All Chapter 5 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 07:30:00 Hrs
Total Marks : 495
    Answer All The Following Question:
    99 x 5 = 495
  1. சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது? 

  2. விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது? 

  3. விலங்குகளுக்கு பெயரிடும் முறையினால் ஏற்படும் நன்மைகள் எவை?

  4. ஐந்து உலக வகைப்பாட்டில் உள்ள ஐந்து உலகத்தின் பெயர், அதில் உள்ள விலங்குகளின் பண்புகளை தொகுத்து அட்டவணைப்படுத்துக.

  5. கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

    அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
    ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
    இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
    ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
    உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
    ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?

  6. முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் முறையே சம எண்ணிக்கையில் இருக்குமா? ஏன்?

  7. முதுகுநாண்களின் அடிப்படைப் பண்புகளை விளக்கு.
    [அல்லது]
    தொகுதி முதுகு நாணுடையவைகளின் தனித்துவமான அம்சங்களை விவரி.
     

  8. முதுகுநாணுடைய மற்றும் முதுகுநாணற்ற விலங்குகளின் பண்புகளை ஒப்பீடு.

  9. இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.

  10. எபிதீலியம் என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளின் பண்புகளைத் தருக.

  11. குருத்தெலும்பின் பண்புகளை பட்டியலிடு.

  12. எலும்பிற்கு, குறுத்தெலும்பிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதுக.

  13. தவளையின் செரிமான மண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.

  14. தவளையின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தை விளக்குக.

  15. லாம்பிட்டோ மாரிட்டீ மற்றும் மெடாபையர் போஸ்துமா ஆகிய சீற்றங்களுக்கு இடையே புற பண்புகளில் உள்ள வேறுபாட்டினை அட்டவணைப்படுத்து

  16. தவளைகளின் பொருளாதார முக்கியத்துவத்தை பட்டியலிடு.

  17. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

  18. வாய்குழியில் உணவு செரித்தல் நடைபெறுவதை விளக்கு.

  19. புரதக்குறைபாட்டு நோய்களைப் பற்றிக் குறிப்பு எழுதுக.

  20. சுவாசப் பாதையை விளக்கும் தொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .

  21. எந்தவொரு நிலையில் ஆக்ஸிஜன் கடத்தலில் சிக்கல்கள் ஏற்படுகிறது என்பதை விளக்கு.

  22. காற்று நுண்ணறைகளில் ஆக்ஸிஹீமோகுளோபின் உருவாவதற்கும் மற்றும் திசுக்களில் ஆக்ஸிஹீமோகுளோபினிலிருந்து O2 பிரிவதற்கும் இடையே உள்ள சூழல்கள் வேறுபாட்டைக் கூறு.  

  23. சுவாசநிறமிகளை பற்றி குறிப்பு எழுதுக.

  24. சொல் சோதனை: இதயத்தசை, ஏட்ரியாக்கள், மூவிதழ்வால்வு, சிஸ்டோல், ஆரிக்கிள்கள், தமனிகள், டயஸ்டோல், வெண்டிரிக்கிள், ஈரிதழ்வால்வு, நுரையீரல் தமனி, இதய இயக்கச் சூழற்சி, அரைச்சந்திர வடிவ வால்வு, சிரைகள், நுரையீரல் சிரை, இரத்த நுண் நாளங்கள், பெருஞ்சிரை, பெருந்தமனி.
    |01. சுற்றோட்டத்தின் முக்கியத் தமனி 
    02. இடது ஏட்ரியம் மற்றும் வென்டிரிக்கிளுக்கு இடையே உள்ள வால்வு 
    03. இதயம் விரிவடைதலைக் குறிக்கும்  சொல் 
    04. ஏட்ரியத்தின் மாற்று பெயர் 
    05. முக்கியச் சிரை 
    06. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளம் 
    07. இதயத்தின் இரு மேலுறையின் பெயர் 
    08. தடிமனான சுவர் கொண்ட இதய அறை 
    09. இதயத்திலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தநாளம் 
    10. முழுமையடைய 0.8 நொடிகள் 
    11. இதயத்திலிருந்து இரத்தம் வெளியேற்றும் பகுதியிலுள்ள வால்வு 
    12. இதயத்தை நோக்கி இரத்தத்தைக் கொண்டுவரும் இரத்த நாளம் 
    13. நுரையீரலிருந்து இதயத்திற்கு இரத்தைக் கொண்டு வருவது 
    14. இதயக் கீழறைகள் இரண்டின் பெயர் 
    15. பெருந்தமனிக்குள் நுழைந்தபின் மீண்டும் இதயக் கீழறைக்குள் இரத்தம் திரும்பாமல் காப்பது.
    16. ஒரு இதயத்துடிப்பின் தொழில் நுட்பப் பெயர். 
    17.  வலது ஆரிக்கிளுக்கும் வென்டிரிக்கிளுக்கு மிடையேயான வால்வு 
    18. இதயம் சுருங்குவதைக் குறிக்கும் தொழில் நுட்பப் பெயர் 
    19. மிக்க குறுகிய இரத்த நாளங்கள். 

  25. சுற்றோட்ட மண்டலத்தின் முக்கிய பணிகளை விளக்கு படத்தினை வரையவும்.

  26. இரத்தம் உரைதல் நடைபெறும் முறையை விளக்கு.

  27. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும்.

  28. லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக.

  29. கிராம் நேர் கிராம் எதிர் பாக்டீரியங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்து. 

  30. பூஞ்சைகளின் நண்மைகள் யாவை? 

  31. டெரிடோஃபைட்டுகளின் பொதுப்பண்புகள் யாவை?

  32. ஜிம்னோஸ்பெர்ம்களின் ஆஞ்சியோஸ்பெர்மகளுக் கிடையேயான வேறுபாடுகள் யாவை? 

  33. கீழ்கண்டவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக.
    அ) அவிசீனியா, ட்ராபா
    ஆ) ஆலமரம், இலவம் பஞ்சு மரம்
    இ) கதிர்கோல் வடிவ வேர், பம்பர வடிவ வேர்

  34. குறிப்பு எழுதுக: குமிழம்.

  35. இலை அடுக்கமைவின் வகைகளை படத்துடன் விளக்குக.

  36. தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.

  37. மஞ்சரிகளின் வகைகள் யாவை?

  38. ரசிமோஸ் வகை மஞ்சரியை வகைப்படுத்துக.

  39. உயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.

  40. லில்லியேசி குடும்பத் தாவரங்களை  சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  41. APG IV வகைப்பாட்டின் எளிமை படுத்தப்பட்ட பதிப்புறு வரையவும்.   

  42. டாட்டுரா மெட்டல் தாவரத்தை கலைச் சொற்களால் விளக்கு.       

  43. தாவரச் செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

  44. தாவரச் செல்லின் நுண்ணமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.

  45. பசுங்கணிகத்தின் அமைப்பை படம் வரைந்து விளக்கு?

  46. பாலிடீன் குரோமோசோமின் அமைப்பை படுத்துடன் விளக்கு?   

  47. தாவரசெல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோகைனிசிஸ் - வேறுபடுத்துக.

  48. புரோநிலை I-ல் பாக்கிடீன் மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.

  49. குறிப்பு எழுத்து: ஏமைட்டாசிஸ்.

  50. இடைக்கால நிலை என்பது யாது? அதன் துணை நிலைகளை படத்துடன் விளக்கு.

  51. நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை ?

  52. பல வகையான RNA-வின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குக.

  53. B-DNA , A-DNA, Z-DNA வின் பண்புகளை ஒப்பிடு.    

  54. புரதத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.

  55. யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.

  56. உயிரியல் சொற்களை கீழ்க்காணும் சொற்றொடர்களுடன் அடையாளம் காண்க. கழிவு நீக்கம், கிளாமருலஸ் , சிறுநீர்ப்பை, கிளாமருலார் வடிதிரவம், சிறுநீர் நாளங்கள், சிறுநீர், பௌமானின் கிண்ணம், சிறுநீரக மண்டலம், மீண்டும் உறிஞ்சுதல், மிக்ட்யூரிஷன், சவ்வூடு பரவல், புரதங்கள், சமநிலை பேணுதல்
    i. சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம்.
    ii. பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது.
    iii. சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல்.
    iv. இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து.
    vi. தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல்.
    vii. ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது.
    vii. சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது.
    xi. சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர்.
    xii. இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்துதல்.
    xiii.சிறுநீரகங்கள். சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன.
    xiv. கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல்.
    xvii. இரத்தத்தில் மட்டும்  காணப்பட்டு கிளாமருவார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது?

  57. நெப்ரான்களின் இரத்த நுண் நாளத் தொகுப்பு பற்றி குறிப்பு எழுதுக.

  58. சிறுநீரகத்தின் பணிகளை வெறிப்படுத்துதல் பற்றி எழுதுக? ADH மற்றும் டையபெட்டிஸ் இன்சிபிடஸ்

  59. மார்புக்கூட்டை உருவாக்கும் விலாஎலும்புகளின் வகைகள் யாவை?

  60. தொடர் உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் யாவை?

  61. அச்சுச்சட்டகம் பற்றி எழுதுக?

  62. தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலத் குறைபாடுகளை விவரி?  

  63. அனைத்து உணர்வு உறுப்புகளிலும் சுவை உணர்வு உறுப்பு மகிழ்வூட்டக் கூடியது (Pleasurable) இதனுடன் தொர்புடைய உணர்வியை படத்துடன் விளக்குக.

  64. நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி. 

  65. தோல் - தொடு உணர் உறுப்பு குறிப்பு தருக. 

  66. மின் முனைப்பியக்க நீக்கம் மற்றும் மின்முனைப்பியக்க மீட்சி பற்றி எழுதுக.

  67. டையாபெட்டிஸ் மெலிட்டஸ் மற்றும் டையாபெட்டிஸ் இன்சிபிடஸ் ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.

  68. ஹைபர்கிளைசீமியா மற்றும் ஹைபோகிளைசீமியா - வேறுபடுத்துக.       

  69. கணையம் அமைப்பு மற்றும் செயல்களை எழுதுக? 

  70. ஹார்மோன்கள் செயல்படும் விதம் பற்றி எழுதுக?  

  71. பட்டுப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு 

  72. கால்நடை இனப்பெருக்கத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி விவாதி

  73. பட்டுப்புழுவின் உணவுத் தாவரங்களைப் பயிரிடல் பற்றி எழுதுக? 

  74. தேனீ வளர்ப்பு பற்றி எழுதுக?

  75. ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.

  76. இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும்  இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.

  77. ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசுக்களுக்கிடையேயான வேறுபாட்டினை எழுதுக.

  78. ஒரு விதையிலை [புல்] இலையின் உள்ளமைப்பை படத்துடன் விளக்கு,
    புறத்தோல்:

  79. தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசுவாகும். பக்க ஆக்குத்திசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.

  80. ஒரு மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் பொது மைய வளையங்கள், வளர்ச்சி வளையங்கள் எனப்படுகிறது. வளர்ச்சி வளையங்கள் எவ்வாறு உருவாகின்றன. அதன் முக்கியத்துவம் யாது?

  81. டைலோசஸ் அமைப்பினை படம் வரைந்து பாகங்களைக் குறிக்க?

  82. பட்டையின் பணிகள் யாவை?

  83. நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?

  84. படத்தில் காட்டியுள்ளவாறு தேர்வு செலுத்து சவ்வாலான ஒரு செயற்கையான செல் அளவீடுகளைப் பார்த்துக் கீழ்காணும்  வினாக்களுக்கு விடை தருக.
    அ) நீர் செல்லும் பாதையினை அம்புக் குறியிட்டுக் காட்டுக 
    ஆ) செல்லுக்கு வெளியமைந்த கரைசலில்  நிலை ஐசோடானிக், ஹைபோடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?

    இ) செல்லின் நிலை ஐசோடானிக்,ஹைபோடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?
    ஈ) சோதனை முடிவில் செல்லானது அதிகத் தளர்வு நிலை, அதிக விறைப்பு நிலை அல்லது அதே நிலையில் நீடிக்குமா?
    உ) இச்செயற்கை செல்லில் நடைபெறுவது உட்சவ்வூடு பரவலா அல்லது வெளிச்சவ்வூடு பரவலா?காரணம் கூறு.

  85. செல்களுக்கிடையே  நடைபெறும் கடத்து முறையை அட்டவணைப்படுத்துக.

  86. வேர்செல்களில் நீர் செல்லும் மூன்று விதமான வழிகளை விளக்கு.

  87. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஒட்டுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக?

  88. பூச்சியுண்ணும் உணவூட்டம் பற்றி எழுதுக.

  89. ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP-களை பயன்படுத்துவதாகும். C3 தாவரங்கள் 18 ATP - க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3-யை விட சிறந்த தகவமைப்பு  பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்க்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?  

  90. ஒளி சுவாசம் படம் வரைக.

  91. ஆய்வுக்குழல் புனல் ஆய்வு நிரூபிக்கும் சோதனையை எழுதுக.

  92. மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வில் நடைபெறும் வினைகளை விவரி. 

  93. காற்று சுவாசித்தலின்  ஒரு மூலக்கூறு சுக்ரோஸ் முழுவதுமாக  ஆக்ஸிஜனேற்றமடைந்து  உருவாகும் நிகர விளைபொருள்கள்களை தற்போதய பார்வையில் எவ்வாறு கணக்கிடுவாய். 

  94. காற்று சுவாசித்தலின் போது CO2 வெளியிடுவதை நிரூபிக்க ஆய்வினை எழுதுக.

  95. சுவாசித்தலின் ஒட்டு மொத்த சுருக்க வரைபடம் வரைக?

  96. சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை ?

  97. திட்டமிடப்பட்ட செல் இறப்பு (PCD) பற்றி சிறு குறிப்பு தருக.   

  98. தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளின் அட்டவணைப்படுத்துக.      

  99. ஆகிசின் வகைகளை எழுதுக.    

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment