வகையீட்டின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. x அலகுகள் கொண்ட ஒரு பொருளின் உற்பத்திக்கான மொத்த செலவு C ரூபாயில் C(x) = 50+4x+3\(\sqrt {x}\).எனில் ,9 அலகுகள் உற்பத்திக்கான இறுதி நிலைச் செலவு யாது?

  2. பின்வரும் தேவை மற்றும் அளிப்புச் சார்புகளைக் கொண்டு சமன்நிலை விலை மற்றும் சமன்நிலை அளவு காண்க
    தேவை x=\(\frac { 1 }{ 2 } \)(5-p) மற்றும் அளிப்பு  x= 2p-3

  3. \(p=(a-bx)^{ \frac { 1 }{ 2 } }\) என்ற தேவை x -ல் தேவை நெகிழ்ச்சி 1 எனும்போது x ன் மதிப்பை காண்க

  4. x =\(\frac { p }{ p+5 } \) என்ற அளிப்பு விதிக்கு p =20-ல் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க.மேலும் விடைக்கு விளக்கம் தருக

  5. P =\({ 10e }^{ -\frac { x }{ 2 } }\) என்ற தேவை விதிக்கு,தேவை நெகிழ்ச்சியைக் காண்க

  6. f(x)=4x3–6x2–72x+30 என்ற சார்பு எந்தெந்த இடைவெளிகளில் கூடும் அல்லது குறையும் சார்பு எனக் காண்க

  7. f(x)=x2+2x–5 என்ற சார்பின் தேக்கநிலைப் புள்ளி மற்றும் தேக்கநிலை மதிப்பினைக் காண்க

  8. u =\(\frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }+y^{ 2 } } } \) என்ற சார்பிற்கு ஆய்லரின் தேற்றத்தைச் சரிபார்க்க

  9. ஒரு நிறுவனத்தின் உற்பத்திச் சார்பு P=10L-0.1L2+15K-0.2K2+2K இங்கு L என்பது ஊதியம் மற்றும் K என்பது மூலதனத்தைக் குறிக்கிறது
    (i) ஊதியம் மற்றும் மூலதனம் ஒவ்வொன்றும் 10 அலகுகள் எனில் இறுதிநிலை உற்பத்திச் சார்புகளைக் கணக்கிடுக
    (ii) மூலதனத்தில் 10 அலகுகள் பயன்படுத்தப்பட்டால் ஊதியத்திற்கான உச்ச வரம்பைக் காண்க

  10. ஒரு நிறுவனத்தின் உற்பத்திச் சார்பு P= \({ 4L }^{ \frac { 3 }{ 4 } }K^{ \frac { 1 }{ 4 } }\) எனில்,மூலதனம் சார்ந்த இறுதி நிலை உற்பத்தி மற்றும் ஊதியம் சார்ந்த இறுதி நிலை உற்பத்தி ஆகியவற்றைக் காண்க.மேலும் \(L\frac { \partial P }{ \partial L } +K\frac { \partial P }{ \partial K } =P\)என நிரூபி

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - வகையீட்டின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Applications Of Differentiation Three Marks Questions )

Write your Comment