மாதிரி வினாத்தாள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    12 x 1 = 12
  1. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள்  VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

    (a)

    VB = VG = VR

    (b)

    VB > VG > VR

    (c)

    VB < VG < VR

    (d)

    VB < VG > VR

  2. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

    (a)

    X அல்லது –X

    (b)

    Y அல்லது –Y

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) அல்லது (ஆ)

  3. மின்தடையின் SI அலகு ______.

    (a)

    மோ 

    (b)

    ஜூல்

    (c)

    ஓம் 

    (d)

    ஓம் மீட்டர் 

  4. அணுக்கருவிற்கும் அயனியின் வெளிக்கூட்டு எலக்ட்ரானுக்கும் இடையே உள்ள தொலைவு 

    (a)

    அணு ஆரம் 

    (b)

    அயனி ஆரம் 

    (c)

    சகப்பிணைப்பு ஆரம் 

    (d)

    (ஆ) மற்றும் (இ)

  5. நீர் வெறுக்கும் சேர்மங்கள் ______________ ஆக பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    ஆக்சிஜனேற்றி 

    (b)

    ஒடுக்கி 

    (c)

    கார்பாக்சில் நீக்க கரணி

    (d)

    உலர்த்தி 

  6. வேதியியலில் துரு என்பது 

    (a)

    நீரேற்றப்பட்ட பெர்ரஸ் ஆக்ஸைடு 

    (b)

    பெர்ரஸ் ஆக்ஸைடு 

    (c)

    நீரேற்றப்பட்ட பெர்ரிக் ஆக்ஸைடு

    (d)

    பெர்ரிக் ஆக்ஸைடு

  7. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?

    (a)

    நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு  அமிலத்தின் சோடிய உப்பு

    (b)

    சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு

    (c)

    டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+

    (d)

    கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.

  8. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.

    (a)

    பசுங்கணிகம் 

    (b)

    மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்

    (c)

    புறத்தோல் துளை 

    (d)

    மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு 

  9. தானியங்கு நரம்பு மண்டலத்தை மூளையிலுள்ள _________________ கட்டுப்படுத்துகிறது.

    (a)

    பெருமூளை 

    (b)

    பான்ஸ் 

    (c)

    ஹைப்போதலாமஸ் 

    (d)

    முகுளம் 

  10. ___________________ கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது 

    (a)

    ஆக்சின் 

    (b)

    அபிசிசிக் அமிலம் 

    (c)

    எத்திலின் 

    (d)

    சைட்டோகைனின் 

  11. rDNA என்பது ____.

    (a)

    ஊர்தி DNA 

    (b)

    வட்ட வடிவ DNA 

    (c)

    ஊர்தி DNA  மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை 

    (d)

    சாட்டிலைட் DNA 

  12. படம் வரைவதற்கும், தொகுத்தலுக்கும் தேவையான செயலி ________ ஆகும்.

    (a)

    நோட்பேடு

    (b)

    பெயிண்ட்

    (c)

    ஸ்கிராச்சு

    (d)

    விண்டோஸ் OS

  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. குவிலென்சின் வளைவுமையத்தில் பொருள் வைக்கப்படும் போது ஏற்படும் பிம்பத்தின் தன்மையை படம் வரைத்து காட்டு.

  15. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

  16. அடர்குறை மற்றும் அடர்மிகு ஊடகம் என்றால் என்ன?

  17. அணுக்கட்டு எண் – வரையறு.

  18. மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.

  19. சாதாரண சோப்பை கடின நீரில் பயன்படுத்த இயலாது. ஏன்?

  20. மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்காலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.

  21. மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.

  22. புற்றுநோய் கட்டிகளின் வகைகள் யாவை?

  23. 3R முறை என்பது யாது?

  24. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 4 = 28
  25. வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?

  26. ஒரு 6A மின்னோட்டம் உலோகக் கம்பியின் வழியாக பாய்கிறது. 2 நிமிடங்கள் மின்னோட்டம் பாய்ந்தால் ஏற்படும் மின்சுமை யாது?

  27. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
    CaCO3 ➝ CaO + CO2
    அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
    ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிறையைக் கணக்கிடு.
    இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

  28. a. HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
    b. இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
    c. இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?

  29. பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.

    (i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
    (ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
    (iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?

  30. அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?

  31. முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
    i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
    ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
    ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
    iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?

  32. வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

  33. உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.

  34. "Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    3 x 7 = 21
    1. நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதிக்கு எடுத்துக்காட்டுடன் தருக.

    2. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

    1. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.

    2. சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக.

    1. 'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரதம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?

    2. மரபுசார் ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதன் நோக்கங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - II (10th Standard Science Model Question Paper Part - II)

Write your Comment