மாதிரி வினாத்தாள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    12 x 1 = 12
  1. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

    (a)

    விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (b)

    குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (c)

    இணைக் கற்றைகளை உருவாக்கும்

    (d)

    நிறக் கற்றைகளை உருவாக்கும்.

  2. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

    (a)

    X அல்லது –X

    (b)

    Y அல்லது –Y

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) அல்லது (ஆ)

  3. மின்தடையின் SI அலகு ______.

    (a)

    மோ 

    (b)

    ஜூல்

    (c)

    ஓம் 

    (d)

    ஓம் மீட்டர் 

  4. எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பு அடிப்படையாகக் கொணடது.

    (a)

    பிணைப்பு ஆற்றல் 

    (b)

    எலக்ட்ரான் ஆற்றல் 

    (c)

    அயனியாக்கும் ஆற்றல் 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  5. திண்மத்தில் திண்மம் உள்ளவற்றிற்கு எடுத்துக்காட்டு

    (a)

    சோடா நீர் 

    (b)

    கற்பூரத்தில் உள்ள வாயு 

    (c)

    கரி 

    (d)

    உலோகக் கலவை 

  6. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து அம்மோனியா உருவாகும் வினை _______________ வினைக்கு உதாரணம்.

    (a)

    வெப்பச் சிதைவு 

    (b)

    சேர்க்கை 

    (c)

    வீழ்ப்படிவாக்கல்  

    (d)

    இடப்பெயர்ச்சி

  7. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்த சேர்மத்தின் வகை ___.

    (a)

    அல்கேன் 

    (b)

    அல்கீன்

    (c)

    அல்கைன் 

    (d)

    ஆல்கஹால் 

  8. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

    (a)

    வேர்

    (b)

    தண்டு 

    (c)

    இலைகள் 

    (d)

    மலர்கள் 

  9. _________________ என்பது மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும்.

    (a)

    மெனிஞ்சைடிஸ் 

    (b)

    மையலின் உறை 

    (c)

    பையா மேட்டர் 

    (d)

    அரக்னாய்டு உறை 

  10. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் உண்டாவது  _________________ 

    (a)

    டயாபடீஸ் மெலிடஸ் 

    (b)

    தசை இறுக்கம் 

    (c)

    தைராய்டு குறைபாடு 

    (d)

    கிரிட்டினிசம் 

  11. தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ________ஆகும்.

    (a)

    IR 8

    (b)

    IR 24

    (c)

    அட்டாமிட்டா 2

    (d)

    பொன்னி 

  12. கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும்_______எனப்படும்.

    (a)

    கோப்பு

    (b)

    கோப்புத் தொகுப்பு 

    (c)

    தட்டு

    (d)

    வெளியீடு

  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. லென்சு சமன்பாடு குறிப்பு வரைக.

  15. மின்னோட்டத்தின் அலகை வரையறு.

  16. ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.

  17. வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.

  18. மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.

  19. எத்தனாலின் பயன்களை எழுதுக.

  20. எவ்வகையான  செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?

  21. மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.

  22. எய்ட்ஸ் நோயினை கண்டறிவதற்கான சோதனைகளை கூறு?

  23. தாஜ்மகால் எவ்வாறு அமிலமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது?

  24. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 4 = 28
  25. 200 K வெப்பநிலையில் எஃகுத் துண்டின் நீளம் 2மீ. 250 K ல் அதன் நீளம் 0.1மீ அதிகரிக்கிறது எனில், பரும வெப்ப விரிவு குணகத்தைக் காண்க.

  26. மின்சுற்று என்றால் என்ன?

  27. Al2(SO4)3 ல் உள்ள ஆக்சிஜனின் சதவீத இயைபைக் காண்க. (Al = 27, O = 16, S = 32).

  28. a. HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
    b. இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
    c. இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?

  29. பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.

    (i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
    (ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
    (iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?

  30. அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?

  31. முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
    i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
    ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
    ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
    iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?

  32. ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?

  33. வேறுபடுத்துக:
    அ. உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
    ஆ. மாறுபாடு அடையாதசெல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்

  34. "Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    3 x 7 = 21
    1. மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.

    2. திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.

    1. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.

    2. CH3–CH2–CH2–OH. என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக எழுதுக.

    1. ABO இரத்த வகைகளைப் பற்றி குறிப்பெழுதுக.

    2. மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய விளைவுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - I (10th Standard Science Model Question Paper Part - I)

Write your Comment