பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  15 x 1 = 15
 1. 22.4 L கனஅளவு கொண்ட கொள்கலன்கள் A மற்றும் B யில் முறையே 8g O2 மற்றும் 8g SO2 வாயுக்கள் STP நிலையில் நிரப்பப்பட்டுள்ளது. எனில்

  (a)

  A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகள் சமம்.

  (b)

  B கலனிலுள்ள மூலக்றுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை விட அதிகம்

  (c)

  A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு இடைப்பட்ட விகிதம்2:1

  (d)

  B கலனிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை போல மூன்று மடங்கு அதிகம்

 2. ஒரு துணைக்கூட்டில் உள்ள அதிகபட்சமான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை  குறிப்பிடுவது

  (a)

  2n2

  (b)

  2l  + 1

  (c)

  4l + 1

  (d)

  மேற்கண்டுள்ள எதுவுமில்லை

 3. Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்

  (a)

  +169 kcal mol-1

  (b)

  - 169 kcal mol-1

  (c)

  + 527 kcal mol-1

  (d)

  - 527 kcal mol-1

 4. நீர் வாயு என்பது

  (a)

  H2O (g)

  (b)

  CO + H2O

  (c)

  CO + H2

  (d)

  CO + N2

 5. பின்வரும் சேர்மங்களில் எதற்கு “Blue John” எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது?

  (a)

  CaH2

  (b)

  CaF2

  (c)

  Ca3(PO4)2

  (d)

  CaO

 6. ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது 

  (a)

  ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும் 

  (b)

  ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது  

  (c)

  குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும் 

  (d)

  குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும் 

 7. என்ட்ரோபியை அறிமுகப்படுத்திய வெப்ப இயக்கவியல் விதி 

  (a)

  முதல் விதி 

  (b)

  இரண்டாம் விதி 

  (c)

  மூன்றாம் விதி 

  (d)

  பூஜ்ஜிய விதி 

 8. PCl5 ⇌ PCl3 + Cl2 என்ற வினையின், PCl5ன் சிதைவடைதல் பின்னம் x சமநிலையில்,
  PCl5 ன் தொடக்கச் செறிவு 0.5 மோலாக இருந்தால், சமநிலையில் வினைபடு பொருள்கள் மற்றும் வினைபடு பொருள்கள் மற்றும் வினைபடு பொருள்களின் மொத்த மோல்கள் எண்ணிக்கை

  (a)

  0.5 - x 

  (b)

  x + 0.5

  (c)

  2x + 0.5

  (d)

  x + 1

 9. பின்வரும் எந்த மூலக்கூறுகளில் மைய அணுவானது ஒற்றைப்படை எண்ணிக்கையில் இணைதிற எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது?

  (a)

  போரான் டிரை புளூரைடு

  (b)

  நைட்ரிக் ஆக்ஸைடு

  (c)

  பாஸ்பரஸ் பென்டா குளோரைடு

  (d)

  இவை அனைத்தும்

 10. கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை

  (a)

  நீராவி வாலை வடித்தல்

  (b)

  பின்ன வாலை வடித்தல்

  (c)

  கொதிநிலை மாறா வாலை வடித்தல்

  (d)

  வகையீட்டு வடித்து இறக்குதல்

 11. (A) CH3CH2CH2Br + KOH → CH3 - = CH2 + KBr +H2O
  (B) (CH3)3CBr + KOH → (CH3)3 COH + KBr

  மேற்கண்டுள்ள வினைகளுக்கு, பின்வரும் எந்த கூற்று சரியானது?

  (a)

  (A) நீக்க வினை (B) மற்றும் (C) பதிலீட்டு வினைகள்

  (b)

  (A) பதிலீட்டு வினை (B) மற்றும் (C) நீக்க வினைகள்

  (c)

  (A) மற்றும் (B) நீக்க வினைகள் மற்றும் (C) சேர்க்கை வினை

  (d)

  (A) நீக்க வினை (B) பதிலீட்டு வினை மற்றும் (C) சேர்க்கை வினை

 12. பல வளைய அரோமேட்டிக் ஹைட்ரோ   கார்பனுக்கான எடுத்துக்காட்டு        

  (a)

  பிரிடின்   

  (b)

  நாப்தலீன்    

  (c)

  பிர்ரோல்  

  (d)

  விளைய ஹெக்கேன்   

 13. எத்தில் பார்மேட்டை அதிகளவு RMgX உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது

  (a)

  \({ R }-\underset { \overset { | }{ O } }{ C } -{ R }\)

  (b)

  \({ R }-\underset { \overset { | }{ OH } }{ CH } -{ R }\)

  (c)

  R- CHO

  (d)

  R- O – R

 14. பசுமைக்குடில் விளைவு இல்ல நிலையில் பூமியின் புறப்பரப்பு வெப்பநிலை 

  (a)

  -220

  (b)

  -320

  (c)

  -180

  (d)

  00

 15. பின்வருவனவற்றுள் எந்த நீர்க்கரைசல், அதிக கொதிநிலையைக் கொண்டுள்ளது?

  (a)

  0.1 M KNO3

  (b)

  0.1 M Na3PO4

  (c)

  0.1 M BaCl2

  (d)

  0.1 M K2SO4

 16. பகுதி - II

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 2 = 12
 17. சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்குக.

