மாதிரி வினாத்தாள் பகுதி - III

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?

    (a)

    புரப்பீன்

    (b)

    ஈத்தைன்

    (c)

    பென்சீன்

    (d)

    ஈத்தேன்

  2. n=6 எனில், எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் சரியான வரிசை

    (a)

    ns → (n – 2) f → (n – 1)d → np

    (b)

    ns → (n – 1) d → (n – 2) f → np

    (c)

    ns → (n – 2) f → np → (n – 1) d

    (d)

    இவை எதுவும் சரியல்ல

  3. Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்

    (a)

    +169 kcal mol-1

    (b)

    - 169 kcal mol-1

    (c)

    + 527 kcal mol-1

    (d)

    - 527 kcal mol-1

  4. ஆர்த்தோ, பாரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.

    (a)

    அவைகள் உட்கரு சுழற்சி ஐசோடோப்புகள் (மாற்றியங்கள்)

    (b)

    ஆர்த்தோ மாற்றியம் பூஜ்ஜிய உட்கரு சுழற்சியையும், பாரா மாற்றியம் ஒரு உட்கரு சுழற்சியும் கொண்டுள்ளது.

    (c)

    குறைந்த வெப்பநிலை, பாரா மாற்றியத்திற்கு சாதகமாக உள்ளது.

    (d)

    பாரா மாற்றியத்தின் வெப்ப கடத்துதிறன், அதன் ஆர்த்தோ மாற்றியத்தை விட 50% அதிகம்

  5. சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

    (a)

    ஆல்கஹால்

    (b)

    நீர்

    (c)

    மண்ணெண்ணெய்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  6. பின்வருவனவற்றை பொருத்துக.

    A 1 atm 1 6894.76 pa
    B 1 mm Hg 2 105 pa 
    C 1 bar 3 133.322 pa
    D 1 psi 4 101325 pa
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    3 4 2 1
    (d)
    A B C D
    4 3 2 4
  7. ஒரு வெப்பமாறாச் செயல்முறையில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை? 

    (a)

    q = w

    (b)

    q = 0

    (c)

    E = q

    (d)

    P\(\triangle \)V=0

  8. கீழ்கண்ட வினைகளின் சமநிலை மாறிலிகள்:
    N2 + 3H2 ⇌ 2NH3 ; K1
    N2 + O2 ⇌ 2NO ; K2
    H2 + ½O2 ⇌ H2O ; K3
    2 NH3 + 5/2 O2  2NO + 3H2O, will be
    என்ற வினையின் சமநிலை மாறிலி மதிப்பு;

    (a)

    \({ k }_{ 2 }^{ 3 }\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)

    (b)

    K1\(\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 2 } } \)

    (c)

    \({ K }_{ 2 }\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 1 } } \)

    (d)

    K2\(\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)

  9. கூற்று (A) : நீர் மூலக்கூறு 'V' வடிவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் CO2 நேர்க்கோட்டு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
    காரணம் (R): வேதிப்பிணைப்பினைப் பற்றிய கொள்கையை ப் பயன்படுத்தி இவற்றை விளக்க இயலும்

    (a)

    (A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்

    (b)

    (A) சரி, (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம் அல்ல

    (c)

    (A) சரி, (R) தவறு

    (d)

    (A) தவறு (R) தவறு

  10. பின்வரும் எதைக் கொண்டு கரிமச் சேர்மங்களின் அமைப்பினை குறித்துக் காட்டலாம்?

    (a)

    கொடு பிணைப்பு அமைப்பு

    (b)

    குறுக்கப்பட்ட அமைப்பு

    (c)

    பிணைப்புக் கோடு அமைப்பு

    (d)

    இவை அனைத்தும்

  11. கருக்கவர் திறனின் இறங்கு வரிசை

    (a)

    OH- > NH2- > -OCH3 > RNH2

    (b)

    NH2- > OH- > -OCH3 > RNH2

    (c)

    NH2- > CH3O- > OH- > RNH2

    (d)

    CH3O- > NH2- > OH- > RNH2

  12. பின்வருவனவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.

    (a)

    கார்பாக்சிலிக் அமிலத்தின் சோடியம் உப்பு மற்றும் சுண்ணாம்பு கலவையை வெப்பப்படுத்தும் போது ஆல்கேன்கள் உருவாகின்றன.

    (b)

    உருவாகும் ஆல்கேனில் கார்பாக்சிலிக் அமிலத்தை விட ஒரு கார்பன் அணு அதிகமாக இருக்கும்

    (c)

    கார்பாக்சிலிக் தொகுதியை நீக்கும் இச்செயல்முறை கார்பாக்சில் நீக்கம் எனப்படும்.

    (d)

    மேற்கண்ட அனைத்தும் தவறு

  13. பின்வரும் சேர்மங்களுள் எச்சேர்மமானது OH- அயனியாயால் கருக்கவர்பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படும் போது சுழிமாய்க் கலவையைத் தரும்,
    i)  \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ CH } -{ CH }_{ 2 }Br\)

    (a)

    (i)

    (b)

    (ii) and (iii)

    (c)

    (iii)

    (d)

    (i) and (ii)

  14. குடிநீரில் புளூரைடு அயனிச் செறிவு எவ்வளவு இருந்தால் பற்களில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்? 

    (a)

    1 ppm  மேல் 

    (b)

    2 ppm மேல் 

    (c)

    3 ppm மேல் 

    (d)

    50 ppm மேல் 

  15. நல்லியல்புக் கரைசலுக்கு பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தவறானது

    (a)

    \(\triangle H \)கலத்தல் =0

    (b)

    \(\triangle U \)கலத்தல்=0

    (c)

    \(​​\triangle P \)கண்டறியப்பட்டது=Pபிரளல்ட் விதி கணக்கிடப்பட்டது=0

    (d)

    \(\triangle G \)கலத்தல் =0

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. H2SOன் சமான நிறையைக் கண்டறி.

