நிதியியல் கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. ஒரு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வணிக கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தை விருதாக அளிக்க விரும்புகிறார்.அப்பதக்கத்திற்கான செலவு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.9,000 மற்றும் இத்தொகைக்கான கூட்டு வட்டி ஆண்டிற்கு 15% எனில்,தற்போது அவர் எவ்வளவு முதலீடு வைப்புத் தொகையாக அளிக்க வேண்டும்?

  2. ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனம் நெருக்கடியான சூழல்களில் தனது தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ஒரு நிதியை உருவாக்க விரும்புகிறது.ஒவ்வொரு மாதத்திற்கும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.18,000.இந்நிதிக்காக நிறுவனம் 15% கூட்டு வட்டியில்,முதலீடு செய்ய வேண்டிய தொகையைக் காண்க

  3. ஆண்டிற்கு 5% கூட்டு வட்டியில் தவணைப் பங்கீட்டுத் தொகை ரூ.50க்கான தொகையைக் காண்க

  4. ரூ.18 அதிக விலையில் உள்ள ரூ.100 மதிப்பைக் கொண்ட 325 பங்குகளின் சந்தை மதிப்பைக் காண்க

  5. ரூ.100 மதிப்பு கொண்ட ஒரு பங்கை சமமதிப்புக்கு கீழே ரூ.14-க்கு 500 பங்குகளை ஒரு நபர் வாங்குகிறார்.அவர் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு ?

  6. ரூ.25 முகமதிப்புள்ள 10% வீதம் பங்குகளின் மூலம் கிடைக்கும் மொத்த ஈவுத் தொகை ரூ.2000 எனில் பங்குகளின் எண்ணிக்கைக் காண்க

  7. ரூ.7 கழிவிற்கு ரூ.25 மதிப்புள்ள பங்குகள் கிடைக்குமெனில் 125 பங்குகள் வாங்குவதற்கு தேவைப்படும் தொகை எவ்வளவு?

  8. ரூ.20 மதிப்புள்ள 9% பங்கு வீதமுடைய பங்குகள் மூலம் கிடைக்கின்ற ஈவுத் தொகை ரூ.1,620 எனில்,வாங்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையைக் காண்க

  9. ரூ.100 மதிப்புள்ள 7% பங்குகள் ரூ.120 க்கு அல்லது 10% பங்குகள் ரூ.135 க்கு,இவற்றுள் எது சிறந்த முதலீடு?

  10. ரூ.140-ல் உள்ள 20% சரக்கு முதல் அல்லது ரூ.70-ல் உள்ள 10% சரக்கு முதல்,இவற்றுள் எது சிறந்த முதலீடு?

  11. ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி சேர்க்கப்படும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரூ.2000 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்த தொகையைக் காண்க  [log(1.1) = 0.0414 ; antilog(0.1656) = 1.464]

  12. பொருளியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார்.இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க.ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது

  13. பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.

  14. இயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)

  15. ரூ.80 க்கு 100 மதிப்புள்ள பங்கின் 7% ரூ.8,000 கோபால் என்பவர் முதலீடு செய்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பிறகு அந்தப் பங்குகளை. 1பங்கிற்கு ரூ.75 க்கிற்கு விற்கிறார். (வருமானம் உட்பட) மற்றும் ரூ 41-க்கு ரூ 75 மதிப்புள்ள பங்கின் 18% ல் முதலீடு செய்ய முன்வருகிறார் எனில்
    (i) முதல் வருடத்தில் அவருடைய ஈவுத் தொகை
    (ii) இரண்டாம் வருடத்தில் அவருடைய ஆண்டு வருமானம்
    (iii) அவருடைய அசல் மூலதனத்திற்கு அதிகரித்த சதவீதம் ஆகியவைகளைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - நிதியியல் கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Financial Mathematics Two Marks Questions )

Write your Comment