விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பொருளாதார வளர்ச்சியின் சராசரியைக் கணக்கிடும்பொழுது பயன்படுத்தப்படும் பொருத்தமான சராசரி?

    (a)

    நிறையிட்ட சராசரி

    (b)

    கூட்டுச் சராசரி

    (c)

    பெருக்கல் சராசரி

    (d)

    இசைச்சராசரி

  2. விவரங்களில் ஒரு உறுப்பு பூச்சியம் எனில், அவ்விவரங்களின் பெருக்கல் சராசரி

    (a)

    குறை எண்

    (b)

    மிகை எண்

    (c)

    பூச்சியம்

    (d)

    கணக்கிட இயலாது

  3. மைய போக்கின் சிறந்த அளவை என்பது

    (a)

    கூட்டுசராசரி

    (b)

    இசைச்சராசரி

    (c)

    பெருக்கல் சராசரி

    (d)

    இடைநிலை

  4. 1, 2, 3 .....n என்பது சராசரி \(\frac{6n}{11}\), எனில் n-ன் மதிப்பு

    (a)

    10

    (b)

    12

    (c)

    11

    (d)

    13

  5. A யும், B யும் ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்ச்சிகள் எனில்

    (a)

    P\((A\cap B)\)=0

    (b)

    P\((A\cap B)\)=1

    (c)

    P\((A\cup B)\)=0

    (d)

    P\((A\cup B)\)=1

  6. 3 x 2 = 6
  7. ஒரு நபர் மகிழ்வுந்தில் (Car) 3 நாட்கள் பயணிக்கிறார். நாள் ஒன்றுக்கு 480 கி.மீ தூரம் பயணிக்கிறார். முதல் நாள் அன்று மணிக்கு 48 கிமீ வேகத்தில் 10 மணி நேரம் பயணிக்கிறார். இரண்டாம் நாள் மணிக்கு 40 கிமீ வேகத்தில் 12 மணி நேரம் பயணிக்கிறார் மற்றும் கடைசி நாள் அன்று மணிக்கு 32 கிமீ வேகத்தில் 15 மணி நேரம் பயணம் செய்கிறார். அவர் பயணிக்கும் சராசரி வேகத்தை கணக்கீடுக.

  8. ஒரு பகடை உருட்டப்படும்பொழுது,
    (i) ஒரு பகா எண் பெறுவதற்கான நிகழ்தகவு காண்க
    (ii) மூன்று அல்லது மூன்றை விட பெரிய எண்ணைப் பெறுவதற்கான நிகழ்தகவு காண்க.

  9. நாளிதழ் வாசிப்பவர் கணக்கெடுப்பின்படி 30 வயதுக்குமேல் உள்ள ஆண் வாசிப்பாளர்கள் 0.30 மற்றும் 30 வயதுக்குக் கீழ் உள்ள ஆண் வாசிப்பாளர்கள் 0.20 விகிதம் என உள்ளது. 30 வயதுக்குக் கீழ் உள்ள வாசிப்பாளர்களின் விகிதம் 0.80. சமவாய்ப்பின்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆண் வாசிப்பாளர் 30 வயதுக்குக் கீழ் உள்ளவராய் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.

  10. 3 x 3 = 9
  11. 31 நபர்களின் எடைகள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் காண்க.

    எடை (பவுண்டில்) 130 135 140 145 146 148 149 150 157
    அலைவெண் 3 4 6 6 3 5 2 1 1
  12. பின்வரும் விவரங்களுக்கு சராசரி விலக்கத்தை அதன் சராசரியைக் கொண்டு காண்க.

    பிரிவு இடைவெளி 0-5 5-10 10-15 15-20 20-25
    அலைவெண் 3 5 12 6 4
  13. ஒன்று முதல் பத்து வரை குறிக்கப்பட்ட 10 சீட்டுகள் ஒருப் பெட்டியில் உள்ளன. பெட்டி நன்கு குலுக்கப்பட்டு, ஒரு சீட்டுச் சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டு 4-யை விடப் பெரிய எண் கொண்ட சீட்டு எனில், அதில் உள்ள எண் இரட்டைப்பட எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

  14. 2 x 5 = 10
  15. ஒரு சீரான பகடை இருமுறை உருட்டப்படுகிறது. முதல் முறை உருட்டப்படும் பொழுது ஒற்றைப்படை எண் பெறுவது எனும் நிகழ்வை A எனவும், இரண்டாம் முறை உருட்டப்படும்பொழுது இரட்டைப் படை எண் பெறும் நிகழ்வை B எனவும் கொண்டால், நிகழ்வுகள் Aயும், Bயும் ஒன்றை ஒன்று சாரா நிகழ்வுகளா என ஆராய்க?

  16. பின்வரும் விவரங்களுக்கு இடைநிலையைப் பொறுத்து சராசரி விலக்கத்தைக் காண்க.

    மதிப்பு 0-10 10-20 20-30 30-40 40-50 50-60
    அலைவெண் 6 7 15 16 4 2

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு Book Back Questions ( 11th Business Maths - Descriptive Statistics And Probability Book Back Questions )

Write your Comment