All Chapter 3 Marks

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 02:00:00 Hrs
Total Marks : 99
  Answer All The Following Question:
  33 x 3 = 99
 1. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?

 2. பருப்புடன் அதிக அளவில் சிறி காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை எவ்வாறு நீக்குவாய்?

 3. உணவுக்கு கலப்படம் என்றால் என்ன?

 4. மல்லிகைக்கொடி ஏன் பின்னு கொடி என அழைக்கப்படுகிறது?

 5. நில வாழிடம் மற்றும் நீர் வாழிடத்தை வேறுபடுத்துக.

 6. ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக.

 7. துருவ கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக.

 8. வலசை போகும் பறவைகள் பற்றி எழுதுக.

 9. குளிர்கால உறக்கம் என்றால் என்ன?

 10. வெப்பத்தினால் திடப் பொருள்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.

 11.   வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக்க.

 12. தொடரிணைப்பு ஒன்றிட்கு மின்சுற்றுப் படம் வரையவும்.

 13. கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா?விளக்கம் தருக .

 14. காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்காக காரணத்தை விவரிக்கவும்.

 15. விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்?விவரிக்கவும்.

 16. மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?

 17. பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?

 18. நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.

 19. செல் உயிரியலில் இராபர்ட் ஹீக்கீன் பங்களிப்பு பற்றி விளக்குக.

 20. மனித எலும்பு மண்டலத்தின் பணிகளை எழுதுக.

 21. கட்டுபடாத இயங்கு தசைக்கும் கட்டுபாட்டில் இயங்கும் தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.

 22. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.

 23. பள்ளி ஆய்வுகூடத்தில் உள்ள சில காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்திருப்பதாக அவற்றைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது. எந்த காரணங்களால் அவை தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும் மூன்று காரணங்களைக் கூறு.

 24. "நீர் சேமிப்பு" என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.

 25. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.

 26. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

 27. ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றனர். இதனால் அதிகளவில் உயிரிகழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். பண்புழு உரத்தின் நன்மைகளைப்பற்றி எடுத்துக்கூறவும்.

 28. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?

 29. உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

 30. எவையேனும் இந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

 31. பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?

 32. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.

 33. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்  என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment