" /> -->

Important Question Part-II

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

  Section - I

  25 x 1 = 25
 1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

  (a)

  வணிகம்

  (b)

  வேட்டையாடுதல்

  (c)

  ஓவியம் வரைதல்

  (d)

  விலங்குகளை வளர்த்தல்

 2. பரிணாமத்தின் வழிமுறை ________ 

  (a)

  நேரடியானது

  (b)

  மறைமுகமானது

  (c)

  படிப்படியானது

  (d)

  விரைவானது

 3. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

  (a)

  ஆசியா

  (b)

  ஆப்பிரிக்கா

  (c)

  அமெரிக்கா

  (d)

  ஐரோப்பா

 4. ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்

  (a)

  மண் மிகவும் வளமானதால்

  (b)

  சீரான கால நிலை நிலவுவதால்

  (c)

  போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்

  (d)

  பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

 5. இவற்றுள் எது தமிழக நகரம்?

  (a)

  ஈராக்

  (b)

  ஹரப்பா

  (c)

  மொகஞ்சதாரோ

  (d)

  காஞ்சிபுரம்

 6. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

  (a)

  மதுரை

  (b)

  காஞ்சிபுரம்

  (c)

  பூம்புகார்

  (d)

  ஹரப்பா

 7. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

  (a)

  சுற்றுதல்

  (b)

  பருவகாலங்கள்

  (c)

  சுழல்தல்

  (d)

  ஓட்டம்

 8. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

  (a)

  வியாழன்

  (b)

  சனி

  (c)

  யுரேனஸ்

  (d)

  நெப்டியூன்

 9. மிகச் சிறிய பெருங்கடல்

  (a)

  பசிபிக் பெருங்கடல்

  (b)

  இந்தியப் பெருங்கடல்

  (c)

  அட்லாண்டிக் பெருங்கடல்

  (d)

  ஆர்க்டிக் பெருங்கடல்

 10. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

  (a)

  பசிபிக் பெருங்கடல்

  (b)

  அட்லாண்டிக் பெருங்கடல்

  (c)

  இந்தியப்பெருங்கடல்

  (d)

  ஆர்க்டிக் பெருங்கடல்

 11. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

  (a)

  நீர் சந்தி

  (b)

  சிறுகடல்

  (c)

  தீவு

  (d)

  தீபகற்பம்

 12. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.

  (a)

  மணிப்பூர்

  (b)

  சிக்கிம்

  (c)

  நாகலாந்து

  (d)

  மேகாலயா

 13. _________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  (a)

  கேரளா 

  (b)

  தமிழ்நாடு

  (c)

  பஞ்சாப்

  (d)

  கர்நாடகா

 14. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

  (a)

   கேரளா

  (b)

  தமிழ்நாடு

  (c)

  மணிப்பூர்

  (d)

  கர்நாடகா

 15. 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________

  (a)

  இராஜாஜி

  (b)

  வ.உ.சி

  (c)

  நேதாஜி

  (d)

  ஜவஹர்லால் நேரு

 16. இளவழகி  சிறந்து விளங்கிய விளையாட்டு

  (a)

  செஸ்

  (b)

  மல்யுத்தம்

  (c)

  கேரம் 

  (d)

  டென்னிஸ்

 17. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?

  (a)

  14(1)

  (b)

  15(1)

  (c)

  16(1)

  (d)

  17(1)

 18. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

  (a)

  நாமக்கல்

  (b)

  சேலம்

  (c)

  கன்னியாகுமரி

  (d)

  சிவகங்கை

 19. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

  (a)

  சீனா

  (b)

  வடக்கு ஆசியா

  (c)

  மத்திய ஆசியா

  (d)

  ஐரோப்பா

 20. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

  (a)

  அங்கங்கள்

  (b)

  திரிபிடகங்கள்

  (c)

  திருக்குறள்

  (d)

  நாலடியார்

 21. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

  (a)

  ரிஷிபா

  (b)

  பார்சவ

  (c)

  வர்தமான

  (d)

  புத்தர்

 22. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

  (a)

  23

  (b)

  24

  (c)

  25

  (d)

  26

 23. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

  (a)

  அங்கம்

  (b)

  மகதம்

  (c)

  கோசலம்

  (d)

  வஜ்ஜி

 24. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

  (a)

  அர்த்த சாஸ்திரம்

  (b)

  இண்டிகா

  (c)

  முத்ராராட்சஷம்

  (d)

  இவை அனைத்தும்

 25. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

  (a)

  டாலமி

  (b)

  கௌடில்யர்

  (c)

  ஜெர்சக்ஸ்

  (d)

  மெகஸ்தனிஸ்

 26. Section - II

  25 x 2 = 50
 27. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?

 28. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மக்களுக்கு நாய் எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது?

 29. பழைய கற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.

 30. வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?

 31. பரிணாமம் என்றால் என்ன?

 32. பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.

 33. பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.

 34. லோத்தல் ஒரு கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதன் மூலம் நீ அறிவது என்ன?

 35. ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

 36. லோத்தல் கப்பல் கட்டும் தளமாக எவ்வாறு சிறந்து விளங்கியது?

 37. சிந்து வெளி மக்கள் மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்தினர்?

 38. தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் எது?

 39. மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களை குறிப்பிடுக.

 40. சாணக்கியர் பற்றி குறிப்பி வரைக.

 41. காஞ்சியில் பிறந்து வளர்ந்த சான்றோர்கள் யாவர்?

 42. கண்டம் என்றால் என்ன?

 43. வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?

 44. பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?

 45. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?

 46. நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.

 47. பாரபட்சம் என்றால் என்ன?

 48. ஒத்தக் கருத்து என்றால் என்ன?

 49. புதுப்பிக்க கூடிய வளங்கள் 

 50. மூன்றாம் நிலை செயல்பாடுகள் 

 51. உயிரற்ற வளங்களை வரையறு.

 52. Section - III

  15 x 5 = 75
 53. பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பதியளவில் எழுதுக.

 54. கோயில் நகரம் - குறிப்பு வரைக.

 55. புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?

 56. படத்தை பார்த்து விடையளிக்கவும்

  i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
  ii) பெரியதான கோள் எது?
  iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
  iv) செந்நிறக் கோள் எது?

 57. வேறுபாடறிக:
  பெருங்கடல்  -  கடல்

 58. நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.

 59. பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.

 60. ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.

 61. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

 62. வேதகாலப்  பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

 63. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

 64. பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.

 65. பெளத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபடுகளை எழுதவும்.

 66. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

 67. நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் -ஒப்பிடுக.

 68. Section - IV

  1 x 10 = 10
 69. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  டெல்லி
  சென்னை
  தமிழ்நாடு
  ஆந்திர பிரதேசம்
  கேரளா
  கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 6th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions All Chapter 2019-2020 )

Write your Comment