All Chapter 7 Mark Question

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 09:00:00 Hrs
Total Marks : 609
    Answer All The Following Question:
    87 x 7 = 609
  1. உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.

  2. பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.

  3. திருப்புத்திறன் நடைமுறை வாழ்க்கையில் செயல்படும் சில அமைப்புகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  4. நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதிக்கு எடுத்துக்காட்டுடன் தருக.

  5. 10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.

  6. கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக.

  7. குழிலென்சின் வழியாக ஒளிவிலகல் ஏற்படுவதை படத்துடன் விவரி. பொருளின் நிலை, பிம்பங்கள் உருவாக்கப்படும் நிலை குறித்து விவரி.

  8. தூரப்பார்வை [ஹைப்பர் மெட்ரோபியா] குறைபாடு எவ்வாறு சரி செய்ய்யப்படுகிறது? படத்துடன் விவரி.

  9. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

  10. திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.

  11. வெப்ப ஆற்றலைப் பற்றிய கருத்துக்களை விவாதி.

  12. திரவம் மற்றும் வாயுவில் வெப்ப விரிவு ஏற்படுவதை விவரி.

  13. மூன்று மின் தடைகளை (அ) தொடர் இணைப்பு (ஆ) பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின்தடைக்கான கோவையை தகுந்த மின்சுற்றுப் படம் வரைந்து கணக்கிடு.

  14. அ) மின்னோட்டம் என்றால் என்ன?
    ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
    இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?

  15. ஓம் விதியினைக் கூறி அதன் வரைபடத்தினை விவரி.

  16. பக்க இணைப்பில் தொடர் மின்தடையாக்கிகளின் சமன்பாட்டினைத் தருக.

  17. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

  18. அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
    ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
    இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.

  19. ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.

  20. டாப்ளர் விளைவின் பயன்பாடுகளை விவரி.

  21. கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற தொடர்வினையை விளக்குக.

  22. ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.

  23. \(\alpha ,\beta ,\gamma \) - சிதைவினை விவரி.

  24. அணுகுண்டு செயல்பாட்டினை விவரி.

  25. N2 + 3 H2 ➝ 2NH3 (N = 14, H = 1)
    1 மோல் நைட்ரஜன் = ______ கி + 3 மோல் ஹைட்ரஜன் = ______ கி ➝ 2 மோல் அம்மோனியா = _____ கி 

  26. ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.

  27. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.

  28. அலுமினா மற்றும், கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?

  29. ஒரு உலோகம் A யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து C மற்றும் D ஐ உருவாக்கும் D யானது வாயுநிலை சேர்மம் எனில் A,B,C மற்றும் D எவை?

  30. நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்களின் சிறப்பம்சங்களை எழுது.

  31. எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பைக் கொண்டு வேதிப்பிணைப்புகள் தன்மையை எவ்வாறு அறிவாய்?

  32. குறிப்பு வரைக.
    அ) தெவிட்டிய கரைசல்
    ஆ) தெவிட்டாத கரைசல்

  33. கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக.

  34. இருமடிக்கரைசலின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.

  35. 25oC ல் 100 கி நேரில் பின்வரும் கரைபொருளின் கரைத்திறனை எழுதுக.
    CaCO3
    NaCl
    NH3
    NaOH
    C6H12O6
    NaBr
    Nal

  36. வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?

  37. ஒரு வினையின் வினை வேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

  38. மீள் வினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  39. மீளாவினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  40. கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  41. கீழ்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
    அ. NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை
    ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை
    இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை
    ஈ. எத்தனாலின் எரிதல் வினை.

  42. கரிமச் சேர்மங்களின் பொதுப் பண்புகளை எழுது.

  43. ஹைட்ரோ கார்பன்களின் பண்புகளை எழுது.

  44. வேறுபாடு தருக.
    அ. ஒரு விதையிலைத் தாவரவேர் மற்றும் இரு விதையிலைத் தாவர வேர்
    ஆ. காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் 

  45. பசுங்கணகித்தின் எந்தபகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?

