All Chapter 4 Mark Question

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 05:20:00 Hrs
Total Marks : 332
    Answer All The Following Question:
    83 x 4 = 332
  1. 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.

  2. பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாப்படுத்துக.

  3. 20 கிகி நிறையுள்ள ஒரு கோளம் 40 ms-1 திசைவேகத்தில் ஓய்விலுள்ள 15 கிகி நிறையுள்ள மற்றொரு கோணத்தின் மீது மோதுகிறது. மோதலுக்குப்பின் அதே திசைவேகத்துடன் அவை நகர்கின்றன. திசைவேகத்தைக் காண்க.

  4. ஒரு பொருளின்மீது செயல்படும் செங்குத்து விசை 50 N. பொருளானது O என்ற புள்ளியில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளது. 'O'-விலிருந்து விசை செயல்படும் புள்ளிக்கு தொலைவு 5 செ.மீ விசையின் திருப்புத்திறனைக் காண்க. 

  5. ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
    1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
    2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

  6. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?

  7. லென்சை உருவாக்குவோர் சமன்பாடு உருவாக்கப்பட்டதன் அவசியம் யாது?

  8. ஒரு குழி லென்சு 20 செ.மீ குவிய தொலைவு உடையது. 5 செ.மீ உயரமுடைய பொருள் ஒன்று எத்தொலைவில் வைக்கப்பட்டால், அது லென்சிலிருந்து 15 செ.மீ தொலைவில் பிம்பம் உருவாகும்? உருவாக்கப்படும் பிம்பத்தின் அளவைக் கணக்கிடுக.

  9. துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.

  10. உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?

  11. ஒரு அலுமினியம் தாளின் நீளம் 30 மீ, அதைக்கொண்டு ΔT=300 K வெப்பநிலையில் கூம்பாக செய்யப்படுகிறது. நீளத்தில் ஏற்படும் மாற்றம் யாது? (அலுமினியத்தின் நீள் வெப்ப விரிவு குணகம் 23 x 10-6K-1).

  12. கிலோ கலோரி -வரையறு.

  13. ஓம் விதி வரையறு.

  14. R மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து சமநீளமுடைய கம்பிகளாக வெட்டப்படுகிறது.
    அ) வெட்டப்பட்ட கம்பியின் மின்தடை வெட்டப்படாத அசல் கம்பியின் மின்தடையோடு ஒப்பிடுகையில் எவ்வாறு மாற்றமடைகிறது.
    ஆ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடையை கணக்கிடுக.
    இ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின்தடைகளின் விகிதத்தை கணக்கிடுக.

  15. அதிக பளுவதால் என்றால் என்ன?

  16. கொடுக்கப்பட்ட மின்சுற்றுப் படத்திலிருந்து (i) தொகுபயன் மின்தடை, (ii) சூரின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டம், (iii) ஒவ்வொரு மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம், (iv) மின்தடையின் குறுக்கே மின்னழுத்தம், (v) ஒவ்வொரு மின்தடையாலும் ஆற்றல் பயனீடு இவற்றை காண்.

  17. இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 460C ஐ அடைய இயலும். அந்த வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (V0 = 331 மீவி-1 )

  18. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?

  19. ஓய்வு நிலையில் உள்ள,100 Hz ஒலிமூலத்தை நோக்கி ஒரு கேட்குநர் இருமடங்கு ஒலிவேகத்தில் நகர்கிறார்.அவர் உணர் அதிர்வெண்ணில் அளவு என்ன?

  20. கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ள போது ஒரு ரயில் வண்டி 30மீவி-1 வேகத்தில் அவரை நோக்கி நெருங்குகிறது.ரயிலின் அதிர்வெண் 600Hz ஒலியின் வேகம் 340 மீ.வி-1 எனில் கேட்குநர் உணரும் அதிர்வெண் யாது?

  21. இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

  22. வரையறு: ராண்ட்ஜன் 

  23. சமன்பாட்டினை சமன் செய் 
    \(_{ 6 }{ C }^{ 14 }\rightarrow _{ -1 }{ e }^{ 0 }+?\)

  24. தீர்க்க:
    (i) \(_{ 88 }{ Ra }^{ 226 }\rightarrow Rn+\_ \_ \_ \_ \_ \_ \_ \_ \_ \) (\(\alpha \) சிதைவு)
    (ii) \(_{ 27 }{ Co }^{ 60 }\rightarrow Ni+\_ \_ \_ \_ \_ \) (\(\beta \) சிதைவு)

  25. கீழ்கண்டவற்றின் நிறையைக் காண்க.
    அ. 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு 
    ஆ. 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு 
    இ. 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு 
    ஈ. 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு  

  26. கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க.
    (Ca = 40, C = 12, O = 16).

