12 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  2. கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
    உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
    காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

    (a)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (b)

    ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

    (d)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை

  3. ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம் _____.

    (a)

    செர்டோலி செல்கள் 

    (b)

    லீடிக் செல் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    புரோஸ்டேட் சுரப்பி 

  4. பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?

    (a)

    விதைப்பை 

    (b)

    ஆண்குறி 

    (c)

    சிறுநீர் வடிகுழல் 

    (d)

    விந்தகம் 

  5. தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ்படலத்தின் அடிப்படை ______.

    (a)

    ஆலன்டாயிஸ் 

    (b)

    ஆம்னியான் 

    (c)

    கோரியான் 

    (d)

    கரு உணவுப்பை 

  6. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர் _____.

    (a)

    கோழை

    (b)

    சீம்பால்

    (c)

    லாக்டோஸ்

    (d)

    சுக்ரோஸ்

  7. ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை _____.

    (a)

    லீடிக் செல்கள்

    (b)

    ஹைபோதலாமஸ்

    (c)

    செர்டோலி செல்கள்

    (d)

    பிட்யூட்டரி சுரப்பி

  8. கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரியா பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.

    (a)

    கிரந்தி,வெட்டைநோய் மற்றும் கேன்டிடியாஸிஸ்

    (b)

    கிரந்தி,கிளாமிடியாஸிஸ், வெட்டைநோய் 

    (c)

    கிரந்தி,கொனோரியா டிரைகோமோனியாஸிஸ் 

    (d)

    கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ்,பெடிகுலோஸிஸ் 

  9. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?

    (a)

    அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்

    (b)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்

    (c)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்

    (d)

    அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்

  10. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
    கூற்று அ: இரப்பரால் செய்யப்பட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
    கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

    (a)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை.

    (c)

    கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு

    (d)

    கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை

  11. கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?

    (a)

    விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்

    (b)

    அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்

    (c)

    கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதை மற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.

    (d)

    கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது

  12. மனிதனின் ABO  இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது ____.

    (a)

    பல்கூட்டு அல்லீல்கள்

    (b)

    கொல்லி மரபணுக்கள்

    (c)

    பால் சார்ந்த மரபணுக்கள் 

    (d)

    Y – சார்ந்த மரபணுக்கள்

  13. கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?

    (a)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் ஓர் உயிரின தொகையில் காணப்பட்டால் அவை பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்படுகின்றன.

    (b)

    இயல்பான மரபணுக்கள் தீடீர்மாற்றம் அடைந்து பல அல்லீல்களை உருவாக்குகின்றன.

    (c)

    பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன.

    (d)

    பல்வேறு உயிரினத்தொகையில் இரட்டைமய உயிரிகள் இரண்டு அல்லீல்கள் மட்டுமே கொண்டுள்ளன.

  14. XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்

    (a)

    வேறுபட்ட இனச்செல் ஆண்

    (b)

    வேறுபட்ட இனச்செல் பெண்

    (c)

    ஒத்த இனச்செல் ஆண்

    (d)

    ஆ மற்றும் இ

  15. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

    (a)

    25%

    (b)

    50%

    (c)

    100%

    (d)

    75%

  16. டவுன்சின்ட்ரோம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகிறது?

    (a)

    20

    (b)

    21

    (c)

    4

    (d)

    23

  17. டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது ______.

    (a)

    சிறிய கருப்பை

    (b)

    வளர்ச்சியடையாத அண்டகங்கள்

    (c)

    வளர்ச்சியடையாத மார்பகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  18. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?

    (a)

    புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.

    (b)

    டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்

    (c)

    டிஎன்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.

    (d)

    வைரஸ்கள் உருமாற்றம் அடையும்

  19. தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?

    (a)

    இரட்டிப்பாதல்

    (b)

    படியெடுத்தல்

    (c)

    நகலாக்கம்

    (d)

    மொழிபெயர்த்தல்

  20. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.

    (a)

    படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்

    (b)

    படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்

    (c)

    நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்

    (d)

    இரட்டிப்பாதல், படியெடுத்தல்,மொழிபெயர்த்தல்

  21. புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?

    (a)

    டி.என்.ஏ இரட்டிப்பாதல் ஒற்றை மூலத்திலிருந்து துவங்கும்.

    (b)

    டி.என்.ஏ இரட்டிப்பாதல் அதன் மூலத்திலிருந்து இரு திசைகளில் நிகழும்

    (c)

    ஒரு நிமிடத்திற்கு 1 மில்லியன் கார இணைகள் என்ற வீதத்தில் இரட்டிப்பாதல் நிகழ்கிறது.

    (d)

    ஏராளமான பாக்டீரிய குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.

  22. மெசல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது ____.

    (a)

    கடத்துகை மாற்றம் (Transduction)

    (b)

    தோற்றமாற்றம் (Transformation)

    (c)

    டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்

    (d)

    பாதிபழையன காத்தல் முறை டி.என்.ஏ இரட்டிப்பாதல்

  23. 'இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்' என்ற நூலை வெளியிட்டவர் ______.

    (a)

    சார்லஸ் டார்வின்

    (b)

    லாமார்க்

    (c)

    வீஸ்மான்

    (d)

    ஹியூகோ டி விரிஸ்

  24. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

    (a)

    பரவல் முறை தகவமைப்பு

    (b)

    குவி பரிணாமம்

    (c)

    விரி பரிணாமம்

    (d)

    மாறுபாடுகள்

  25. எந்தக் காலம் ‘மீன்களின் காலம்’ என அழைக்கப்படுகிறது?

    (a)

    பெர்மியன்

    (b)

    டிரையாசிக்

    (c)

    டிவோனியன்

    (d)

    ஆர்டோவிசியன்

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Biology (Zoology) Subject Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment