12 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர் ____.

    (a)

    S.R. காஷ்யப்

    (b)

    P. மகேஸ்வரி

    (c)

    M.S. சுவாமிநாதன்

    (d)

    K.C. மேத்தா

  2. மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர் _____.

    (a)

    J.G.கோல்ரூட்டர்

    (b)

    G.B. அமிசி

    (c)

    E. ஸ்டிராஸ்பர்கர்

    (d)

    E. ஹேன்னிங்

  3. உறுதிச்சொல் – தொல்லுயிர் படிவுகளில் ஸ்போரோபொலினின் மகரந்தத்துகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கிறது.
    காரணம் – ஸ்போரோபொலினின்  இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது.

    (a)

    உறுதிச்சொல் சரி, காரணம் தவறு

    (b)

    உறுதிச்சொல் தவறு, காரணம் சரி

    (c)

    உறுதிச்சொல், காரணம் – இரண்டும் தவறு

    (d)

    உறுதிச்சொல், காரணம் – இரண்டும் சரி

  4. ஊடு கடத்தும் திசு காணப்படுவது ______.

    (a)

    சூலின் சூல்துளைப் பகுதி

    (b)

    மகரந்தச்சுவர்

    (c)

    சூலகத்தின் சூலகத்தண்டு பகுதி

    (d)

    சூலுறை

  5. AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் தாவரத்தின் பல்வேறு வகையான கேமீட்களை கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது

    (a)

    aaBB

    (b)

    AaBB

    (c)

    AABB

    (d)

    aabb

  6. பின்வருவனவற்றுள் எது பல்கூட்டு பாரம்பரியத்திற்கு உதாரணமாகும்?

    (a)

    மிராபிலஸ் ஜலாபா மலரின் நிறம்

    (b)

    ஆண் தேனீ உற்பத்தி

    (c)

    தோட்டப் பட்டாணியின் விதைக்கனியின் வடிவும்

    (d)

    மனிதர்களின் தோல் நிறம்

  7. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது

    (a)

    இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்

    (b)

    F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு

    (c)

    F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு

    (d)

    இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு

  8. ஒரு தாவரத்தில் மரபணுவாக்க விகிதம் ஓங்கு பண்புடைய புறத் தோற்றத்தினைத் தோற்றுவிக்குமேயானால் அது

    (a)

    பிற்கலப்பு

    (b)

    சோதனைக் கலப்பு

    (c)

    இருபண்புக் கலப்பு

    (d)

    சந்ததி வழித்தொடர் ஆய்வு

  9. பாரம்பரிய பட்டாணித் தாவரச் சோதனைகளில் மெண்டல் எதைப் பயன்படுத்தவில்லை?

    (a)

    மலரின் அமைவிடம்

    (b)

    விதையின் நிறம்

    (c)

    கனியின் நீளம்

    (d)

    விதையின் வடிவம்

  10. சோதனைக் கலப்பின் இரு பண்புக் கலப்பில் ஈடுபடும் முதல் மகவுச்சந்ததிகளில் அதிகப் பெற்றோரிய சந்ததிகள் மறுசேர்க்கையின் மூலம் உருவாக்கப்படுவது. இது எதைக் குறிக்கிறது?

    (a)

    இரு வேறுபட்டக் குரோமோசோம்களில்  காணப்படும் இரு மரபணுக்கள்

    (b)

    குன்றல்பகுப்பின் போது பிரிவுறாக் குரோமோசோம்கள்

    (c)

    ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற இரு மரபணுக்கள்

    (d)

    இரு பண்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களால் கட்டுப்படுத்த ப்படுவது

  11. ஓங்குத்தன்மை மறைத்தலின் விகிதமானது ______.

    (a)

    9:3:3:1

    (b)

    12:3:1

    (c)

    9:3:4

    (d)

    9:6:1

  12. மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக , பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.

    (a)

    50:50

    (b)

    7 :1: 1:7

    (c)

    96.4: 3.6

    (d)

    1 :7 :7 :1

  13. கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
    காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ரான்களை அயனியாக்க  இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி.

    (b)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (c)

    கூற்று தவறு. காரணம் சரி.

    (d)

    கூற்று மற்றும் காரணம் தவறு

  14. பிளாஸ்மிட் என்பது _____.

    (a)

    வட்டவடிவ புரத மூலக்கூறுகள் 

    (b)

    பாக்டீரியாவினால் தேவைப்படுவது 

    (c)

    நுண்ணிய பாக்டீரியங்கள் 

    (d)

    உயிரி எதிர்ப் பொருளுக்கு தடுப்பை வழங்க 

  15. மரபணுப் பொறியியல் ______.

