Term 3 - இயற்கணிதம் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. 2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது? 

    (a)

    ஒரேயொரு தீர்வு உண்டு

    (b)

    இரண்டு தீர்வுகள் உண்டு

    (c)

    தீர்வு இல்லை

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  2. கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு

    (a)

    \(x+\frac { 1 }{ x } =2\)

    (b)

    x(x −1) = 2

    (c)

    \(3x+5=\frac { 2 }{ 3 } \)

    (d)

    x3 − x = 5

  3. கீழ்க்காண்பனவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

    (a)

    ax + by + c = 0

    (b)

    0x + 0y + c = 0

    (c)

    0x + by + c = 0

    (d)

    ax + 0y + c = 0

  4. \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } ↑ \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) எனில், இங்கு a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு _______.

    (a)

    தீர்வு இல்லை 

    (b)

    இரண்டு தீர்வுகள்

    (c)

    ஒரு தீர்வு

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  5. \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =\frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \neq \frac { { c }_{ 1 } }{ { c }_{ 2 } } \) எனில், a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ________.

    (a)

    தீர்வு இல்லை

    (b)

    இரண்டு தீர்வுகள்

    (c)

    ஒரு தீர்வு

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  6. 3 x 2 = 6
  7. ஓர் ஈரிலக்க எண்ணையும் அதன் இலக்கங்களை மாற்றுவதால் கிடைக்கும் எண்ணையும் கூட்டினால் 110 கிடைக்கும். கொடுக்கப்பட்ட அந்த ஈரிலக்க எண்ணிலிருந்து 10 ஐக் கழித்தால் அது கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதலின் 5 மடங்கை விட 4 அதிகம் எனில், அந்த எண்ணைக் காண்க.

  8. புத்தகங்களை வாடகைக்கு வழங்கும் ஒரு நூலகம் முதல் இரண்டு நாள்களும் ஒரு  குறிப்பிட்ட நிலையான வாடகைக் கட்டணத்தையும், அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கும் அமுதா 6 நாட்களுக்கு ரூ 22 உம், சாகர் 4 நாள்களுக்கு ரூ 16 உம் வாடகையாகச் செலுத்தினால், ஒரு நாளுக்குரிய கட்டணத்தையும், குறிப்பிட்ட நிலையான கட்டணத்தையும் காண்க.

  9. 4 இந்தியர்கள் மற்றும் 4 சீனர்கள் சேர்ந்து 3 நாள்களில் ஒரு வேலையை முடிக்கிறார்கள். 2 இந்தியர்கள் மற்றும் 5 சீனர்கள் சேர்ந்து அதே வேலையை 4 நாள்களில் முடிக்கிறார்கள் எனில், இப்பணியைத் தனியாக ஒரு இந்தியர் எத்தனை நாள்களில் செய்வார்? ஒரு சீனர் தனியாக எத்தனை நாள்களில் செய்வார்?

  10. 3 x 3 = 9
  11. நீக்கல் முறையில் தீர்வு காண்க: 2x + 3y = 14 மற்றும் 3x - 4y =  4

  12. 2x − 3y = 7; (k + 2)x − (2k +1)y = 3(2k −1) என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்கு எண்ணற்ற தீர்வுகள் உண்டெனில் k இன் மதிப்பு காண்க.

  13. 8x + 5y = 9; kx +10y = 15 என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்குத் தீர்வுகள் இல்லையெனில் k இன் மதிப்பு காண்க.  

  14. 2 x 5 = 10
  15. ஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகளுக்கு வரைபடம் மூலம் தீர்வு காண்க y = 2x + 1; −4x + 2y = 2

  16. பிரதியிடல் முறையில் தீர்க்க
    (i) 2x − 3y = 7; 5x + y = 9
    (ii) 1.5x + 0.1y = 6.2; 3x − 0.4y = 11.2
    (iii)  x-ன் 10% + y-இன் 20%; 3x − y = 20
    (iv) \(\sqrt { 2 } \)x - \(\sqrt { 3 } \)y =1; \(\sqrt { 3 } \)x - \(\sqrt { 8 } \)y =0

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 3 - இயற்கணிதம் Book Back Questions ( 9th Maths - Term 3 Algebra Book Back Questions )

Write your Comment