  27. 81 கி அலுமினியத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.

  28. மெக்னீசியம்,சல்பைட்டில் உள்ள Mg மற்றும் Sன் நிறை விகிதம் 3:4 Mg மற்றும் S அணுக்களின் விகித எண்கள் என்ன?

  29. A என்ற உலோகம் 3 ஆம் தொடரையும் 13 ம் தொகுதியையும் சார்ந்தது. செஞ்சூடெறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A யானது NaOH உடன் சேர்ந்து C ஐ உருவாக்கும். எனில் A,B,C எவை எவை என வினகளுடன் எழுதுக.

  30. a. HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
    b. இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
    c. இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?

  31. பின்வரும் அட்டவணை தனிம வரிசை அட்டவணையில்உள்ள A,B,C,D,E மற்றும் F என்ற தனிமங்களின் இடங்களை குறிக்கிறது?

    தொகுதிகள்  1 2 3to12 13 14 15 16 17 18
    தொடர்கள்                   
    2            
    3            

    மேற்கண்ட அட்டவணையைப் பயன்படுத்தி பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
    (i) எந்த தனிமம் சகப்பிணைப்பை மட்டும் உருவாக்கும்?
    (ii) எந்த தனிமம் இணைதிறன் 2 உடைய அலோகம்?
    (iii) எந்த தனிமம் இணைதிறன் 3 உடைய அலோகம்?
    (iv) D  மற்றும் E  இவற்றில் எது அதிக அணு ஆரத்தை உடையது.ஏன்?
    (v) தனிமங்கள் C  மற்றும் F உடைய குடும்பத்தின் பொதுவான பெயரை எழுது.

  32. விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதேவகை சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?

  33. ’A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. B-இல் நீரைச் சேர்க்கப்படும் போது ‘B’ மீண்டும் ’A’ ஆக மாறுகிறது. ’A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க.

  34. ‘A’ என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும் பொது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக.

  35. காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.

  36. ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H10O அதில் -OH இட எண் 2
    அ. அதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
    ஆ. IUPAC பெயரினை எழுதுக.
    இ. இச்சேர்மம் நிறைவுற்றவையா? நிறைவுறாதவையா?

  37. ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.
    அ. சேர்மம் A யைக் கண்டறிக.
    ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
    இ. இந்நிகழ்விற்கு பெயரிடுக.

  38. பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.

    (i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
    (ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
    (iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?

  39. ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.

  40. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?


  41. அ] படத்தினை பார்த்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? கூறு.
    ஆ] அதன் வகைகளைக் கூறு.
    இ] உதாரணம் தருக.

  42. ராமன் தோட்டத்திற்கு சென்றான். ஆல மரத்தில் தண்டுப்பகுதி ஒவ்வொரு வருடமும் பருமனாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்னைமரம் இவ்வாறாக பருமனாக மாறவில்லை. ஏன் என யோசிக்கிறான். உங்களால் இதற்கு விளக்கம் கூற முடியுமா?

  43. முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் ?

  44. அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.

  45. அட்டை, நோய்களை உண்டாக்குமா?

  46. அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?

  47. நீராவிப்போக்கின் போது இலைத்துளை திறப்பதற்கும் மூடிக் கொள்வதற்குமான காரணத்தை கூறு.

  48. தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?

  49. உலகில் மனிதர்கள் பலவகைப்பட்ட நிறங்களில் காணப்படுகின்றனர். ஆனால் இரத்தம் ஒரே நிறத்தில் காணப்படுவது ஏன்?

  50. முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
    i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
    ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
    ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
    iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?

  51. நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L”செல்களில் நீண்ட கிளைத்த பகுதி”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.
    i. “L” செல்களின் பெயரை கூறுக.
    ii. “M” மற்றும் ”N” என்பவை யாவை?
    iii. “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
    iv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.

  52. சில நேரங்களில் நமது கை முட்செடியில் படும் போது முட்கள் நம் உடலில் வலியை ஏற்படுத்துகின்றன. உடனே நாம் கையை முட்செடியினை விட்டு விலக்கி  விடுகிறோம். இதில் எந்த வகையான நியூரான்கள் செயல்படத் துவங்குகின்றன?

  53. A யில் மூளை தண்டுவடத் திரவம் காணப்படுகிறது. அதில் உள்ள இடைவெளிப்பகுதி B எனப்படுகிறது. A யின் சாம்பல் நிரப்பகுதியானது ஆங்கில எழுத்தில் H போன்று அமைந்துள்ளது. H-ன் மேல்முனை C எனப்படுகிறது. அதன் கீழ் முனை D ஆகும். A, B, C, D யினை காண்.

  54. பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
    அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
    ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
    இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது

  55. சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமாரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக.

  56. புரோஜெஸ்டிரானின் இரு பணிகளைக் கூறு.

  57. பிட்யூட்ரியின் பின் கதுப்பில் சுரக்கப்படும் ஹார்மோன்களையும் பற்றி குறிப்பு வரைக.

  58. மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்புநிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

  59. நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் என்ன ?

  60. ஈஸ்ட்டில் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?

  61. எதிர் துருவச் செல்கள் என்பன யாவை?

  62. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி நிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?

  63. தோட்டப் பட்டாணிச் செடியிலுள்ள மலர்கள் அனைத்தும் தன் மகரந்த சேர்க்கை நடைபெறும் இரு பால் மலர்கள் ஆகவே அவற்றில் குறுக்கே கலத்தல் மூலம் கலப்பினம் செய்வது கடினம். இவ்வகைப் பட்டாணிச் செடியில் எவ்வாறு ஒரு பண்பு மற்றும் கலப்பை மெண்டல் மேற்கொண்டார்?

  64. யூபிளாய்டி பற்றி எழுது.

  65. மெண்டல் பயன்படுத்திய பட்டாணி தாவரத்தில் ஏதேனும் மூன்று வேறுபட்ட பண்புகளை அட்டவணைப்படுத்து.

  66. கிவி பறவையின் சிதைவடைந்த இறக்கைகள், ஒரு பெறப்பட்ட பண்பு. ஏன் அது பெறப்பட்ட பண்பு என அழைக்கப்படுகிறது?

  67. ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?

  68. "நம்முடைய பல் மற்றும் யானையின் தந்தம் இவை இரண்டும் அமைப்பு ஒத்த உறுப்புகளாகும்." இக்கூற்றினை நியாயப்படுத்து. மேலும் செயல் ஒத்த உறுப்புகள் எவ்வாறு காணப்படுகிறது?

  69. நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி.

  70. பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.

  71. தாவர ரகங்களை தேர்வு செய்தலின் முறைகளைக் கூறு.

  72. உட்கலப்பு வீழ்ச்சி என்றால் என்ன?

  73. போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால், அதிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை ஏன்?

  74. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று உணவு வகைகளைக் கூறுக. இதை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என விவரி.

  75. கார்சினோஜன் என்றால் என்ன?

  76. மேலிக்னன்ட் கட்டிகள் மற்றும் மேலிக்னன்டி வகை அல்லாத கட்டிகள் வேறுபடுத்துக.

  77. சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களை கூறுக.

  78. கீழ்க்காணும் கழுவுகளை எவ்வாறு கையாளுவாய்?
    அ) வீட்டுக் கழிவுகளான காய்கறி கழிவுகள்.
    ஆ) தொழிற்சாலைக்கு கழிவுகளான கழிவு உருளைகள்.
    இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? ஆம் எனில் எவ்வாறு பாதுகாக்கும்?

  79. வன உயிரி பாதுகாப்பு சட்டத்தில் முக்கிய அம்சங்கள் யாவை?

  80. மின்னணுக் கழிவுகளால் உண்டாகும் பாதிப்புகள் யாவை?

  81. "Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.

  82. கணினி உன்னுடைய படிப்பிற்கு எம்முறைகளிலும் உதவிபுரிகிறது?

  83. நீ ஒரு படம் வரையும் கலைஞன் என்றால் எந்த செயலியை உன்னுடைய படம் வரையும் செயலுக்கு பயன்படுத்துவாய்?

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks Important Questions 2020 )

Write your Comment