பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    12 x 1 = 12
  1. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

    (a)

    விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (b)

    குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (c)

    இணைக் கற்றைகளை உருவாக்கும்

    (d)

    நிறக் கற்றைகளை உருவாக்கும்.

  2. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

    (a)

    X அல்லது –X

    (b)

    Y அல்லது –Y

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) அல்லது (ஆ)

  3. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?

    (a)

    மின்தடை எண் 

    (b)

    மின் கடத்து திறன்

    (c)

    மின் ஆற்றல்

    (d)

    மின் திறன்

  4. காப்பரின் முதன்மையான தாது________ 

    (a)

    காப்பர் பைரைட் 

    (b)

    காப்பர் கிளான்ஸ் 

    (c)

    சிப்ரைட் 

    (d)

    ரூபி காப்பர் 

  5. பின்வருவனவற்றுள் நீர்மமற்ற கரைசல் எது?

    (a)

    நீரில் உள்ள சர்க்கரை 

    (b)

    நீரில் உள்ள பொதுவான உப்பு 

    (c)

    காப்பர் சல்பைடில் உள்ள சல்பர்  

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  6. 25C ல் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு 

    (a)

    1.00 x 1014

    (b)

    1.00 x 10-14

    (c)

    1.00 x 104

    (d)

    1.00 x 10-4

  7. TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.

    (a)

    தாது உப்பு

    (b)

    வைட்டமின்

    (c)

    கொழுப்பு அமிலம்

    (d)

    கார்போஹைட்ரேட்

  8. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

    (a)

    வேர்

    (b)

    தண்டு 

    (c)

    இலைகள் 

    (d)

    மலர்கள் 

  9. ஆக்ஸானின் பிளாஸ்மா சவ்வு  _________________ எனப்படும்.

    (a)

    ஆக்ஸோலெம்மா 

    (b)

    ஆக்சோ பிளாசம் 

    (c)

    மையலின் உறை 

    (d)

    ஸ்வான் செல்கள் 

  10. ___________________ கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது 

    (a)

    ஆக்சின் 

    (b)

    அபிசிசிக் அமிலம் 

    (c)

    எத்திலின் 

    (d)

    சைட்டோகைனின் 

  11. உயிரித்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?

    (a)

    உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி 

    (b)

    வாழும் உயிரினங்கள் 

    (c)

    வைட்டமின்கள் 

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  12. குறிப்புகளை சேகரித்து, தொகுத்து, அச்செடுக்க பயன்படும் செயலி _________ ஆகும்.

    (a)

    பெயிண்டு 

    (b)

    ஸ்கிராச்சு

    (c)

    நோட்பேடு

    (d)

    லினக்ஸ்

  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. அண்மைப் புள்ளி என்பது யாது?

  15. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

  16. ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.

  17. அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கண்டறிக.

  18. வெப்பநிலை உயர்த்தும்பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

  19. எத்தனாயிக் அமிலத்தின் பயன்களை எழுதுக.

  20. வெண்ட்ரிக்கிளிலிருந்து வெளிச் செல்லும் முக்கியத் தமனிகளில் காணப்படும் வால்வு எது?

  21. மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.

  22. புற்று நோய்க்கான தடைக்காப்பு சிகிச்சை முறையை கூறு.

  23. தாஜ்மகால் எவ்வாறு அமிலமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது?

  24. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 4 = 28
  25. வெப்ப ஆற்றல் மாற்றத்தின் சிறப்பு அம்சங்கள் யாவை?

  26. அதிக பளுவதால் என்றால் என்ன?

  27. Al2(SO4)3 ல் உள்ள ஆக்சிஜனின் சதவீத இயைபைக் காண்க. (Al = 27, O = 16, S = 32).

  28. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?

  29. பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.

    (i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
    (ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
    (iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?

  30. அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?

  31. முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
    i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
    ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
    ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
    iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?

  32. கிவி பறவையின் சிதைவடைந்த இறக்கைகள், ஒரு பெறப்பட்ட பண்பு. ஏன் அது பெறப்பட்ட பண்பு என அழைக்கப்படுகிறது?

  33. DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.

  34. "Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    3 x 7 = 21
    1. 'g' மற்றும் 'G' இவற்றிற்கிடையே உள்ள தொடர்பினைத் தருவி. 

    2. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

    1. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.

    2. கீழ்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
      அ. NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை
      ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை
      இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை
      ஈ. எத்தனாலின் எரிதல் வினை.

    1. சாறேற்றத்தினை படத்துடன் விளக்குக.

    2. வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (10th Standard Science Public Model Question Paper June 2020)

Write your Comment