அளவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செமீ எனில், அதன் பரப்பளவு ______.

    (a)

    10\(\sqrt {3}\) செமீ2

    (b)

    12\(\sqrt {3}\) செமீ2

    (c)

    15\(\sqrt {3}\) செமீ2

    (d)

    25\(\sqrt {3}\) செமீ2

  2. ஒரு கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு

    (a)

    4a2 சதுர அலகுகள்

    (b)

    6a2 சதுர அலகுகள்

    (c)

    2(l + b)h சதுர அலகுகள்

    (d)

    2(lb + bh + lh) சதுர அலகுகள்

  3. 10 செமீ × 6 செமீ × 5 செமீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு _____.

    (a)

    280 செமீ2

    (b)

    300 செமீ2

    (c)

    360 செமீ2

    (d)

    600 செமீ2

  4. இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதங்கள் _____.

    (a)

    4:6

    (b)

    4:9

    (c)

    6:9

    (d)

    16:36

  5. 5 மீ × 3 மீ × 2 மீ அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, 50 செ மீ × 30 செ மீ × 20 செ மீ அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?

    (a)

    1000

    (b)

    2000

    (c)

    3000

    (d)

    5000

  6. 5 x 2 = 10
  7. ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்திப் பின்வரும் பக்க அளவுகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
    (i) 10 செமீ, 24 செமீ, 26 செமீ
    (ii) 1.8 மீ, 8 மீ, 8.2 மீ

  8. ஒரு முக்கோண வடிவ நிலத்தின் பக்கங்கள் முறையே 22 மீ, 120 மீ மற்றும் 122 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கிடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு ₹ 20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.

  9. 180 செமீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.

  10. இரு சமபக்க முக்கோண வடிவிலுள்ள ஒரு விளம்பரப் பலகையின் சுற்றளவு 36 மீ மற்றும் அதன் ஒவ்வொரு சமபக்கத்தின் நீளம் 13 மீ ஆகும். அதற்கு வண்ணம் பூச ஒரு சதுர மீட்டருக்கு ₹ 17.50 வீதம் ஆகும் செலவைக் காண்க.

  11. ஒரு நிலமானது சாய்சதுர வடிவில் உள்ளது. நிலத்தின் சுற்றளவு 160 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 48 மீ எனில் அந்த நிலத்தின் பரப்பைக் காண்க.

  12. 5 x 3 = 15
  13. ஓர் அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 25 மீ, 15 மீ மற்றும் 5 மீ ஆகும். அறையின் தரை மற்றும் நான்கு சுவர்களையும் புதுப்பிக்க 1 சதுர மீட்டருக்கு ₹80 வீதம் செலவு ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க.

  14. 5 செமீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.

  15. ஒரு மீன் தொட்டியானது 3.8 மீ × 2.5 மீ × 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்தத் தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?

  16. ஒரு கனச்சசதுரத்தின் மொத்தப்பரப்பு 864 செமீ2 எனில் அதன் கன அளவைக் காண்க. 

  17. ஒரு கனச்சதுர வடிவ நீர்த் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க.

  18. 4 x 5 = 20
  19. ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

    வீட்டு மனையின் வடிவம்  சுற்றளவு பக்க நீளங்கள் 
    செங்கோண முக்கோணம் 120 மீ  30 மீ, 40 மீ, 50 மீ
    குறுங்கோண முக்கோணம் 120 மீ  35 மீ, 40 மீ, 45 மீ
    சமபக்க முக்கோணம் 120 மீ  40 மீ, 40 மீ, 40 மீ

    இதில் அதிக இடப்பரப்பு கொண்ட வீட்டு மனை எது என முடிவு செய்ய வாங்குபவருக்கு உதவி செய்க.

  20. AB = 8 செமீ, BC = 15 செமீ, CD = 12 செமீ, AD = 25 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் -90ஐக் கோணமாகவும் உடைய நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க.

  21. விவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறார் எனில் அந்த முழு நிலத்தின் பரப்பைக் காண்க.

  22. இனிப்புகள் வைக்கும் ஒரு பெட்டியானது 22 செமீ × 18 செமீ × 10 செமீ என்ற அளவில் உள்ளது. இதனை 1 மீ × 88 செமீ × 63 செமீ அளவுள்ள ஓர் அட்டைப் பெட்டியில் எத்தனை அடுக்கலாம்?

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - அளவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Mensuration Model Question Paper )

Write your Comment