    (a)

    செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்.

    (b)

    ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல் 

    (c)

    நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி 

    (d)

    ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல் 

  16. pBR 322, BR என்பது ______.

    (a)

    பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு 

    (b)

    பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம் 

    (c)

    பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் 

    (d)

    பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ் 

  17. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை.

    (a)

    மின்னற்பிரிப்பு 

    (b)

    ஒற்றியெடுப்பு முறை 

    (c)

    கதிரியக்க புகைப்படமுறை 

    (d)

    பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை 

  18. Bt பருத்தியின் சில பண்புகள் ______.

    (a)

    நீண்ட நார்களும், அசுவுனி பூச்சிகளுக்கு (aphids) எதிர்ப்புத் திறன்.

    (b)

    நடுத்தரமான அறுவடை, நீண்ட நார்கள் மற்றும் வண்டுகளுக்கான எதிர்ப்புத் தன்மை 

    (c)

    அதிக விளைச்சல் மற்றும் டிப்தீரியன் பூச்சிகளைக் கொல்லக் கூடிய படிக நச்சுப் புரத உற்பத்தி 

    (d)

    அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புதிறன் 

  19. நுண்பெருக்கம் இதை உள்ளடக்கியது 

    (a)

    நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

    (b)

    சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

    (c)

    நுண்வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

    (d)

    நுண் மற்றும் பெரு வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழி அற்ற முறையில் பெருக்கமடையச் செய்தல் 

  20. பெருமளவில் உயிரி நேர்மை இழப்பைத் தடுப்பது 

    (a)

    உயிரிகாப்புரிமம் 

    (b)

    உயிரிஅறநெறி 

    (c)

    உயிரி பாதுகாப்பு 

    (d)

    உயிரி எரிபொருள் 

  21. தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது ______.

    (a)

    நிக்கோட்டினிக் அமிலம் 

    (b)

    கோபால்ட்டஸ் குளோரைடு 

    (c)

    EDTA 

    (d)

    அகார் 

  22. கீழ்கண்ட கூற்றினைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
    i) பசலை மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்ற மண் வகையாகும். இது வண்டல் மண், மணல் மற்றும் களிமண் ஆகியவை கலந்த கலவையாகும்.
    ii) அதிகளவு லிக்னின் மற்றும் செல்லுலோஸ் கொண்ட கரிம மட்குகளில் மட்டும் செயமுறைகள் மெதுவாக நடைபெறுகிறது.
    iii) நுண் துளைகளுக்குள் காணப்படும் நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் ஒரே நீராகும்.
    iv) நிழல் விரும்பும் தாவரங்களின் செயல் மையத்தில் அதிகளவு பசுங்கணிகங்களிலும், குறைவான அளவு பச்சையம் a மற்றும் b ஆகியவற்றிலும் மற்றும் இலைகள் மெல்லியதாகவும் காணப்படுகின்றன.

    (a)

    i, ii மற்றும் iii மட்டும் 

    (b)

    ii, iii மற்றும் iv மட்டும் 

    (c)

    i, ii மற்றும் iv மட்டும் 

    (d)

    ii மற்றும் iii மட்டும்

  23. கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது. 

    (a)

    புவியீர்ப்பு நீர் 

    (b)

    வேதியியல் பிணைப்பு நீர் 

    (c)

    நுண்புழை நீர் 

    (d)

    ஈரப்பத நீர் 

  24. தாவர வளர்ச்சியில் பூஞ்சை வேர்கள் எதை ஊக்குவிக்கின்றன?

    (a)

    தாவர வளர்ச்சி ஒழுங்குப்படுத்திகளாக செயல்படுகிறது.

    (b)

    கனிம அயனிகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.

    (c)

    இது வளி மண்டல நைட்ரஜன் பயன்படுத்துவதில் துணைபுரிகிறது.

    (d)

    தாவரங்களை நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கின்றது.

  25. நன்னீர் குளச் சூழலில் வாழும் வேரூன்றிய தற்சார்பு ஜீவிகள்?

    (a)

    அல்லி மற்றும் டைஃபா 

    (b)

    செரட்டோபில்லம் மற்றும் யூட்ரிக்குளேரியா 

    (c)

    உல்ஃபியா மற்றும் பிஸ்டியா 

    (d)

    அசோலா மற்றும் லெம்னா 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Biology (Botany) Subject Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment