நிதியியல் கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. ஒரு நபர் ஒரு இயந்திரத்தை சனவரி -1,2009-ம் வருடம் வாங்குகிறார் மற்றும் 15% கூட்டு வட்டியுடன் ,10 சமமான தவணைகளில் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் ரூ.12,000 செலுத்துவதற்கு ஒப்புக்  கொள்கிறார் எனில் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு என்ன? [(1.15)10=4.016]

  2. ஒரு நிழற்படக் கலைஞ்ர் ஒரு புகைபடக் கருவியை தவணைமுறையில் வாங்குகிறார் வாங்கிய தேதியிலிருந்து ஒவ்வொரு தவணைக்கும் ரூ.36,000 வருடாந்திர தவணைகளில் செலுத்த வேண்டும்.வட்டியானது 16% கூட்டு வட்டி எனில் புகைப்படக்  கருவியின் அசல் விலையைக் காண்க [(1.16)7=2.2828]

  3. ஒரு நிதிநிறுவனத்திலிருந்து ஒருவர் 16%வட்டி விகிதத்தில் ரூ.7,00,00,000 கடனாக பெறுகிறார்.திருப்பி செலுத்துவதற்கான கால அளவு 15 வருடங்கள் எனில் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் அவர் செலுத்தக் கூடிய தவணைத் தொகையினைக்  காண்க [(1.0133)180=9.772]

  4. ரூ.89 உள்ள 10% சரக்கு முதலிலும் ரூ.90-ல் உள்ள 7% சரக்கு முதலிலும் சமமான தொகைகள் முதலீடு செய்யப்படுகின்றன.(இரு பரிவதனைகளையும் 1% தரகு) 10% சரக்கு முதல் மற்றத்தைக் காட்டிலும் ரூ.100 அதிக வருமானம் தருகிறது எனில் ,ஒவ்வொரு சரக்கு முதலிலும் முதலீடு செய்யப்பட்ட தொகைகளைக் காண்க

  5. ஒரு நிறுவனத்தின் மூலதனம் 16% பங்கு வீதம் கொண்ட 1,00,000 முன்னுரிமைப் பங்குகளையும் 50,000 சாதாரணப் பங்குகளையும் கொண்டாடாக் உள்ளது.முன்னுரிமை மற்றும் சாதாரண பங்குகள் ஒவ்வொன்றின் முக மதிப்பு ரூ.10 ஆகும்.அந்த நிறுவனத்திற்கு கிடைத்த மொத்த இலாபம் ரூ.3,20,000 ல் இருந்து ரூ40,000 நிறுத்திவைப்பு நிதிக்காகவும் ரூ.20,000 மதிப்பிற்க்க நிதியாகவும் ஒதுக்கப்படுகிறது எனில்,சாதாரணப் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்படும் பங்கு வீதத்தை காண்க

  6. எது சிறந்த முதலீடு 12% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.16(அல்லது) 15% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.24

  7. ஒரு நிறுவனம் 20%.அதிக விலையில் ரூ.100 முகமதிப்புள்ள 15% பங்குகளை அறிவித்துள்ளது.திரு.மோகன் என்பவர் ரூ.29,040 முதலீடு செய்கிறார் எனில் பின்ருவனவற்றைக் காண்க
    (i) திரு.மோகனால் வாங்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை
    (ii) பங்குகளிலிருந்து அவருக்கு கிடைக்கும் வருடாந்திர வருமானம்
    (iii) அவருடைய முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமான சதவிகிதம்

  8. அரையாண்டு ஒருமுறை வட்டி சேர்த்து 10% வட்டி கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு அரையாண்டு முடிவிலும் ரூ.10,000 தொகை செலுத்தினால் 5 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டு தொகையின் மொத்தத் தொகையைக் காண்க

  9. காலாண்டுக்கு ஒருமுறை விதி சேர்த்து 4% வட்டி கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் ரூ.600 தொகை செலுத்தினால் 10 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்தத் தொகையைக் காண்க

  10. நவீன் என்பவர் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் ரூ.250 கணக்கில் செலுத்துகிறார்.6% ஆண்டு கூட்டு வட்டியில் மாதந்தோறும் கூட்டு வட்டி சேர்க்கப்படுகிறது.அவரின் வைப்புத் தொகை குறைந்து ரூ.6390 எத்தனை மாதங்களில் கிடைக்கும்

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் - நிதியியல் கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Business Maths - Financial Mathematics Three Marks Questions )

Write your Comment