10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    10 x 4 = 40
  1. 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.

  2. ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
    1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
    2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

  3. துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.

  4. ஓம் விதி வரையறு.

  5. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?

  6. இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

  7. கீழ்கண்டவற்றின் நிறையைக் காண்க.
    அ. 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு 
    ஆ. 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு 
    இ. 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு 
    ஈ. 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு  

  8. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?

  9. ’A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. B-இல் நீரைச் சேர்க்கப்படும் போது ‘B’ மீண்டும் ’A’ ஆக மாறுகிறது. ’A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க.

  10. ‘A’ என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும் போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Book back 4 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment