11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்க விதிகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. தரையில் கிடைத்தளமாக வைக்கப்பட்டுள்ள கம்பு (stick) ஒன்றிலிருந்து 10 m தொலைவில் உள்ள நபரால், 0.5 kg நிறைகொண்ட கல்லினை அக்கம்பில் படுமாறு வீசி ஏறியத் தேவைப்படும் சிறுமத் திசைவேகத்தைக் காண்க. (இயக்க உராய்வுக் குணகம் \({ \mu }_{ k }=0.7\) என்க).

  2. 100 kg நிறை உள்ள பொருள் 50 cm s-2 முடுக்கத்தில் இயங்குகிறதெனில், அப்பொருளின் மீது செயல்படும் விசையின் மதிப்பைக் காண்க.

  3. மரப்பெட்டியொன்று சாய்தளத்தின் மீது ஓய்வு நிலையில் உள்ளது. கோணம் (angle of inclination) 45° இல், மரப்பெட்டி சறுக்கத் தொடங்குகிறதெனில், அதன் உராய்வுக் குணகத்தைக் காண்க

  4. m1=5 kg மற்றும் m2=4 kg என்ற இரண்டு நிறைகள் மெல்லிய நீட்சியற்ற கயிற்றின் மூலம், உராய்வற்ற கம்பியின் வழியே படத்தில் காட்டியுள்ளவாறு தொங்க விடப்பட்டுள்ளன. அவை தானாக இயங்கும் போது ஒவ்வொரு நிறையின் மீதும் செயல்படும் முடுக்கத்தைக் காண்க. (g =10 m s-2)  

  5. 10 kg, 7 kg மற்றும் 2 kg நிறையுள்ள மூன்று கனச்செவ்வகப் பொருட்கள் ஒன்றை ஒன்றுத் தொடுமாறு உராய்வற்ற மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. 50 N விசையானது, கொடுக்கப்பட்ட நிறைகளில் கனமான நிறை மீது செயல் படுத்தப்படுகிறது எனில், அமைப்பின் முடுக்கத்தைக் கணக்கிடுக. 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்க விதிகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Laws of Motion Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment