HSC Eleventh Standard Completed Study Materials

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 250

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    50 x 5 = 250
  1.  ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  2. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  3. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  4. மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.

  5. பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க -135

  6. கழிக்க: 11010112 – 1110102

  7. அடிப்படை வாயில்களை அதன் கோவை மற்றும் மெய்பட்டியலுடன் விளக்குக.

  8. NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.

  9. இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10

  10. பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: (-210) – (-610)

  11. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

  12. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக

  13. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  14. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  15. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  16. ஒரு பயன்பாட்டிற்க்கான இடைமுகத்தை வடிவமைக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டயவற்றைப் பட்டியலிடுக.

  17. கோப்பு மேலாண்மை- குறிப்பு வரைக.

  18. விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.

  19. விண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.

  20. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.

  21. உபுண்டுவின் (Ubuntu) சிறப்பு அம்சங்களைப் பட்டியலிடு.

  22. உபுண்டுவின் கூறுகளை விவரி அல்லது உபுண்டுவின் லான்ச்சரில் (Launcher) உள்ள பணிக்குறிகளை விவரி.

  23. ரைட்டரில் பக்க ஓரங்களை மாற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.

  24. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  25. பக்க இசைவின் வகைகளைப் பற்றி எழுதுக.

  26. ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக 

  27. உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.

  28. ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையின் பாகங்களை விவரி.

  29. ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?

  30. படங்களுக்கு எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?

  31. அட்டவணையில் உள்ள தரவுகளின் கூட்டுத்தொகையை வாய்ப்பாட்டு மூலம் எவ்வாறு செய்வது என்பதை பற்றி வழிகளை எழுதுக.

  32. முகவரி புத்தகத்தில் (Address Book) உள்ள அம்சங்களை விவரி

  33. காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக

  34. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக

  35. கீழ்க்கண்ட புலங்களைக் கொண்ட மாணவர் தரவுத்தளத்தை அட்டவணைத் தாளில் உருவாக்குக.வரிசை எண்,பெயர்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல்,மொத்தம்,சராசரி

  36. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

  37. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் வரைபடம் உருவாக்கும் படிநிலைகளை விளக்குக

  38. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?எடுத்துக்காட்டுடன் விளக்குக

  39. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்

  40. விற்பனையாளர்  தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்?

  41. சிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்?

  42. நிகழத்துதலில் உள்ள வரைகலை பொருள்கள் பற்றி (Graphics Objects) விரிவாக விவரிக்கவும்

  43. பல்லூடக கோப்புகளை நிகழ்த்துதலில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை விளக்குக

  44. நிகழத்துதலில் Master Page-ஐ பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டு விவரி? 

  45. இணைப்பு அமைப்பை வரையறு,திட்ட வரைபடத்தப் பயன்படுத்தி வேறுபட்ட இணைப்பு அமைப்புகளை விவரிக்கவும்

  46. கம்பித் தொழில் நுட்பத்தை வரைய தரவுப்பரிமாற்றத்தில் உள்ள பிணைக்கப்பட்ட ஊடகத்தின் பொதுவான வகைகளை விவரிக்கவும்.

  47. நாம் பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பத்தை குறிப்பிட்டு ஒவ்வொன்றாக விளக்கவும்

  48. இணையத்திலுள்ள சேவைகள் விவரி?

  49. மின்னஞ்சலின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி

  50. இணையப் பயன்பாட்டின் வழிக்காட்டிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினாக்கள் ( 11th Computer Technology All unit Important Questions )

Write your Comment