  18. உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?

  19. மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.

  20. நவீன தனிம வரிசை அட்டவணையில் s -தொகுதி தனிமங்களின் இடம் பற்றி எழுதுக.

  21. வாயு மற்றும் ஆவி இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு யாது?

  22. நல்லியல்பு வாயுச் சமன்பாட்டின் படி பகுதி அழுத்தம் என்பது எதற்குச் சமம்?

  23. லாசிகன் முறையில் கரிமச்சேர்மங்களில் காணப்படும் நைட்ரஜனைக் கண்டறிவதில் நடைபெ றும் வேதிவினைகளை விளக்குக.

  24. குளோரோபார்ம் ஆனது சிறிதளவு எத்தில் ஆல்கஹால் உள்ள அடர் நிறமுடைய கலன்களில் வைக்கப்படுகிறது. ஏன்?

  25. மோலாலிட்டினை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு எது?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. பொட்டாசியம் டை குரோமேட்டின் சமான நிறையினைக் கணக்கிடுக. அமில ஊடகத்தில் ஒடுக்க அரைவினை.
    Cr2O72- + 14H + 6e- ⟶ 2Cr3+ + 7H2O

  28. பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு

  29. இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.

  30. பின்வருவனவற்றிற்கு தகுந்த விடையளி.
    (I) மிக அதிக எலட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமம்
    (II) மிகக்குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம்

  31. ஐசோடோப்புகள் (மாற்றியங்கள்) என்றால் என்ன? ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளின் பெயர்களை எழுதுக.

  32. கார உலோகங்கள் எவ்வாறு பின்வருவனவற்றுடன் வினைபுரிகின்றன?
    (i) நீருடன் வினை
    (ii) ஆல்கஹால் உடன்
    (iii) ஆல்கைன்களுடன் வினை

  33. 2.98 atmல் 250சி ல் உள்ள எரிவாயு உலோகத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது அத்தொட்டி 12atm அழுத்தம் வரை மட்டுமே தாங்கி பின் அதிக அழுத்தத்தினால் வெடிக்க கூடியது அத்தொட்டி உள்ள கட்டிடத்தில் தீப்பிடிக்கும் போது அத்தொட்டி முதலில் வெடிக்குமா அல்லது உருகத் தொடங்குமா என கண்டறிக.(உலோகத்தின் உருகுநிலை 1100K)

  34. என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல்  (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின்  \(\triangle H^o _f\) கணக்கிடு. 

  35. SrCO3 (s) ⇌ SrO (s) + CO2(g), என்ற வினையில், 1002K ல் சமநிலை மாறிலி மதிப்பு KP = 2.2 \(\times \) 10–4.வினைக்கான KC மதிப்பினைக் கணக்கிடுக.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. ஒரு எலக்ட்ரானின் திசை வேகத்தது அளவிடுவதில் நிச்சயமற்ற தன்மை 5.7 x 105 ms -1. எனில் அதன் நிலையில் காணப்படும் நிச்சயமற்றத் தன்மையைக் கணக்கிடுக.

    2. பின்வருவனவற்றை விவரி. மேலும் தக்க காரணம் தருக
      (i) N-ன் அயனியாக்கும் ஆற்றல் O-ஐ விட அதிகம்.
      (ii) C-அணுவின் முதல் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பு B-அணுவை விட அதிகம்; அதே வேளையில் இதன் மறுதலைக் கூற்று இரண்டாம் அயனியாக்கும் ஆற்றலுக்கு உண்மையாகிறது.
      (iii) Be, Mg ஆகியவற்றின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் பூஜ்ஜியமாகும். மேலும் N (0.02eV) மற்றும் P (0.80eV) ஆகியவைகளுக்கும் இதன் மதிப்பு குறைவு.
      (iv) F(g) லிருந்து F-(g) உருவாவது வெப்ப உமிழ்வினையாகும். ஆனால் O(g)லிருந்து O2-(g) உருவாவது வெப்பக்கொள் வினையாகும்.

    1. ஹைட்ரஜன் பெராக்சைடு சாய்வு விச அமைப்பினைக் கொண்டுள்ளது. அதன் வடிவத்தை உருவகப்படுத்துக்க.

    2. கார உலோகங்களின் பின்வரும் பண்புகளை பற்றி எழுதுக.
      (i) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
      (ii) அணு மற்றும் அயனி ஆரங்கள்
      (iii) அயனியாக்கும் என்தால்பி

    1. பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
      அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது 
      ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது 
      இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது 

    2. 128.0 கிராம் ஆக்ஸிஜனை 00C லிருந்து 1000C க்கு வெப்பப்படுத்தும் போது \(\triangle U\) மற்றும்  \(\triangle H\) மதிப்புகளைக் கணக்கிடுக.தோராயமாக CV மற்றும் CP மதிப்புகள் முறையே 21J mol-1 k-1 மற்றும் 29J mol-1 k-1 (வேறுபாடானது 8J mol-1 k-1 இது தோராயமாக R மதிப்பிற்குச் சமம்.)

    1. பின்வரும் வினையினைக் கருதுக.
      Fe3+(aq) + SCN(aq) ⇌ [Fe(SCN)]2+(aq)
      Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x10-3m மற்றும் 8x10-4m என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2x10-4m சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக.

    2. மீத்தேனின் இனக்கலப்பை விவரி.

    1. கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?

    2. பென்சீனில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது. ஆனால் சேர்க்கை வினைகள் நடைப்பெறுகின்றன ஏன்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி III (11th Standard Chemistry Model Question Paper Part III)

Write your Comment