நிகழ்தகவு மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. நிகழ்தகவு  மதிப்பின் இடைவெளி_______.

    (a)

    -1 மற்றும்  +1

    (b)

    0 மற்றும்  1

    (c)

    0 மற்றும்  n 

    (d)

    0 மற்றும் \(\infty \)

  2. ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    பட்டறி நிகழ்தகவு   

    (b)

    தொண்மை நிகழ்தகவு 

    (c)

    (1) மற்றும்  (2) இரண்டும் 

    (d)

    (1)வும்  அல்ல (2) வும் அல்ல 

  3. ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    முயற்சி 

    (b)

    எளிய நிகழ்ச்சி 

    (c)

    கூட்டு நிகழ்ச்சி 

    (d)

    விளைவு 

  4. ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு _____ என அழைக்கப்படுகிறது.  

    (a)

    நிகழ்ச்சி 

    (b)

    விளைவு 

    (c)

    கூறுபுள்ளி  

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை  

  5. ''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து  ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில்  தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக  இருக்க நிகழ்தகவு.           

    (a)

    \(\frac { 1 }{ 10 } \)

    (b)

    \(\frac { 2 }{ 10 } \)

    (c)

    \(\frac { 3 }{ 10 } \)

    (d)

    \(\frac { 4 }{ 10 } \)

  6. 10 x 2 = 20
  7. அணி I மற்றும் அணி II ஆகிய இரு அணிகளும் 10 முறை 20 ஓவர் மட்டைப் பந்து (cricket) ஆடுகின்றனர். ஒவ்வோர் ஆட்டத்திலும் அவர்கள் எடுத்த ஓட்டங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:.

    ஆட்டம்  1 2 3 4 5 6 7 8 9 10
    அணி I  200 122 111 88 156 184 99 199 121 156
    அணி II  143 123 156 92 164 72 100 201 98 157

    அணி I வெற்றி பெறுவதற்கான ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவு என்ன?

  8. 52 சீட்டுகள் கொண்ட  ஒரு சீட்டுக்கட்டிலிருந்து  ஒரு படச்சீட்டு  (அதாவது  இராசா, இராணி  அல்லது மந்திரி (jack)? ) தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?        

  9. ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

  10. ஓர் உற்பத்தியாளர் 7000 ஒளி உமிழ் இருமுனைய விளக்குகளை (LED lights) சோதனை செய்ததில் அவற்றில் 25 விளக்குகள் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டன. சம வாய்ப்பு முறையில் ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன?      

  11. ஒரு கால்பந்தாட்டத்தில், ஓர் இலக்குக் காப்பாளரால் (Goal - keeper) 40 இல் 32 முயற்சிகளைத் தடுக்க இயலும் எனில், எதிரணியானது ஒரு முயற்சியை இலக்காக மாற்றுவதற்கான நிகழ்தகவு காண்க.

  12. கொடுக்கப்பட்ட சுழலட்டையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்தகவைக் கணக்கிடுமாறு எவையேனும் இரு வினாக்களை உருவாக்குக
       

  13. ஒரு நிறுவனம் ஆறு மாதத்தில் 10000 மடிக்கணினிகளை உற்பத்தி செய்தது. அவற்றில் 25 மடிக்கணினிகள் குறைபாடு உடையனவாகக் கண்டறியப்பட்டன. சமவாய்ப்பு முறையில் ஒரு மடிக்கணினியைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடில்லாததாக இருக்க நிகழ்தகவு யாது?

  14. 16-20 வயதுக்குட்பட்ட 400 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 191 பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. சமவாய்ப்பு முறையில் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இல்லாமல் இருக்க நிகழ்தகவு என்ன?

  15. ஒரு வரிப்பந்து (tennis) விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 0.72 எனில் அவர் அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு என்ன?

  16. 1500 குடும்பங்களில் அவர்கள் வீட்டிலுள்ள பணிப்பெண்கள் (maids) பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

    பணிப் பெண்கள் வகை  பகுதி நேரம் மட்டும்  முழுநேரம் மட்டும்   இரண்டு வகை பணிப்பெண்கள்   
    குடும்பங்களின் எண்ணிக்கை  860 370 250

    சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும்போது, அக்குடும்பம் (i) இரு வகைப் பணிப்பெண்களும் வைத்திருக்க (ii) பகுதி நேரப் பணிப்பெண் வைத்திருக்க (iii) பணிப்பெண் வைத்திருக்காமல் இருக்க நிகழ்தகவு காண்க.

  17. 1 x 5 = 5
  18. பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
    (i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
    (ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - நிகழ்தகவு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Probability Model Question Paper )

Write your Comment