11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    5 x 5 = 25
  1. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரணடு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டரின் எண்மதிப்பு மற்றும் \(\overrightarrow{A}\) யைப் பொருத்து தொகுபயன் வெக்டரின் திசை ஆகியவற்றைக் காண்க.

  2. y = x2 என்ற சார்பினைக் கருதுக. "சார்பு எல்லை" கருத்தைப் பயன்படுத்தி x = 2 என்ற புள்ளியில் அதன் வகைக்கெழு \({dy\over dx}\) ஐக் காண்க.

  3. x- அச்சுத் திசையில் இயங்கும் துகளொன்றின் திசைவேகம் – நேரம் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் காண்க.

    அ) 0 முதல் 55 வினாடி கால இடைவெளியில் துகளின் இயக்கத்தினை விளக்கவும்.

  4. எறிபொருள் ஒன்று 10 m s–1 என்ற ஆரம்பத் திசைவேகத்துடன், கிடைத்தளத்துடன் \({\pi \over 4 }\)கோண அளவில் எறியப்படுகிறது. அதன் கிடைத்தளத் நெடுக்கத்தைக் கண்டுபிடி, அதே எறிபொருளை முன்னர் எறிந்தவாறே நிலவில் எறியும் போது அதன் கிடைத்தள நெடுக்கத்தில் ஏதேனும் மாற்றம் நிகழுமா? நிகழும் எனில் எவ்வகையான மாற்றம் என்று விளக்குக.
    (நிலவின் ஈர்ப்பு முடுக்கம் gநிலவு\({1 \over 6} g )\)

  5. படத்தில் காட்டியவாறு கிரிக்கெட் வீரர் பந்து ஒன்றினை மட்டையால் அடித்த பின்பு, அப்பந்து 30 m s–1 என்ற திசைவேகத்துடனும், 300 கோணத்திலும் பறந்து செல்கிறது. மைதானத்தின் எல்லையானது பந்தினை அடித்த கிரிக்கெட் வீரரிலிருந்து 75 m தொலைவில் உள்ளது. அப்பந்து மைதானத்தின் எல்லையை பறந்து சென்று கிரிக்கெட் வீரருக்கு ஆறு ரன்களைப் பெற்றுத்தருமா? (காற்றுத்தடையைப் புறக்கணிக்கவும் மற்றும் புவியீர்ப்பு முடுக்கம் g = 10 m s-2 எனக் கருதுக).

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Kinematics Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment