மாதிரி வினாத்தாள் பகுதி - IV

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. 22.4 L கனஅளவு கொண்ட கொள்கலன்கள் A மற்றும் B யில் முறையே 8g O2 மற்றும் 8g SO2 வாயுக்கள் STP நிலையில் நிரப்பப்பட்டுள்ளது. எனில்

    (a)

    A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகள் சமம்.

    (b)

    B கலனிலுள்ள மூலக்றுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை விட அதிகம்

    (c)

    A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு இடைப்பட்ட விகிதம்2:1

    (d)

    B கலனிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை போல மூன்று மடங்கு அதிகம்

  2. E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

    (a)

    எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.

    (b)

    n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.

    (c)

    இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.

    (d)

    n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.

  3. ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)

    IE1 IE2 IE3 IE4 IE5
    577.5 1,810 2,750 11,580 14,820

     இத்தனிமானது

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    சோடியம்

    (c)

    அலுமினியம்

    (d)

    சிலிகான்

  4. வேதிவினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில் அமையாத (non-stoichiometric) ஹைட்ரைடுகளை உருவாக்குபவை

    (a)

    பெலேடியம், வெனேடியம்

    (b)

    கார்பன், நிக்கல்

    (c)

    மாங்கனீசு, லித்தியம்

    (d)

    நைட்ரஜன், குளோரின்

  5. நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)

    (a)

    Ca(CN)3

    (b)

    CaN2

    (c)

    Ca(CN)2

    (d)

    Ca3N2

  6. ஒரு கலனில் உள்ள வாய்வானது, ஒரு மிகச் சிறிய துளையின் வழியே வெளியேறும் நிகழ்வு

    (a)

    விரவுதல்

    (b)

    வெளியேற்றம்

    (c)

    நகருதல்

    (d)

    பாய்தல்

  7. 'q' அளவு வெப்பத்தை உறிஞ்சி 'W' அளவு வேலையைச் செய்தால் அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம் 

    (a)

    H

    (b)

    P\(\triangle\)V

    (c)

    V

    (d)

    E

  8. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், KP = 0.5 என்ற வினையினை கருதுவோம்
    PCl5(g) ⇌ PCl3 (g) + Cl2 (g)
    ஒவ்வொரு வாயுவின் தொடக்க பகுதி அழுத்தம் 1 atm உள்ளவாறு, மூன்று வாயுக்களையும் ஒரு கலனில் கலக்கினால், பின்வரும் கூற்றுகளில் எது சரியாக இருக்கும்.

    (a)

    அதிகளவு PCl3 உருவாகும்

    (b)

    அதிகளவு Cl2 உருவாகும்

    (c)

    அதிகளவு PClஉருவாகும்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  9. எண்ம விதி உருவாக காரணமாக அமைந்தது

    (a)

    வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்-லூயிஸ் அணுகுமுறை

    (b)

    வேதிப்பிணைப்பு பற்றிய ஹைய்ட்லர் -லண்டன் அணுகுமுறை

    (c)

    வேதிப்பிணைப்பு பற்றிய பாலிங் -ஸ்லேட்டர் அணுகுமுறை

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  10. சில சேர்மங்களில் கார்பன் இரட்டை மற்றும் முப்பிணைப்புகள் உருவாதலை கார்பனின் _________ மூலம் விளக்கலாம்.

    (a)

    SP மற்றும் SP2 இனக்கலப்பாதல்

    (b)

    SP2 மற்றும் SP3 இனக்கலப்பாதல்

    (c)

    SP2 மற்றும் SP இனக்கலப்பாதல்

    (d)

    SP3 மற்றும் SP2 இனக்கலப்பாதல்

  11. Hyper Conjucation இவ்வாறும் அழைக்கப்படுகிறது

    (a)

    பிணைப்பில்லா உடனிசைவு

    (b)

    பேக்கர் – நாதன் விளைவு

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    இவை எதுவுமில்லை

  12. பின்வரும் ஏதன் முன்னிலையில் பென்சீன் ஹைட்ரஜனு டன் வினைபட்டு வளைய ஹெக்சேனை த் தருகிறது?             

    (a)

    பிளாட்டினம்     

    (b)

    பொட்டாசியம் டைகுரோமேட்        

    (c)

    பொட்டாசியம் பெர்மாங்கனேட்      

    (d)

    பேயரின் காரணி   

  13. பின்வரும் வினையைக் கருதுக.
    CH3CH2CH2Br+NaCN→ CH3CH2CH2CN + NaBr
    இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்

    (a)

    எத்தனால்

    (b)

    மெத்தனால்

    (c)

    DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)

    (d)

    நீர்.

  14. பின்வருவனவற்றை பொருத்துக.

      வாயு   விளைவு
    A சல்பர்டையாக்சைடு 1 கண் எரிச்சல்
    B நைட்ரஜன் ஆக்சைடு 2 துணி இழை பாதிப்பு
    C கார்பன் மோனாக்சைடு 3 சுயநினைவிழத்தல்
    D கார்பன் டையாக்சைடு 4 குமட்டல்
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 1 4
    (c)
    A B C D
    1 4 2 3
    (d)
    A B C D
    4 3 2 1
  15. வாண்ட் ஹா ஃப் காரணி மதிப்பு 0.54 கொண்ட பென்சீனில், பீனால் மூலக்கூறுகள் இரட்டையாகின்றன. இணைதல் வீதம் என்ன

    (a)

    0.46

    (b)

    92

    (c)

    46

    (d)

    0.92

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. இணையும் வினைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  18. X,Y,Z மற்றும் A தனிமங்களின் அணு எண்கள் முறையே 4,8,7,மற்றும் 12 ஆகும். இவற்றை எலக்ட்ரான் கவர்தன்மையின் வரிசைப்படுத்துக.

  19. மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.

  20. சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.

  21. வாயுக்களின் வேதித்தன்மை எத்தகையதாக இருப்பினும் அனைத்து வாயுக்களுக்கும் எந்நிலையில் பாயில் விதி பொருந்தும்?

  22. வாண்ட் ஹாப் சமன்பாடு பற்றி எழுதுக.

  23. 0.30g கரிமச்சேர்மம் 0.88g காரபன்பன்டை ