விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றுள் எது நிலை அளவை?

  (a)

  வீச்சு

  (b)

  முகடு

  (c)

  சராசரி விலக்கம்

  (d)

  நூற்றுமானம்

 2. 8 மற்றும் 18 ஆகியவற்றின் பெருக்கல் சராசரி

  (a)

  12

  (b)

  13

  (c)

  15

  (d)

  11.08

 3. 1, 2, 3 .....n என்பது சராசரி \(\frac{6n}{11}\), எனில் n-ன் மதிப்பு

  (a)

  10

  (b)

  12

  (c)

  11

  (d)

  13

 4. இடைநிலை =45 மற்றும் அதன் சராசரி விலக்க கெழு 0.25 எனில், இடைநிலையை பொறுத்த சராசரி விலக்கம்

  (a)

  11.25

  (b)

  180

  (c)

  0.0056

  (d)

  45

 5. ஒரு சோதனையின் கூறுவெளி S ={E1,E2, .....En} எனில் \(\overset { n }{ \underset { i=1 }{ \Sigma } } { P(E }_{ i })\)=

  (a)

  0

  (b)

  1

  (c)

  \(\frac{1}{2}\)

  (d)

  \(\frac{1}{3}\)

 6. 7 x 2 = 14
 7. கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு முதல் கால்மானம் மற்றும் மூன்றாம் கால்மானம் ஆகியவற்றை காண்க.
  2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22

 8. விமானம் ஒரு சதுரத்தின் நான்கு பக்கங்களின் வழியாக முறையே மணிக்கு 100 கிமீ, 200 கிமீ, 300 கிமீ மற்றும் 400 கிமீ பறக்கிறது. சதுரப்பக்கங்களின் மீது சுற்றி வரும் விமானத்தின் சராசரி விலை வேகத்தை காண்க.

 9. ஒரு பகடை இரு முறை உருட்டப்படுகிறது, அப்போது தோன்றும் எண்களின் கூடுதல் ஆறு என கண்டறியப்படுகிறது. குறைந்தது ஒரு முறையாவது 4 என்ற கிடைக்க நிபந்தனைக்குட்பட்ட நிகழ்தகவு என்ன?

 10. இரண்டு பெட்டிகளில் உள்ள பந்துகளின் விவரங்கள் பின்வருமாறு உள்ளன.

    வெள்ளை சிவப்பு கருப்பு
  கலன் 1 10 6 9
  கலன் 2 3 7 15

  ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் ஒரு பந்து எடுக்கப்படுகிறது.
  (i) இரண்டும் சிவப்புப் பந்தாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
  (ii) இரண்டும் ஒரே நிறமாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

 11. ஒரு பள்ளியில் பயிலும் 1000 பேர்களில், 450 பேர் மாணவிகள். 450 மாணவிகளில் 20% மாணவிகள் XI ஆம் வகுப்பில் பயலுகிறார்கள். 1000 பேர்களில் ஒருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவர், XI ஆம் வகுப்பில் உள்ள மாணவியாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?

 12. P(A) =\(\frac{3}{5}\) மற்றும் P(B)=\(\frac{1}{5}\) என்க. A, B என்பன சாரா நிகழ்வுகள் எனில் P(A\(\cap \)B)-ஐ காண்க.

 13. நாளிதழ் வாசிப்பவர் கணக்கெடுப்பின்படி 30 வயதுக்குமேல் உள்ள ஆண் வாசிப்பாளர்கள் 0.30 மற்றும் 30 வயதுக்குக் கீழ் உள்ள ஆண் வாசிப்பாளர்கள் 0.20 விகிதம் என உள்ளது. 30 வயதுக்குக் கீழ் உள்ள வாசிப்பாளர்களின் விகிதம் 0.80. சமவாய்ப்பின்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆண் வாசிப்பாளர் 30 வயதுக்குக் கீழ் உள்ளவராய் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.

 14. 7 x 3 = 21
 15. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு Q1, Q3, D8 மற்றும் P67 ஆகியவற்றைக் காண்க:

  பங்குகளின் அளவு 4 4.5 5 5.5 6 6.5 7 7.5 8
  அலைவெண் 10 18 22 25 40 15 10 8 7
 16. பின்வரும் விவரங்களுக்கு கூட்டுச்சராசரி, இசைச்சாரசரி மற்றும் பெருக்கல் சாரசரி ஆகியவற்றைக் காண்க. சராசரிகளுக்கு இடையேயான தொடர்பினை சரிபார்.

  X 5 15 10 30 25 20 35 40
  f 18 16 20 21 22 13 12 16
 17. B1, B2 மற்றும் B3 என்பன குமிழ்விளக்குகளை உடைய மூன்று பெட்டிகள் என்க. அவ்விளக்குகளில், சில விளக்குகள் குறையுடையன. பெட்டிகள் B1, B2 மற்றும் B3-ல் உள்ள குறையுடைய குமிழ்விளக்குகளின் விகிதாச்சாரங்கள் முறையே \(\frac{1}{2}\),\(\frac{1}{8}\) மற்றும் \(\frac{3}{4}\) என்க. மூன்று பெட்டிகளில், ஏதேனும் ஒரு பெட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குமிழ்விளக்கு குறையுடையது எனக் கண்டறியப்பட்டால், அந்த விளக்கு, பேட்டி B1-லிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவைக் காண்க.

 18. கீழ்காணும் விவரங்களுக்கு கால்மான விலக்கத்தையும் அதன் கெழுவையும் காண்க.

  வரிசை எண் 1 2 3 4 5 6 7
  மதிப்பெண்கள் 20 28 40 12 30 15 50
 19. ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு (முறையில் இரண்டு பந்துகள், ஒன்றின்பின் ஒன்றாக திருப்பி வைக்காத முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது எனில், இரண்டு பந்துகளும் கருப்பு நிறப்பந்துகளாக இருக்க நிகழ்தகவு காண்க.

 20. X என்பவர் 5-ல் 4 முறை உண்மைப் பேசுபவர். ஒரு பகடை உருட்டப்படுகிறது. கிடைத்த எண் 6 என்று திரு.X கூறுகிறார். உண்மையாகவே ஆறு விழுந்துள்ளதற்கான நிகழ்தகவு யாது?

 21. ஒரு சீட்டுக்கட்டிலிருந்து, ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. அதன்பின் முதல் சீட்டு மீண்டும் சீட்டுக்கட்டில் சேர்க்கப்படாத நிலையில், மற்றொரு சீட்டு எடுக்கப்படுகிறது.
  (i) இரண்டும் ஏஸ் ஆக இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?
  (ii) இரண்டும் ஸ்பேட் ஆக இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?

 22. 4 x 5 = 20
 23. கீழ்க்காணும் விவரங்களுக்கு மேல்கால்மானங்கள், கீழ்கால்மானங்கள், D4 மற்றும் P60 P75 ஆகியவற்றைக் காண்க.

  இடைவெளி 10-20 20-30 30-40 40-50 50-60 60-70 70-80
  அலைவெண் 12 19 5 10 9 6 6
 24. பின்வரும் விவரங்களுக்குக் கால்மான விலக்கக் கெழுவைக் காண்க.

  மதிப்பெண்கள் 10 20 30 40 50 60
  எண்ணிக்கை 4 7 15 8 7 2
 25. ஒரு துப்பாக்கி சுடும் போட்டியில் இலக்கைச் சரியாக சுடுவதற்கான நிகழ்தகவு A க்கு \(\frac{3}{4}\) B க்கு \(\frac{1}{2}\) மற்றும் C க்கு \(\frac{2}{3}\). அனைவரும் ஒரே நேரத்தில் இலக்கை நோக்கி சுடுகிறார்கள் எனில்,
  (i) மூவரும் இலக்கைச் சரியாகச் சுடுவதற்கான நிகழ்தகவு
  (ii) ஒருவர் மட்டும் இலக்கைச் சரியாகச் சுடுவதற்கான நிகழ்தகவு
  (iii) குறைந்து ஒருவராவது இலக்கை சரியாக சுடுவதற்கான நிகழ்தகவு ஆகியவற்றைக் காண்க.

 26. முறையே 20%, 30% மற்றும் 50% பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய A, B, C என்ற இயந்திரங்களை ஒரு நிறுவனம் கொண்டுள்ளது. அவற்றின் குறைபாடு சதவீதங்கள் முறையே 7,3 மற்றும் 5 ஆகும். இந்த உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அது குறைபாடுள்ளது எனில், அது இயந்திரம் C -யினால் உற்பத்தி செய்யப்பட்டதற்கான நிகழ்தகவு யாது?

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths - Descriptive Statistics and Probability Model Question Paper )

Write your Comment