Term 3 அளவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 600 மீ. அதன் பக்கங்கள் 5:12:13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவைக் காண்க.

  2. இரு சமபக்க முக்கோண வடிவிலுள்ள ஒரு விளம்பரப் பலகையின் சுற்றளவு 36 மீ மற்றும் அதன் ஒவ்வொரு சமபக்கத்தின் நீளம் 13 மீ ஆகும். அதற்கு வண்ணம் பூச ஒரு சதுர மீட்டருக்கு Rs.17.50 வீதம் ஆகும் செலவைக் காண்க.

  3. ஒரு முக்கோணம் மற்றும் இணைகரமானது சமமான பரப்பைக் கொண்டுள்ளன. அந்த முக்கோணத்தின் பக்கங்கள் முறையே 48 செ.மீ மற்றும் 52 செமீ ஆகும். மேலும் இணைகரத்தின் அடிப்பக்கம் 20 செ.மீ எனில் (i) ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு, (ii) இணைகரத்தின் உயரம் ஆகியவற்றைக் காண்க.

  4. AB = 13 செமீ, BC = 12 செமீ, CD = 9 செமீ, AD = 14 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் BD = 15 செமீ ஐ மூலைவிட்டமாகவும் கொண்ட நாற்கரம் ABCD இன் பரப்பைக்  காண்க. 

  5. ஒரு நிலமானது சாய்சதுர வடிவில் உள்ளது.நிலத்தின் சுற்றளவு 160 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தை அளவு 48 மீ எனில் அந்த நிலத்தின் பரப்பைக்  காண்க.

  6. ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்களின் அளவுகள் 34 மீ, 20 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 42 மீ எனில் அந்த இணைகரத்தின் பரப்பை க் காண்க.

  7. கீழ்க்காணும் அளவுகளைக் கொண்ட கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப் பரப்பைக் காண்க.
    (i) நீளம் = 20 செ மீ, அகலம் = 15 செ மீ, உயரம் = 8 செ மீ
    (ii) நீளம் = 16 மீ, அகலம் = 12 மீ, உயரம் = 8.5 மீ

  8. (i) ஒரு கனச்சதுரத்தின் மொத்த ப்பரப்பு 2400 செ மீ2 எனில், அதன் பக்கப்பரப்பைக் காண்க.
    (ii) ஒரு கனச்சதுரத்தின் ஒரு முகத்தின் சுற்றளவு 36 செ மீ எனில், அதன் மொத்த ப்பரப்பைக் காண்க.

  9. 6.5 மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரக் கொள்கலனின் மேற்புறம் முழுவதும் வண்ணம் பூசப்படுகிறது. இதற்கு வண்ணம் பூச வேண்டிய பரப்பு மற்றும் 1 சதுர மீட்டருக்கு Rs.24 வீதம் வண்ணம் பூச ஆகும் மொத்தச் செலவு ஆகியவற்றைக் காண்க.

  10. ஒரு தீப்பெட்டியின் அளவுகள் 6 செ மீ × 3.5 செ மீ × 2.5 செ மீ என உள்ளது. இதே அளவுகளைக் கொண்ட 12 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு கட்டின் கனஅளவைக் காண்க.

  11. ஒரு குளத்தின் நீளம், அகலம் மற்றும் ஆழம் முறையே 20.5 மீ, 16 மீ மற்றும் 8 மீ எனில், அந்தக் குளத்தின் கொள்ளவை லிட்டரில் காண்க.

  12. ஒரு கனச்செவ்வகத்தின் கன அளவு 1800 செ மீ3. அதன் நீளம் 15 செ மீ மற்றும் உயரம் 12 செ மீ எனில் அதன் அகலத்தைக் காண்க

  13. ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 726 செமீ2 எனில் அதன் கன அளவைக் காண்க

  14. ஒரு மூடிய கனச் செவ்வக மரப் பெட்டியின் வெளிப்புற அளவுகள் 30 செமீ × 25 செமீ × 20 செமீ ஆகும். அந்தப் பெட்டியைச் சுற்றிலும் உள்ள மரத்தின் தடிமன் 2 செமீ எனில் அந்தப் பெட்டியைச் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ள மரத்தின் கனஅளவைக் காண்க.

  15. 10 செமீ பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 3 அளவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Term 3 Mensuration Two Marks Questions Paper )

Write your Comment