Term 3 ஆயத்தொலை வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கீழ்க்காணும் புள்ளிகளை இணைத்து உருவாக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளிகளைக் காண்க.
    (i) (−2,3) மற்றும் (−6,−5)
    (ii) (8,−2) மற்றும் (−8,0)
    (iii) (a,b) மற்றும் (a+2b,2a−b)
    (iv) \((\frac {1}{-2},\frac {-3}{7})\)மற்றும் \((\frac {3}{-2},\frac {-11}{7})\).

  2. (3,4) மற்றும்(p,7) ஐ இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (x,y) ஆனது 2x + 2y +1 = 0 , இன் மேல் அமைந்துள்ளது எனில், p இன் மதிப்பு காண்க?

  3. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (2,4), (−2,3) மற்றும் (5,2) எனில் அந்த முக்கோணத்தின் முனைகளின் ஆயத்தொலைவுகளைக் காண்க.

  4. AB ஐ ஒரு நாணாக உடைய வட்டத்தின் மையம் O(0, 0).இங்கு புள்ளிகள் A மற்றும் B முறையே (8, 6) மற்றும் (10, 0) ஆகும். வட்டத்தின் மையத்திலிருந்து நாண் AB இக்கு வரையப்படும் செங்குத்து OD எனில் , OD இன் மையப்புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.

  5. புள்ளிகள் A(−5,4) , B(−1,−2) மற்றும் C(5,2) என்பன இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் உச்சிகள், இதில் B இல் செங்கோணம் அமைந்துள்ளது. மேலும் ABCD ஒரு சதுரம் எனில் D இன் ஆயத்தொலைவுகளைக் காண்க.

  6. முக்கோணம் DEF இன் பக்கங்கள் DE, EF மற்றும் FD களின் நடுப்புள்ளிகள் முறையே A(−3,6) , B(0,7) மற்றும் C(1,9) எனில், நாற்கரம் ABCD ஓர் இணைகரம் என நிறுவுக.

  7. A(4,−3) மற்றும் B(9,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.

  8. A(−5,11) மற்றும் B(4,−7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 7:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத்தொலைவுகளைக்  காண்க.

  9. A(−3,5) மற்றும் B(4,−9) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(2, -5) என்ன விகிதத்தில் பிரிக்கும்?

  10. A(−5,6) மற்றும் B(4,−3) ஆகிய புள்ளிகளை  இணைக்கும் கோட்டுத்துண்டை மூன்று சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆயத் தொலைவுகளைக் காண்க.

  11. பின்வரும் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.
    (i) (2,−4), (−3,−7) மற்றும் (7,2)
    (ii) (−5,−5), (1,−4) மற்றும் (−4,−2)

  12. ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் (4, -2) மற்றும் அதன் இரு முனைப்புள்ளிகள் (3,−2) மற்றும் (5,2) எனில் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.

  13. A(−1,3), B(1,−1) மற்றும் C(5,1) ஆகியன ஒரு முக்கோணத்தின் முனைப்புள்ளிகள் எனில் A வழியே செல்லக் கூடிய நடுக்கோட்டின் நீளத்தைக் காண்க.

  14. A(3,4), B(−2,−1) மற்றும் C(5,3) என்பன முக்கோணம் ABC இன் முனைப் புள்ளிகள். G ஆனது அதன் நடுக்கோட்டு மையம் மற்றும் BDCG ஆனது ஊர் இணைகரம் எனில் முனைப்புள்ளி D ன் ஆயத் தொலைவுகளைக் காண்க.

  15. முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் \((\frac {3}{2},5),(7,\frac {-9}{2})\) மற்றும் \((\frac {13}{2},\frac {-13}{2})\) எனில் அந்த முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க. 

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 3 ஆயத்தொலை வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths Term 3 Coordinate Geometry Two Marks Question Paper )

Write your Comment