நிகழ்தகவு மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    9 x 1 = 9
  1. 0-க்கும் மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    சமவாய்ப்பு மாறி  

    (b)

    முயற்சி 

    (c)

    எளிய நிகழ்ச்சி 

    (d)

    நிகழ்தகவு 

  2. நிகழ்தகவு  மதிப்பின் இடைவெளி_______.

    (a)

    -1 மற்றும்  +1

    (b)

    0 மற்றும்  1

    (c)

    0 மற்றும்  n 

    (d)

    0 மற்றும் \(\infty \)

  3. ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது? 

    (a)

    பூச்சியத்திற்குச் சமம்        

    (b)

    பூச்சியத்தை விடப் பெரியது    

    (c)

    1 இக்குச் சமம்   

    (d)

    பூச்சியத்தை விடப் சிறியது 

  4. A என்பது S-ன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A' என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P (A)′ இன் மதிப்பு ____.

    (a)

    1

    (b)

    0

    (c)

    1 - A 

    (d)

    1 - P(A) 

  5. பின்வருவனவற்றுள் எது நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது?

    (a)

    0

    (b)

    0.5

    (c)

    1

    (d)

    -1

  6. ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    முயற்சி 

    (b)

    எளிய நிகழ்ச்சி 

    (c)

    கூட்டு நிகழ்ச்சி 

    (d)

    விளைவு 

  7. ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு _____ என அழைக்கப்படுகிறது.  

    (a)

    நிகழ்ச்சி 

    (b)

    விளைவு 

    (c)

    கூறுபுள்ளி  

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை  

  8. ஒரு பகடையானது ______ இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை  என அழைக்கப்படுகிறது.              

    (a)

    சிறியதாக 

    (b)

    சீரானதாக 

    (c)

    ஆறு முகம் கொண்டதாக 

    (d)

    வட்டமாக 

  9. ''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து  ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில்  தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக  இருக்க நிகழ்தகவு.           

    (a)

    \(\frac { 1 }{ 10 } \)

    (b)

    \(\frac { 2 }{ 10 } \)

    (c)

    \(\frac { 3 }{ 10 } \)

    (d)

    \(\frac { 4 }{ 10 } \)

  10. 8 x 2 = 16
  11. ஒரு பகடை உருட்டப்படும்போது, 4ஐ விடப் பெரிய எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

  12. அணி I மற்றும் அணி II ஆகிய இரு அணிகளும் 10 முறை 20 ஓவர் மட்டைப் பந்து (cricket) ஆடுகின்றனர். ஒவ்வோர் ஆட்டத்திலும் அவர்கள் எடுத்த ஓட்டங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:.

    ஆட்டம்  1 2 3 4 5 6 7 8 9 10
    அணி I  200 122 111 88 156 184 99 199 121 156
    அணி II  143 123 156 92 164 72 100 201 98 157

    அணி I வெற்றி பெறுவதற்கான ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவு என்ன?

  13. 52 சீட்டுகள் கொண்ட  ஒரு சீட்டுக்கட்டிலிருந்து  ஒரு படச்சீட்டு  (அதாவது  இராசா, இராணி  அல்லது மந்திரி (jack)? ) தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?        

  14. ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

  15. இரண்டு சீரான நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும்போது, இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

  16. ஒரு கால்பந்தாட்டத்தில், ஓர் இலக்குக் காப்பாளரால் (Goal - keeper) 40 இல் 32 முயற்சிகளைத் தடுக்க இயலும் எனில், எதிரணியானது ஒரு முயற்சியை இலக்காக மாற்றுவதற்கான நிகழ்தகவு காண்க.

  17. ஒரு நிறுவனம் ஆறு மாதத்தில் 10000 மடிக்கணினிகளை உற்பத்தி செய்தது. அவற்றில் 25 மடிக்கணினிகள் குறைபாடு உடையனவாகக் கண்டறியப்பட்டன. சமவாய்ப்பு முறையில் ஒரு மடிக்கணினியைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடில்லாததாக இருக்க நிகழ்தகவு யாது?

  18. ஒரு வரிப்பந்து (tennis) விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 0.72 எனில் அவர் அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு என்ன?

  19. 1 x 5 = 5
  20. பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
    (i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
    (ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - நிகழ்தகவு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Probability Model Question Paper )

Write your Comment