ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. பின்வரும் விவரங்களிருந்து X மற்றும் Y தொடர்களுக்கிடையே ஒட்டுறவுக் கெழுவினை கணக்கிடுக.

      X Y
    இணை சோடிகள் விவரங்களின் எண்ணிக்கை 15 15
    கூட்டுச் சராசரி 25 18
    திட்ட விலக்கம் 3.01 3.03
    சராசரியிலிருந்துப் பெறப்பட்ட விலக்கங்களின் வர்க்கங்களின் கூடுதல் 136 138

    X மற்றும் Y தொடர்களுக்கு முறையே அவற்றின் சராசரிகளிலிருந்து பெறப்பட்ட விலக்கங்களின் பெருக்கலிகளின் கூடுதல் 122 ஆகும்.

  2. பத்து மாணவர்கள் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தில் பெற்றத் தரங்கள் பின்வருமாறு

    வணிகவியல் 6 4 3 1 2 7 9 8 10 5
    கணக்குப் பதவியல் 4 1 6 7 5 8 10 9 3 2

    இரு பாடங்களில் மாணவர்களின் அறிவு எந்த அளவிற்கு தொடர்புடையது?

  3. ஒரே ஆண்டில் படித்த 10 மாணவர்கள் A மற்றும் B பாடங்களில் பெற்ற தரங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன. தர ஒட்டுறவுக் கெழுவினை கணக்கிடுக.

    A-ன் தரவரிசை 1 2 3 4 5 6 7 8 9 10
    B-ன் தரவரிசை 6 7 5 10 3 9 4 1 8 2
  4. தங்குமிடம் செலவு (X) உணவு மற்றும் பொழுது போக்கு செலவு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு அறியும் வகையில் ஆய்வு நடத்தப்பட்டு, கண்டறியப்பட்ட ஆய்வில் முடிவுகள் பின்வருமாறு:

      சராசரி திட்டவிலக்கம் 
    தங்குமிடம் செலவு ரூ.178 63.15
    உணவு மற்றும் பொழுது போக்கு செலவு ரூ.47.8 22.98
    ஒட்டுறவுக் கெழு 0.43

    தொடர்பு போக்குச் சமன்பாடு காண்க. மேலும், தங்குமிடம் செலவு ரூ.200 எனில் உணவு மற்றும் பொழுது போக்கு மீதான இயலக்கூடிய செலவை காண்க.

  5. கீழ்கண்ட அட்டவணை விற்பனை மற்றும் விளம்பரச் செலவுகளைக் காண்பிக்கிறது.

      விற்பனை விளம்பரச் செலவு
    (ரூ.கோடிகளில்)
    சராசரி 40 6
    திட்ட விலக்கம் 10 1.5

    ஒட்டுறவுக் கெழு r =0.9. தீர்மானிக்கப்பட்ட விளம்பரச் செலவு ரூ.10 கோடி எனில் விற்பனையை மதிப்பீடு செய்க.

  6. இரண்டு குறியீட்டு எண்களின் வரிசைகள் உள்ளன. P என்பது விலை குறியீட்டையும் மற்றும் S என்பது பொருட்களின் இருப்பையும் குறிக்கிறது. P-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே 100 மற்றும் 8 ஆகும். S-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே 103 மற்றும் 4. இரண்டு குறியீட்டு எண்களின் வரிசைக்கு இடையேயான ஒட்டுறவு கெழு 0.4. இவ்விவரங்களை கொண்டு S ன் மீது P ன் தொடர்புப் போக்குச் ச,சமன்பாடு மற்றும் P ன் S-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு ஆகியவற்றைக் காண்க.

  7. கீழேயுள்ள விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.

    X 1 2 3 4 5 6 7 8 9
    Y 9 8 10 12 11 13 14 16 15
  8. பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.
    ΣX=125, ΣY=100, ΣX2 =650, ΣY2 =436, ΣXY=520, N=25

  9. சமீபத்திய பழுது நீக்கு வேலைகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. எதிர்ப்பார்க்கப்பட்ட செலவு, அசல் செலவு பதியப்பட்டுள்ளது.

    மதிப்பிடப்பட்ட செலவு 30 45 80 25 50 97 47 40
    அசல் செலவு 27 48 73 29 63 87 39 45
  10. X மற்றும் Y என்பன தொடர்புபடுத்தப்பட்ட இணை மாறிகள். அவற்றின் 10 விவரங்களுக்கான முடிவுகள் ΣX=55, ΣXY=350, ΣX2 =385, ΣY=55, X ன் மதிப்பு 6. Y ன் மதிப்பை தீர்மானிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation And Regression Analysis Three Marks Questions )

Write your Comment