ALL Chapter 2 Marks

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 168
    Answer All The Following Question:
    84 x 2 = 168
  1. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?

  2. இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.

  3. இரட்டை விசைகள் அல்லது இரட்டை என்பது யாது?

  4. தோற்ற எடை என்றால் என்ன?

  5. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?

  6. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?

  7. ஒளிவிலகல் ஏற்படக் காரணம் என்ன?

  8. நிறமாலை எவ்வாறு தோன்றுகிறது?

  9. பாயில் விதியைக் கூறுக.

  10. உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?

  11. வெப்பநிலை-வரையறு.

  12. திடப்பொருளில் ஏற்படும் வெப்ப விரிவின் வகைகள் யாவை?

  13. மின்னோட்டத்தின் அலகை வரையறு.

  14. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

  15. மின்கூறுகள் யாவை?

  16. LED பயன்படும் சில சாதனங்களைக் கூறு.

  17. அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?

  18. மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?

  19. ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.

  20. கேட்குநருக்கும் ஒலி மூலத்தை சார்பியக்கத்தின் வகைகள் யாவை?

  21. பிட்ச் பிளண்ட் (pitch blende) தாதுப் பொருளில் உள்ள கதிரியக்கப் பொருள் யாது?

  22. எங்கு, எப்போது முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது?

  23. கியூரி-வரையறு.

  24. இந்திய அணுமின் நிலையங்களைப் பற்றி குறிப்பு வரைக.

  25. ஒப்பு அணுநிறை - வரையறு 

  26. அணுக்கட்டு எண் – வரையறு.

  27. வேற்றணு மூலக்கூறு என்றால் என்ன? உதாரணம் கொடு.

  28. மோல் வரையறு.

  29. A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B. என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.

  30. A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப்பயன்படும். A மற்றும் B என்ன?

  31. நேர்மின் அயனி, எதிர்மின் அயனி வேறுபடுத்துக.

  32. ஊது உலையில் உருக்கிப்பிரித்தலை விவரி.

  33. கரைசல் – வரையறு

  34. குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?

  35. 20 கி சர்க்கரையை 40 கி நீரில் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அக்கரைசலின் செறிவை நிறை சதவீதத்தில் காண்.

  36. நீரை வெப்பப்படுத்தும்போது குமிழிகள் உருவாகின்றன. ஏன்?

  37. பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும் பொழுது வெண்மை நிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச் சமயன்பாட்டைத் தருக.

  38. வெப்பநிலை உயர்த்தும்பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

  39. ஒரு வேதிவினை நடைபெறும்போது நிகழ்வதென்ன?

  40. சேர்க்கை வினைக்கும் சிதைவு வினைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

  41. எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.

  42. சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக.

  43. பல் இன வளையச் சேர்மம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  44. எஸ்டராக்குதல் வினையை எழுதுக.

  45. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?

  46. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?

  47. பசுங்கணிகத்தின் பணிகள் யாவை?

  48. மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பை படத்துடன் விளக்கு.

  49. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக

  50. அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது ?

  51. பாலூட்டிகளின் இரு முக்கிய பண்புகளைக் குறிப்பிடுக.

  52. அட்டையில் கரு வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகின்றன?

  53. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?

  54. இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது ?

  55. இதய சுழற்சி என்றால் என்ன?

  56. ஒற்றை இரத்த ஓட்டம் என்றால் என்ன?

  57. இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.

  58. மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.

  59. செயல்பாட்டின் அடிப்படையில் நரம்பு செல்லினை வகைப்படுத்து.

  60. நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் என்றால் என்ன?

  61. “போல்டிங்” என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?

  62. பாராதார்மோனின் பணிகள் யாவை?

  63. கருவுறாக் கனியாதல் என்றால் என்ன? எ.கா. தருக. 

  64. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள செல்களையும் ஹார்மோனையும் கூறு.

  65. இனச்செல் உருவாக்கம் என்றால் என்ன?

  66. கருவுறுதலின் முக்கியத்துவம் யாது?

  67. இடியோகிராம் என்றால் என்ன?

  68. மாலாவின் கன்னத்தில் மிகப்பெரிய வடு ஒன்று காணப்பட்டது. அது தன்னுடைய கல்லூரி நாட்களில் அவள் ஒரு தீவிபத்தினை சந்திக்க நேர்ந்ததால் ஏற்பட்டது. மேலும் தன் கன்னத்திலும் வடுவினை நினைத்து வருத்தப்பட்டாள். மேலும் அவள் தன்னுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டாள். மருத்துவரும், ''தாங்கள் இந்தவிடுவினை நினைத்து வருத்தப்பட வேண்டாம். இது பெறப்பட்ட பண்பாகும்.'' எனக் கூறி அனுப்பி விட்டார்.
    (அ) பெறப்பட்ட பண்பு என்றல் என்ன?
    (ஆ) மரபுப் பண்பு என்றால் என்ன?

  69. சுயபடைப்புக் கோட்பாடு [அல்லது] உயிரிலிப் பிறப்பு என்றால் என்ன?

  70. எச்ச உறுப்புகளுக்கு சில உதாரணங்கள் தருக.

  71. தூய வரிசை-வரையறு.

  72. ஜீன் சிகிச்சையின் வகைகள் யாவை?

  73. மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?

  74. இன்சுலின் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது?

  75. உடல் பருமக் குறியீடு என்பது யாது?

  76. எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையினை கூறு.

  77. வன உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  78. புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?

  79. ஊரணிகள் என்பன யாவை?

  80. சூரிய நீர் சூடேற்றி மின்சாரம் தயாரிப்பதில்லை, காரணம் கூறு.

  81. திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுதுக?

  82. ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?

  83. நோட்பேடு மற்றும் பெயிண்ட் செயலியின் பயன்பாடுகளை எழுதுக.

  84. ஸ்கிரிப்ட் எடிட்டரைப் பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment