மாதிரி வினாத்தாள் பகுதி - V

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. 1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

    (a)

    66.25 g mol-1

    (b)

    44 g mol-1

    (c)

    24.5 g mol-1

    (d)

    662.5 g mol-1

  2. பின்வரும் d ஆர்பிட்டால் இணைகளில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுகளின் வழியே  பெற்றிருப்பது எது?

    (a)

    \(d_{Z^{2}}\),dxy

    (b)

    dxy,dyz

    (c)

    \(d_{Z^{2}}\),\(d_{x^{2}-y^{2}}\)

    (d)

    dxy,\(d_{x^{2}-y^{2}}\)

  3. நேர் குறி எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளத் தனிமம்

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    சோடியம்

    (c)

    ஆர்கான்

    (d)

    புளூரின்

  4. வேதிவினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில் அமையாத (non-stoichiometric) ஹைட்ரைடுகளை உருவாக்குபவை

    (a)

    பெலேடியம், வெனேடியம்

    (b)

    கார்பன், நிக்கல்

    (c)

    மாங்கனீசு, லித்தியம்

    (d)

    நைட்ரஜன், குளோரின்

  5. கூற்று : BeSO4 நீரில் கரைகிறது, ஆனால் BeSO4 நீரில் கரைவதில்லை.
    காரணம் : தகுதியில் Be லிருந்து Ba வரை செல்ல செல்ல நீரேற்ற ஆற்றல் குறைகிறது.மேலும் படிகக்கூடு ஆற்றல் மாறாமல் உள்ளது.      

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகமாகமாகும்.      

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை.   

    (c)

    கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.  

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.  

  6. ஹீலியத்தை திரவமாக்க பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் முறை 

    (a)

    லிண்டே முறை 

    (b)

    ஜூல் -தாம்சன் விளைவு 

    (c)

    கிளாட் முறை 

    (d)

    கார்னாட் முறை 

  7. பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?

    (a)

    H=G-TS

    (b)

    G=H-TS

    (c)

    \(G= \triangle E- T\triangle S\)

    (d)

    G=V-TS

  8. N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் \(\frac { { K }_{ c } }{ { K }_{ p } } = ?\)

    (a)

    \(\frac { 1 }{ RT } \)

    (b)

    \(\sqrt {RT }\)

    (c)

    RT

    (d)

    (RT)2

  9. ஒரு மோல் K+ உருவாவதற்கு தேவைப்படும் ஆற்றலின் மதிப்பு

    (a)

    -436.21 KJ

    (b)

    418.81 KJ

    (c)

    -348.56 KJ

    (d)

    718.18 KJ

  10. கூற்று (A) : அனைத்து முக்கியமான உயிர்வேதி வினைகளும் கரிமவேதி வினையாகும்.
    காரணம் (R): இவ்வினைகளின் விளைவாக பாஸ்போலிப்பிடுகள், லிப்போ புரோட்டீன்கள், கிளைக்கோ லிப்பிடுகள் போன்ற முக்கியமான கரிம வேதிப்பொருள்கள் உருவாகின்றன.

    (a)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்

    (b)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம் அல்ல

    (c)

    (A) சரி, காரணம் (R) தவறு

    (d)

    (A) மற்றும் (R) இரண்டும் தவறு

  11. (A) CH3CH2CH2Br + KOH → CH3 - CH= CH2 + KBr +H2O
    (B) (CH3)3CBr + KOH → (CH3)3 COH + KBr

    மேற்கண்டுள்ள வினைகளுக்கு, பின்வரும் எந்த கூற்று சரியானது?

    (a)

    (A) நீக்க வினை (B) மற்றும் (C) பதிலீட்டு வினைகள்

    (b)

    (A) பதிலீட்டு வினை (B) மற்றும் (C) நீக்க வினைகள்

    (c)

    (A) மற்றும் (B) நீக்க வினைகள் மற்றும் (C) சேர்க்கை வினை

    (d)

    (A) நீக்க வினை (B) பதிலீட்டு வினை மற்றும் (C) சேர்க்கை வினை

  12. பின்வருவற்றுள் இரண்டு பென்சீன் வளையங்களை உடைய  சேர்மம் எது?     

    (a)

    ஆந்தரசீன்    

    (b)

    நாப்தலீன்    

    (c)

    டொலுவீன்   

    (d)

    பிரிடின்   

  13. ன் IUPAC பெயர்

    (a)

    2-புரோமோ பென்ட் – 3 – ஈன்

    (b)

    4-புரோமோ பென்ட் – 2 – ஈன்

    (c)

    2-புரோமோ பென்ட்– 4 – ஈன்

    (d)

    4-புரோமோ பென்ட்– 1 – ஈன்

  14. பின்வருவனவற்றை பொருத்துக.

    அடுக்குகள்  புவிப்பரப்பிலிருந்து உயரம் 
    A. தெர்மோஸ் பியர்  1. 0-10 km 
    B . மீஸோஸ் பியர்  2 10-50 km 
    C. ஸ்ட்ரோபோஸ் பியர்  3. 50-85 km 
    D. ட்ரோபோஸ் பியர்  4. 85-500 km 
    (a)
    A    B    C    D  
    1 2 3 4

     

    (b)
    A    B    C    D  
    4 3 2 1
    (c)
    A    B    C    D  
    2 3 1 4
    (d)
    A    B    C    D  
    1 4 3 2
  15. இரண்டு திரவங்கள் X மற்றும் Y ஆகியன கலக்கப்படும்போது வெதுவெதுப்பான கரைசலைத் தருகின்றன. அந்தக் கரைசலானது

    (a)

    நல்லியல்புக் கரைசல் 

    (b)

    நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து நேர்க்குறி விலக்கத்தை காட்டுகிறது.

    (c)

    நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.

    (d)

    இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. எலக்ட்ரான் கொள்கைப்படி ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினைகள் என்றால் என்ன?

  18. டாபரீனர் வகைப்பாட்டின் குறைபாடுகள் யாவை?

  19. கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
    (i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
    (ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு

  20. பெரிலியம் ஹைட்ராக்சைடின் ஈரியல்புத் தன்மைக்கான சமன்பாடுகளை எழுது.

  21. வாயு மற்றும் ஆவி இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு யாது?

  22. பல்வேறு மேலும் வினைகளைப் பற்றிய ஆய்வு முடிவுகளில் அடிப்படையில் நிறைத்தாக்க விதியினை உருவாக்கியவர்கள் யார்?

  23. கரிமச்சேர்மங்களை அவற்றின் அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தலை விவரி.

  24. DDT பூச்சிக்கொல்லியின் IUPAC பெயர் என்ன? பெரும்பலான நாடுகளில் இவற்றின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. ஏன்?

  25. நார்மாலிட்டியை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு எது?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. ஒரு சேர்மம் பகுப்பாய்வில் பின்வரும் சதவீத இயையைக் கொண்டுள்ளது. C =54.55%, H =9.09%, O=36.36% அச்சேர்மத்தின் எளிய விகித வாய்ப்பாட்டினைக் கண்டறிக.

  28. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

  29. குவாண்டம் எண்களை அடிப்படையாகக் கொண்டு தனிம வரிசை அட்டவணையின் 5வது வரிசையில் 18 தனிமங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை நிறுவுக.

  30. குளோரினின் எலக்ட்ரான் ஏற்கும் என்தால்பி மதிப்பு 348 KJ mol-1 வாயநிலையில் உள்ள 17.5g குளோரின் அணுக்கள் முழுவதும் Cl- அயனியாக மாற்றப்படும்போது வெளியிடப்படும் ஆற்றலின் மதிப்பினை KJ ல் கணக்கிடுக.

  31. கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
    (அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
    (i) KMnO4 + H2O2
    (ii) CrCl3 + H2O →
    (iii) CaO + H2O →

  32. பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
    (i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
    (ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற

     

  33. நல்லியல்பு வாயுக்கள் என்பன யாவை? இயல்புவாயுக்கள் நல்லியல்பு வாயுக்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

  34. பின்வருவனவற்றிற்கு \(\triangle \)குறியீடுகளை 
    1. மீளாத தன்னிச்சையான செயல் 
    2. சமநிலையில் உள்ள மீள் செயல்முறை 
    3. துன்னிச்சையற்ற செயல் 

  35. 250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. 4f2 என்ற குறியீடு உணர்த்தும் பொருள் யாது? இதில் உள்ள எலக்ட்ரான்களுக்கு, நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் எழுதுக.

    2. அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.

    1. நீரின் இயற்பண்புகள் மற்றும் ஏதேனும் மூன்று வேதிப்பண்புகள் எழுதுக.

    2. காரமண் உலோகங்களின் பின்வரும் பொதுப் பண்புகளைப் பற்றி எழுதுக.
      (i) அணு மற்றும் அயனி ஆரம்
      (ii) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
      (iii) அயனியாக்கும் ஆற்றல்

    1. பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
      அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது 
      ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது 
      இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது 

    2. பின்வருவனவற்றைப் பற்றி குறிப்பு எழுதுக
      (i) உருகுதல் என்டரோபி
      (ii) ஆவியாதல் என்டரோபி
      (iii) புறவேற்றுமை வடிவமாறுதல் என்டரோபி

    1. 1L மூடிய கலனில் 28g N2 மற்றும் 6g H2 கலக்கப்படுகிறது. சமநிலையில் 17g NH3 உருவாகிறது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் எடையினை சமநிலையில்கணக்கிடுக.

    2. ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.

    1. ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.

    2. எதிர் - மார்கோனிகாப் விதி  (அ) பெராக்சைடு விளைவு (அ) கேராஸ்  விதியின் வினை வழிமுறைய எழுது.            

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி V (11th Standard Chemistry Model Question Paper Part V)

Write your Comment