 18. ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றல் குறைவாக க் காணப்படுகிறது. உன் விடைக்கான காரணத்தை நியாயப்படுத்துக.

 19. கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
  (i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
  (ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு

 20. பெரிலியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவை ஏறத்தாழ பூஜ்ய எலக்ட்ரான் நாட்ட மதிப்பை பெற்றுள்ளன. ஏன்?

 21. வாயு நிலைமையினை முழுமையாக விவரிக்க இயலும் நான்கு மாறிகள் யாவை?

 22. \(\triangle ng\) என்பதை பற்றி நீ அறிவதென்ன? 

 23. கார்பாக்ஸிலிக் அமிலங்களின் முதல் நான்கு படிவரிசைச் தொடர் சேர்மங்களின் மூலக்கூறுவாய்பாடு மற்றும் சாத்தியமுடைய அமைப்பு வாய்பாடுகளைத் தருக.

 24. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
  (i) 
  (ii) \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }Br+Na/Pb\rightarrow \)

 25. CCl4 கரைப்பானாக பயன்படுத்தப்பட்டால் அக்கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

 26. பகுதி - III

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 3 = 18
 27. கீழ்கண்ட சேர்மங்களில் உள்ள ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் காண்க.
  (i) நீர்
  (ii) ஹைட்ரஜன் பெராக்சைடு
  (iii) KO2
  (iv) OF2

 28. ஹைட்ரஜன் அணுவின் போர் வட்டப்பாதையின் சுற்றளவானது, அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானுக்கான டிபிராக்ளி அலைநீளத்தின் முழு எண் மடங்கிற்குச் சமம் எனக் காட்டுக.

 29. இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

 30. வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

 31. கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
  (அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
  (i) KMnO4 + H2O2
  (ii) CrCl3 + H2O →
  (iii) CaO + H2O →

 32. கார உலோக ஹாலைடுகள் அனைத்தும் அயனிப்படிகங்களாகும். எனினும் லித்தியம் அயோடைடு சகப்பிணைப்புப் பணப்பை காட்டுகிறது.

 33. ஒரு உலோகத்தினை ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்யும் போது ஹைட்ரஜன் உருவாகிறது. ஒரு மாணவன் இந்த வினையின் மூலம் 154.4x10-3 கனஅளவுள்ள வாயுவினை 742 mm Hg அழுத்தத்தில் மற்றும் 298K வெப்பநிலையில் சேகரிக்கிறான் எனக் கருதவும்.மாணவன் சேகரித்த ஹைட்ரஜன் வாயுவின் நிறை என்ன?

 34. பின்வரும் தரவுகளிலிருந்து படிகத்தின் படிக கூடு ஆற்றலை கணக்கிடுக 
  Ca (s)+Cl2(g) → CaCl2(s) ΔHf0 = − 795 kJ mol−1
  பதங்கமாதல் Ca(s) → Ca(g) ΔH10 = + 121 kJ mol−1
  அயனியாதல் Ca(g) → Ca2+(g) + 2e− ΔH20 = + 2422 kJ mol−1
  பிளத்தல் Cl2(g) → 2Cl(g) ΔH3 0 = + 242.8 kJ mol−1
  எலக்ட்ரான் நாட்டம் Cl (g) + e− → Cl− (g) ΔH4 0 = −355 kJ mol−1

 35. 250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.

 36. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
  1. பின்வருவனவற்றின் பயன்களை எழுதுக.
   அ] பெரிலியம் 
   ஆ] மெக்னீசியம் 
   இ]கால்சியம் 
   ஈ] ஸ்டிரான்சியம் 
   உ] பேரியம் 
   ஊ] ரேடியம் 

  2. எதிர் - மார்கோனிகாப் விதி  (அ) பெராக்சைடு விளைவு (அ) கேராஸ்  விதியின் வினை வழிமுறைய எழுது.            

  1. திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?

  2. பின்வருவனவற்றை விளக்குக.
   (i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
   (ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
   (iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு

  1. வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி

  2. உராய்வற்ற அழுத்தி பொருத்தப்பட்ட கலனில் உள்ள ஒரு வாயுவானது 1 atm வெளி அழுத்தத்திற்கு எதிராக 5 லிட்டர் கன அளவிலிருந்து 10 லிட்டருக்கு விரிவடைகிறது .இவ்வாறு நிகழும்போது அது 400J வெப்ப ஆற்றலை அதன்சூழலில் இருந்து உட்கவர்க்கிறது. அமைப்பின் அகஆற்றல் மாற்றத்தை கணக்கிடுக.

  1. ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? மூலக்கூறுக்கு இடைப்பட்ட மற்றும் மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பை விளக்குக.  

  2. BF3 லூயிஸ் வடிவமைப்பை வரைந்து, அது எவ்வாறு எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதிவிலக்கினைப் பெற்றுள்ளது என விவரி.

  1. ஆரப்பங்கீட்டு சார்பை தக்கச் சான்றுடன் விளக்குக.

  2. 298K வெப்பநிலையில் என்ற வினைக்கு A + B \(\rightleftharpoons \) C + D சமநிலை மாறிலியின் மதிப்பு 100. மேற்கண்டுள்ள நான்கு வினைப்பொருள்களின் துவக்கச் செறிவுமுறையே 1M எனில், வினைவிளை பொருள் Dயின் சமநிலைச் செறிவைக் கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Chemistry - Public Model Question Paper )

Write your Comment