விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. 22, 4, 2, 12, 16, 6, 10, 18, 14, 20, 8 என்ற தொடரின் D2 மற்றும் D6 காண்க.

  2. கீழ்க்காணும் புள்ளிவிவரங்களுக்கு Q1, Q3, D6 மற்றும் P50 ஆகியவற்றைக் காண்க.

    வரிசை எண் 1 2 3 4 5 6 7
    மதிப்பெண்கள் 20 28 40 12 30 15 50
  3. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.

    மதிப்பெண்கள் 0-10 10-20 20-30 30-40 40-50
    மாணவர்களின் எண்ணிக்கை 8 12 18 8 6
  4. பின்வரும் அட்டவணையில் உள்ள விவரங்களுக்கு கூட்டுச்சராசரி, பெருக்கல் சராசரி மற்றும் இசைச்சராசரி ஆகியவற்றை கணக்கிடுக. இச்சராசரிகளுக்கு இடையே உள்ள தொடர்புகளை காண்க.

    மதிப்பெண்கள் 0-10 10-20 20-30 30-40 40-50 50-60
    மாணவர்களின் எண்ணிக்கை 5 10 25 30 20 10
  5. பின்வரும் விவரங்களுக்கு சராசரி விலக்கத்தை அதன் சராசரியைக் கொண்டு காண்க.

    பிரிவு இடைவெளி 0-5 5-10 10-15 15-20 20-25
    அலைவெண் 3 5 12 6 4
  6. ஒன்று முதல் பத்து வரை குறிக்கப்பட்ட 10 சீட்டுகள் ஒருப் பெட்டியில் உள்ளன. பெட்டி நன்கு குலுக்கப்பட்டு, ஒரு சீட்டுச் சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டு 4-யை விடப் பெரிய எண் கொண்ட சீட்டு எனில், அதில் உள்ள எண் இரட்டைப்பட எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

  7. ஐந்து குழுக்களின் வருமானம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் சராசரியைப் பொறுத்து சராசரி விலக்கம் மற்றும் அதன் விலக்கக் கெழு காண்க.

    வருமானம் (ரூ) 400 4200 4400 4600 4800
  8. ஒரே இலக்கை துப்பாக்கி 1 மற்றும் துப்பாக்கி 2 ஆகியன சுடுகின்றன. சராசரியாக ஒரே நேரத்தில் துப்பாக்கி-1, 9 முறையும், துப்பாக்கி-2, 10 முறையும் சுடுகின்றன. இரண்டு துப்பாக்கிகளின் துல்லியத்தன்மை ஒன்று போல் அமைவதில்லை. சராசரியாக துப்பாக்கி-2 சுடுகின்ற 10 முறைகளில் 7 முறைகள் இலக்கின் மீது சுடப்படுகிறது. அப்படி சுடப்படும் நேரத்தில் இலக்கின் மீது ஒரு குண்டு சரியாக சுடப்படுகிறது. ஆனால் அது எந்தத் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது என்பது தெரியவில்லை. அந்த இலக்கானது துப்பாக்கி 2-ல் சுடப்படுவதற்கான நிகழ்தகவு காண்க.

  9. முதல் பையில் 3 சிவப்பு நிறப்பந்துகள் மற்றும் 4 நீல நிறப்பந்துகளும், இரண்டாவது பையில் 5 சிவப்பு நிறப்பந்துகள் மற்றும் 6 நீல நிறப்பந்துகளும் உள்ளன. ஏதேனும் ஒரு பையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பந்து சிவப்பு பந்து எனில், அப்பந்து இரண்டாவது பையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு யாது?

  10. ஒரு சீட்டுக்கட்டிலிருந்து, ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. அதன்பின் முதல் சீட்டு மீண்டும் சீட்டுக்கட்டில் சேர்க்கப்படாத நிலையில், மற்றொரு சீட்டு எடுக்கப்படுகிறது.
    (i) இரண்டும் ஏஸ் ஆக இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?
    (ii) இரண்டும் ஸ்பேட் ஆக இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Descriptive Statistics And Probability Three Marks Questions )

Write your Comment