All Chapter 1 Marks

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 52
    Answer All The Following Question:
    52 x 1 = 52
  1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

    (a)

    மீட்டர் அளவு கோல்

    (b)

    மீட்டர் கம்பி

    (c)

    பிளாஸ்டிக் அளவுகோல்

    (d)

    அளவு நாடா

  2. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனது கண்ணின் நிலை ____________ இருக்க வேண்டும்.

    (a)

    அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக

    (b)

    அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

    (c)

    புள்ளிக்கு வலது புறமாக

    (d)

    வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

  3. பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு  உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு செல்லும்
    தொலைவு  : மீட்டர்  ; வீட்டிலிருந்து  பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?            

    (a)

    சென்டி மீட்டர் 

    (b)

    மீட்டர் 

    (c)

    மில்லிமீட்டர்  

    (d)

    கிலோ மீட்டர் 

  4. திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து  அலுவலகத்திற்கு  10.30 a .m க்கு  புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு  4.30P.m  க்கு  திரும்பி  வந்தாள்.இந்த காலத்தில்  அவளின்  இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின்   வீட்டிலிருந்து  அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?            

    (a)

    0

    (b)

    1/6 கி.மீ  

    (c)

    1 கி.மீ  

    (d)

    கூற இயலவில்லை 

  5. வேகத்தின் அலகு _______________

    (a)

    மீ

    (b)

    விநாடி 

    (c)

    கிலோகிராம்

    (d)

    மீ/வி

  6. இந்தியாவில் நிலையான அலகுகள் NPL, புதுதில்லி -ஆல் பராமரிக்கப்படுகிறது. NPL என்பது 

    (a)

    National Public Library 

    (b)

    North Physical  Library 

    (c)

    National Physical Laboratory 

    (d)

    National Public  Laboratory 

  7. ஒரு பொருளின் எல்லா பாகங்களும்  சமகால அளவில் ஒரே தொலைவு செல்லுமானால் அப்பொருளின் இயக்கம் 

    (a)

    நேர்மாறான இயக்கம் 

    (b)

    சுழற்சி இயக்கம் 

    (c)

    வட்ட இயக்கம் 

    (d)

    மாறுபடும் இயக்கம் 

  8. _______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.

    (a)

    தங்க மோதிரம்

    (b)

    இரும்பு ஆணி

    (c)

    ஒளி

    (d)

    எண்ணெய்த் துளி

  9. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல.

    (a)

    பாலுடன் காபி

    (b)

    எலுமிச்சைச் சாறு

    (c)

    நீர்

    (d)

    கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்

  10. கீழ்க்கண்டவற்றில் கலவை எது? 

    (a)

    ஆக்ஸிஜன்

    (b)

    கார்பன் டை ஆக்சைடு

    (c)

    ஹைட்ரஜன்

    (d)

    காற்று

  11. காற்றூட்டப்பட்ட குளிர் பானங்களில் காணப்படுவது,

    (a)

    திண்மம் - திண்மம்

    (b)

    திரவம்-திண்மம் 

    (c)

    வாயு - திரவம் 

    (d)

    திரவம் - திரவம்

  12. நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்

    (a)

    வேர்

    (b)

    தண்டு

    (c)

    இலை 

    (d)

    பூ

  13. ஆகாயத் தாமரையின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  14. முதன்மை வேர் மற்றும் பக்க வேர் காணப்படுவது _____ ல்.

    (a)

    வேற்றிட வேர்

    (b)

    ஆணி வேர்

    (c)

    சல்லி வேர்

    (d)

    விந்தணு வேர்

  15. தாவரங்கள் இலையின் அடிப்புறத்தில் வழியாக அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. ஆனால் பாலைவனப் பகுதியில் உள்ளத் தாவரம் நீராவிப்போக்கைக் குறைக்க வேண்டும். ஏனெனில் பாலைவனப்பகுதியில் நீர் பற்றாக்குறைக் காணப்படும். இந்த சூழலைச் சமாளிக்க தாவரத்தில் எம்மாதிரியான தகவமைப்புக் காணப்படுகிறது.

    (a)

    இவை அதிகக் கிளைகள் மற்றம் இலைகளைப் பெற்றுள்ளது

    (b)

    கோடை காலத்தில் இலைகளை இவை உதிர்ப்பதில்லை

    (c)

    நிலத்திற்கு மேற்பகுதியில் வேர்களைப் பெற்றுள்ளது

    (d)

    இவற்றில் இலைகள் முட்களாக மாற்றுரு பெற்றுள்ளது

  16. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது

    (a)

    உளவியல் 

    (b)

    உயிரியல் 

    (c)

    விலங்கியல் 

    (d)

    தாவரவியல் 

  17. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது

    (a)

    உணவு மற்றும் நீர்

    (b)

    நீர் மட்டும் 

    (c)

    காற்று உணவு மற்றும் நீர் 

    (d)

    உணவு மட்டும்

  18. மீன் மற்றும் நண்டு நீரில் வாழக்கூடிய விலங்குகள். இவை இரண்டுக்கும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன. 'X' என்பது எந்த ஒற்றுமையைக் குறிக்கிறது?
     

    (a)

    துடுப்புகள் நீந்த பயன்படுகிறது.

    (b)

    முதுகெலும்பு காணப்படுகிறது

    (c)

    கூர்மையான படகு போன்ற உடல் அமைப்பு

    (d)

    சுவாசிப்பதற்கு செவுள்கள் உள்ளன

  19. 'பாலைவனக் கப்பல்' என அழைக்கப்படுவது எது?

    (a)

    எருது

    (b)

    ஒட்டகம்

    (c)

    கழுதை

    (d)

    குதிரை

  20. நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.

    (a)

    கார்போஹைட்ரேட் 

    (b)

    கொழுப்பு 

    (c)

    புரதம் 

    (d)

    நீர் 

  21. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ________ 

    (a)

    அவற்றில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது.

    (b)

    அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

    (c)

    அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

    (d)

    அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

  22. நிரப்புக  ________________.

    (a)

    கொழுப்பு

    (b)

    வைட்டமின்

    (c)

    சர்க்கரை

    (d)

    உப்பு

  23. ORS கரைசல் கீழ்க்கண்ட நாட்களுக்கு மேல் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது.

    (a)

    12 மணி நேரம்

    (b)

    24 மணி நேரம்

    (c)

    36 மணி நேரம்

    (d)

    48 மணி நேரம்

  24. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

    (a)

    1980

    (b)

    1947

    (c)

    1946

    (d)

    1985

  25. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  26. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

    (a)

    வேகமாக நகரத் தொடங்கும்

    (b)

    ஆற்றலை இழக்கும்

    (c)

    கடினமாக மாறும்

    (d)

    லேசாக மாறும்

  27. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

    (a)

    இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

    (b)

    இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

    (c)

    நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

    (d)

    இரண்டின் வெப்பநிலையும் உயரும்

  28. மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

    (a)

    மின்மாற்றி

    (b)

    மின்உற்பத்தி நிலையம்

    (c)

    மின்சாரக் கம்பி

    (d)

    தொலைக்காட்சி

  29. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

    (a)

    வெள்ளி

    (b)

    மரம்

    (c)

    அழிப்பான்

    (d)

    நெகிழி

  30. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  31. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    இயற்கையான மாற்றம்

    (d)

    மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

  32. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

    (a)

    78%

    (b)

    21%

    (c)

    0.03%

    (d)

    1%

  33. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

    (a)

    இலைத்துளை

    (b)

    பச்சையம்

    (c)

    இலைகள்

    (d)

    மலர்கள்

  34. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

    (a)

    சென்டி மீட்டர்

    (b)

    மில்லி மீட்டர்

    (c)

    மைக்ரோ மீட்டர்

    (d)

    மீட்டர்

  35. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

    (a)

    செல்சுவர்

    (b)

    சைட்டோபிளாசம்

    (c)

    உட்கரு(நியூக்ளியஸ்)

    (d)

    நுண்குமிழ்கள்

  36. மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் _________ 

    (a)

    ஆக்சிஜன்

    (b)

    சத்துப் பொருள்கள்

    (c)

    ஹார்மோன்கள்

    (d)

    இவை அனைத்தும்

  37. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________ 

    (a)

    இரைப்பை

    (b)

    மண்ணீரல்

    (c)

    இதயம்

    (d)

    நுரையீரல்கள்

  38. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

    (a)

    சுட்டி

    (b)

    விசைப்பலகை

    (c)

    ஒலிபெருக்கி

    (d)

    விரலி

  39. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

    (a)

    ஊடலை

    (b)

    மின்னலை

    (c)

    வி.ஜி.ஏ.(VGA)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  40. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

    (a)

    இந்தியர்கள் 

    (b)

    ஐரோப்பியர்கள் 

    (c)

    சீனர்கள் 

    (d)

    எகிப்தியர்கள்

  41. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

    (a)

    பயன்படுத்தப்படுவதால்

    (b)

    பாதுகாப்பாக வைத்திருப்பதால்

    (c)

    சுத்தியல் தட்டுவதால்

    (d)

    சுத்தப்படுத்துவதால்

  42. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

    (a)

    பனி ஆறுகள்

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    மற்ற நீர் ஆதாரங்கள்

    (d)

    மேற்பரப்பு நீர்

  43. வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

    (a)

    வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

    (b)

    அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

    (c)

    வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

    (d)

    அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

  44. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

    (a)

    விரைவாக கெட்டித்தன்மையடைய 

    (b)

    கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

    (c)

    கடினமாக்க 

    (d)

    கலவையை உருவாக்க 

  45. பீனால் என்பது ________ 

    (a)

    கார்பாலிக் அமிலம் 

    (b)

    அசிட்டிக் அமிலம் 

    (c)

    பென்சோயிக் அமிலம் 

    (d)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  46. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

    (a)

    குளம் 

    (b)

    ஏரி 

    (c)

    நதி 

    (d)

    இவை அனைத்தும்.

  47. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

    (a)

    மறுசுழற்சி 

    (b)

    மீண்டும் பயன்படுத்துதல் 

    (c)

    மாசுபாடு 

    (d)

    பயன்பாட்டைக் குறைத்தல் 

  48. இயற்கையான கொசு விரட்டி 

    (a)

    ஜாதிக்காய் 

    (b)

    மூங்கல்

    (c)

    இஞ்சி 

    (d)

    வேம்பு 

  49. இந்தியாவின் தேசிய மரம் எது?

    (a)

    வேப்பமரம் 

    (b)

    பலா மரம் 

    (c)

    ஆலமரம் 

    (d)

    மாமரம் 

  50. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

    (a)

    WINDOWS

    (b)

    MAC OS

    (c)

    Adobe Photoshop

    (d)

    இவை அனைத்தும் 

  51. ______என்பது ஒரு இயங்குதளமாகும்.

    (a)

    ANDROID

    (b)

    Chrome

    (c)

    Internet

    (d)

    Pendrive

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment