணம் செய்கிறார். மற்றொருவர் தரையை பொருத்து \(\overrightarrow { a } \) என்ற முடுக்கத்துடன் பயணம் செய்கிறார். இவ்விரண்டு பயணிகளில் எந்தப் பயணி நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தலாம்?

 4. தொடக்கத்தில் ஓய்வில் உள்ள ஒரு பொருளின் மீது F = kx2 என்ற மாறும் விசை செயல்படுகிறது. பொருளானது x = 0 m முதல் x = 4 m வரை இடப்பெயர்ச்சி அடைய விசையினால் செய்யப்பட்ட வேலையைக் கணக்கிடுக. (மாறிலி k = 1 N m-2 எனக்கருதுக)

 5. எலக்ட்ரான் ஒன்று 9.1x 10-31 kg எனும் நிறையுடனும் 0.53 A ஆரத்துடனும் உட்கருவினை வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. எலக்ட்ரானின் கோண உந்தம் யாது? (எலக்ட்ரானின் திசைவேகம் v=2.2x 106ms-1)

 6. ஒவ்வொரு ,மாதமும் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் நடைபெறுவது இல்லை.ஏன்?

 7. ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக்கூறுக. 

 8. நிலை மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

 9. வாயுக்களின் வெப்ப இயக்கவிற் கொள்கையின் அடிப்படையில் நிலவிற்கு வளிமண்டலம் இல்லை என நிரூபி. (இங்கு k = 1.38 x 10-23 JK-1, மற்றும் வெப்பநிலை T = O0C = 273K).

 10. ஒத்த அதிர்வெண்ணும் வெவ்வேறான வீச்சுகளும் கொண்ட இரு சீரிசை இயக்கங்கள் x மற்றும் y அச்சுகளின் வழியே x = A sin (ωt + ψ) (x அச்சின் வழியாக) மற்றும் y = B sin ωt (y அச்சின் வழியாக) என்ற வீச்சுகளுடன் இயக்கமடைகிறது எனக் கொள்க.
  \({x^2\over A^2}+{y^2\over B^2}-{2xy\over AB}cosψ=sin^2ψ\)எனக் காட்டுக.
  a.ψ=0 b.ψ=π c.\(ψ={\pi\over2}\) d.\(ψ={\pi\over2}\) மற்றும் A=B e.\(ψ={\pi\over4}\)
  ஆகிய சிறப்பு நிகழ்வுகளையும் விவாதிக்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment