வகையீட்டின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. C(x)= 2x3+5x2-14x+21 என்ற செலவு சார்பின் சராசரி மாறாச் செலவானது

    (a)

    \(\frac { 2 }{ 3 } \)

    (b)

    \(\frac { 5 }{ x } \)

    (c)

    \(-\frac { 14 }{ x } \)

    (d)

    \(\frac { 21 }{ x } \)

  2. ஒரு நிறுவனத்தின் தேவை மற்றும் அதன் செலவுச் சார்பு முறையே p=2-x மற்றும் C =-2x2+2x+7 எனில்,இதன் இலாபச் சார்பானது

    (a)

    x2 + 7

    (b)

    x2 - 7

    (c)

    -x2+7

    (d)

    -x2-7

  3. x =2 -ல் x -ஜப் பொறுத்து y =2x2+5x -ன் உடனடி மாறு வீதம் 

    (a)

    4

    (b)

    5

    (c)

    13

    (d)

    9

  4. P(x) என்ற இலாபச் சார்பு பெருமத்தை அடைய தேவையான கட்டுப்பாடு

    (a)

    MR = MC

    (b)

    MR = 0

    (c)

    MC = AC

    (d)

    TR = AC

  5. f(x)= sin x என்ற சார்பின் மீப்பெரு மதிப்பானது

    (a)

    1

    (b)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (c)

    \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (d)

    \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  6. If u=x3+3xy2+y3 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு

    (a)

    3

    (b)

    6y

    (c)

    6x

    (d)

    2

  7. ஒரு நிறுவனம் லாபத்தை அடைவது 

    (a)

    மீப்பெரு புள்ளியில்

    (b)

    சமபாட்டுப் புள்ளியில்

    (c)

    தேக்கநிலைப் புள்ளியில்

    (d)

    சீரான புள்ளியில்

  8. R = 5000 அலகுகள்/வருடம் C1=20 பைசாக்கள் C3=ரூ.20 எனில் EOQ இன் மதிப்பு

    (a)

    5000

    (b)

    100

    (c)

    1000

    (d)

    200

  9. 10 x 2 = 20
  10. x=2p2-5p+1என்ற அளிப்புச் சார்புக்கு அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க

  11. p =3-ல் x-2p2+5 அளிப்பு சார்பின் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க

  12. p-ஐ அலகு விளையாகவும்,x-ஐ உற்பத்தி அளவாகவும் கொண்ட தேவைச் சார்பு p =400-2x-3x2 க்கு MR=\(p\left[ 1-\frac { 1 }{ \eta _{ d } } \right] \) எனக் காட்டுக

  13. ஒரு நிறுவனத்தின் தேவை மற்றும் செலவு சார்புகள் முறையே x =6000 - 30p மற்றும் C=72000 + 60x ஆகும்.இலாபம் பெருமத்தை அடையும்பொழுது உற்பத்தி அளவு மற்றும் விலையைக் காண்க

  14. f(x) = x3-3x2+4x, \(x\in R\)என்ற சார்பு R -ல் திட்டமாக கூடும் சார்பு என நிறுவுக

  15. x அலகுகள் கொண்ட ஒரு பொருளுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான சராசரிச் செலவுச் சார்பு AC =2x -11+\(\frac { 50 }{ x } \) .AC ஆனது கூடும் சார்பாக அமைவதற்கான உற்பத்தி அளவு (x) ஏற்க்கும் மதிப்புகளைக் காணக

  16. u = x2(y–x) + y2 (x–y) எனில் \(\frac { \partial u }{ \partial x } +\frac { \partial u }{ \partial y } =-2(x-y)^{ 2 }\) எனக் காட்டுக

  17. P =8L-2K+3K2-2L2+7KL என்ற உற்பத்திச் சார்பிற்கு K =3 மற்றும் L =1 என்ற மதிப்புகளின் மூலதனம் (K) மற்றும் (L) சார்ந்த இறுதிநிலை உற்பத்திகளைக் காண்க

  18. பின்வரும் சார்புக்கான தேவை நெகிழ்ச்சியைக்  காண்க :
    i) p =xex
    ii) p =xe-x
    iii) p =\({ 10e }^{ -\frac { x }{ 3 } }\)

  19. u =x3+3x2y2+y3 எனில்\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x\partial y } =\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)என்பதை சரிபார்க்க

  20. 4 x 3 = 12
  21. \(x=\frac { 20 }{ p+1 } \)என்ற தேவைச் சார்புக்கு p =3-ல் விலையைப் பொறுத்து தேவை நெகிழ்ச்சியை காண்க.மேலும் இது p =3-ல் மீள்த்தன்மை கொண்டதா என ஆராய்க

  22. x =\(\frac { p }{ p+5 } \) என்ற அளிப்பு விதிக்கு p =20-ல் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க.மேலும் விடைக்கு விளக்கம் தருக

  23. f(x)=x2-4x+6 என்ற சார்பு எந்தெந்த இடைவெளிகளில் திட்டமாகக் கூடும் எனக் காண்க

  24. u = log(x2+y2) எனில், \(\frac { \partial ^{ 2 }u }{ \partial x^{ 2 } } +\frac { \partial ^{ 2 }u }{ \partial y^{ 2 } } =0\)எனக்காட்டுக

  25. 2 x 5 = 10
  26. p = 50-3x என்ற தேவை விதியைக் கொண்டு தேவை நெகிழ்ச்சி,சராசரி வருவாய் மற்றும் இறுதிநிலை வருவாய்க்கு இடையேயுள்ள தொடர்பினைச் சரிபார்

  27. f(x)=2x3+9x2+12x+1 என்ற சார்பின் தேக்கநிலைப் புள்ளி மற்றும் தேக்கநிலை மதிப்பினைக் காண்க

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - வகையீட்டின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths- Applications of Differentiation Model Question Paper )

Write your Comment