Important Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 180

    Section - I

    10 x 1 = 10
  1. கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது

    (a)

    பொருளின் எடை

    (b)

    கோளின் ஈர்ப்பு முடுக்கம்

    (c)

    பொருளின் நிறை

    (d)

    அ மற்றும் ஆ

  2. ஒரு கத்தியை கூர் செய்யும் போது சாணை பிடிக்கும் கருவியின் சக்கரத்தின் விளிம்பிற்கு தொடு புள்ளியில் உண்டாகும் பொறிகள் இதற்கு எடுத்துக்காட்டு.

    (a)

    ஓய்வில் நிலைமம்

    (b)

    இயக்கத்தில் நிலைமம்

    (c)

    திசையில் நிலைமம்

    (d)

    செலுத்தப்பட்ட விசை

  3. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.

    (a)

    நேர்க்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    நேர்க்குறி (அ) எதிர்க்குறி

    (d)

    சுழி

  4. பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இதன் வழியாகவே விழித்திரையை அடைகின்றன.

    (a)

    சிலியா தசைகள்

    (b)

    பாவை

    (c)

    கார்னியா

    (d)

    ஐரிஸ்

  5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

    (a)

    A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C

    (b)

    A\(\rightarrow\)B, A\(\rightarrow\)C, B\(\rightarrow\)C

    (c)

    A\(\rightarrow\)B, A\(\leftarrow\)C, B\(\rightarrow\)C

    (d)

    A\(\leftarrow\)B, A\(\rightarrow\)C, B\(\leftarrow\)C

  6. எந்த வெப்பநிலையில் செல்சியஸ் வெப்பநிலையும் ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் சமம்?

    (a)

    400

    (b)

    -400

    (c)

    00

    (d)

    1000

  7. மின்தடையின் SI அலகு ______.

    (a)

    மோ 

    (b)

    ஜூல்

    (c)

    ஓம் 

    (d)

    ஓம் மீட்டர் 

  8. ஒரு தொடர் இணைப்புச் சுற்றில் உள்ள மூன்று மின்தடைகளின் மதிப்பு 140,250 மற்றும் 220. மொத்த மின்தடை _____

    (a)

    330

    (b)

    610

    (c)

    720

    (d)

    ஏதுமில்லை

  9. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் ____.

    (a)

    330 மீவி-1

    (b)

    660 மீவி-1

    (c)

    156 மீவி-1

    (d)

    990 மீவி-1

  10. ஒலிக்கும் மணி அல்லது ட்ரம் இசைக்கருவி 

    (a)

    மின்சாரத்தை உருவாக்குகின்றன.

    (b)

    எதிரொலியை உருவாக்குகின்றன.

    (c)

    அதிர்வுகளால் ஒலியை உருவாக்குகின்றன.

    (d)

    ஏதுமில்லை 

  11. Section - II

    10 x 2 = 20
  12. இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.

  13. ஒரு சுருள் வில்லினை அமுக்கத் தேவையான விசை 25N எனில் சுருள் வில்லால் செலுத்தப்படும் எதிர்விசை எவ்வளவு?

  14. நிறப்பிரிகை வரையறு.

  15. லென்சு சமன்பாடு குறிப்பு வரைக.

  16. பாயில் விதியைக் கூறுக.

  17. வாயுக்களின் அடிப்படை விதிகள் யாவை?

  18. மின்னோட்டத்தின் அலகை வரையறு.

  19. மின்கூறுகள் யாவை?

  20. எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

  21. டாப்ளர் விளைவு வரையறு.

  22. Section - III

    10 x 4 = 40
  23. கன உந்து (Heavy vehicle) ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் சம இயக்க ஆற்றலுடன் பயணிக்கின்றன. கன உந்தின் நிறையானது இரு சக்கர வாகன நிறையினை விட நான்கு மடங்கு அதிகம் எனில், இவைகளுக்கிடையே உள்ள உந்த வீதத்தை கணக்கிடுக.

  24. இரு கோள்களின் நிறைகள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் ஆர விகிதம் 1:2 எனில் கோள்களின் மீதான புவி ஈர்ப்பு முடுக்கத்தின் விகிதத்தைக் காண்க.

  25. ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
    1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
    2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

  26. ஒரு குவி லென்சின் திறன் +6D மற்றும் ஒரு குழி லென்சின் திறன்-4D சேர்த்து வைக்கப்படுகிறது.இரு லென்சுகளின் கட்டமைப்பின் திறன் யாது?

  27. காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்புவெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)

  28. வெப்ப சமநிலை என்றால் என்ன?

  29. இரு மின் தடையாக்கிகளை பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 2 Ω. தொடரிணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 9 Ω. இரு மின் தடைகளின் மதிப்புகளையும் கணக்கிடு.

  30. ஒரு நீர் சூடேற்றி 30 நிமிடத்தில் 120 V-ல் 1.2 kWh ஆற்றலை எடுத்துக்கொள்கிறது எனில் அதனால் நுகரப்பட்ட மின்னோட்டம் யாது? 

  31. ஒலியானது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?

  32. 10o C-ல் நீங்கள் 0.274 விநாடி நேரத்தில் ஓர் எதிரொலியை கேட்டால், அதன் எதிரொலிக்கும் பரப்பு எவ்வளவு தொலைவில் இருக்கும்?

  33. Section - IV

    10 x 7 = 70
  34. பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.

  35. திருப்புத்திறன் நடைமுறை வாழ்க்கையில் செயல்படும் சில அமைப்புகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  36. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.

  37. ஒரு எளிய நுண்ணோக்கியில் பிம்பம் உருவாதலை படத்துடன் விவரி.

  38. திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.

  39. திரவம் மற்றும் வாயுவில் வெப்ப விரிவு ஏற்படுவதை விவரி.

  40. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை விளக்கவும். (படம் தேவையில்லை)

  41. LED தொலைக்காட்சியைப் பற்றி விவரி.

  42. எதிரொலி என்றால் என்ன?
    அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.
    ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக.
    இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க?

  43. டாப்ளர் விளைவின் பயன்பாடுகளை விவரி.

  44. Section - V

    5 x 7 = 35
  45. 5 கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.

  46. ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக் கற்றையானது 0.3 மீ குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ என்ற தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்துகிறது எனில் பொருளின் தொலைவைக் கணக்கிடுக.

  47. 70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி-லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.

  48. இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?

  49. 90 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது ஒலியின் திசைவேகத்தில் (1/10) மடங்கு வேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் உணரப்படும் அதிர்வெண் என்ன?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020  ( 10th Standard Science Tamil Medium model Question Paper Full Chapter 2020 )

Write your Comment