  46. இருவித்திலை தாவர இலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை படத்துடன் விவரி.

  47. ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கினை விளக்கு.

  48. அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.

  49. முயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது?

  50. முயலின் பல் அமைப்பை பற்றி எழுதுக.

  51. முயலின் இதயத்தை படத்துடன் விவரி.

  52. நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக 

  53. சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக. இதயத் துடிப்பின் பரவுதலை விளக்குக.

  54. சாறேற்றத்தினை படத்துடன் விளக்குக.

  55. 'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரதம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?

  56. தண்டுவடத்தின் அமைப்பினை விவரி.

  57. ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு நரம்பு தூண்டல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன?

  58. மூளையின் பாகங்களையும் அவற்றின் பணிகளையும் அட்டவணைப்படுத்து.

  59. மூளைத் தண்டுவட திரவத்தின் பணிகள் யாவை?

  60. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.

  61. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?

  62. ஆக்சின்களின் வாழ்வியல் விளைவுகளை விளக்குக.

  63. பிட்யூட்டரியின் முன் கதுப்பு சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவற்றில் எதாவது ஒன்றின் விளைவுகளைக் கூறு.

  64. மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களைக் குறிப்பிடுக.

  65. பருவமடைதலுக்கு முன்னரும், கர்ப்பத்தின் போதும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வதில்லை ஏன்?

  66. மனித விந்துவின் அமைப்பை படத்துடன் விவரி.

  67. அயல் மகரந்தச்சேர்க்கைக்கான காரணிகள் பற்றி விளக்கு.

  68. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்புக் கலப்பை விளக்குக. இது ஒரு பண்புக் கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?

  69. புதிதாகப் பிறந்த குழந்தையின் பாலின நிர்ணயம் ஒரு தற்செயல் நிகழ்வு. தாயோ தந்தையோ இதற்குப் பொறுப்பாக கருத முடியாது. குழந்தையின் பாலினத்தை எத்தகைய இன செல் இணைவு முடிவு செய்கிறது?

  70. சென்ட்ரோமியர் அமைந்திருக்கும் நிலைக்கும் ஏற்ப குரோமோசோம்களை வகைப்படுத்து.

  71. சடுதி மாற்றம் பற்றி விரிவாக எழுது.

  72. பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு?

  73. அமைப்பு ஒத்த உறுப்புகளையும் செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?

  74. பரிணாமத்தின் சான்றுகளாகிய புறத்தோற்றவியல் மற்றும் உடற்கூறியல் சான்றுகளை விளக்கு.

  75. பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டினை விளக்கு.

  76. உயிரூட்டச் சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.

  77. மருத்துவத் துறையில் உயிர்தொழில் நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.

  78. டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில் நுட்பம் பற்றி விளக்கு.

  79. மரபுப்பண்பு மாற்றம் செய்யப்பட்ட விலங்கு மற்றும் தாவரங்களை அட்டவணைப்படுத்தி அவற்றில் புகுத்தப்பட்ட ஜீன் சாதனைகளை எழுதுக.

  80. மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.

  81. இதய நோய்கள் ஏற்பட காரணம் வாழ்க்கை முறையே ஆகும். இதை சரிசெய்ய தீர்வுகள் தருக.

  82. புகைத்தலின் ஆபத்துக்கள் மற்றும் புகையிலையின் விளைவுகளை எழுது.

  83. உடல் பருமன் பற்றி குறிப்பெழுதுக. 

  84. திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?

  85. வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?

  86. அ) சூரிய ஆற்றல் பற்றி குறிப்பெழுதுக.
    ஆ) சூரிய மின் கலன்களின் பயன்கள் யாவை?

  87. அனைத்து விதமான ஆற்றலும் வெவ்வேறு வழிமுறைகளில் சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது. இதனை நீ ஏற்றுக்கொள்கிறாயா?

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஏழு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Seven Marks Important Questions 2020 )

Write your Comment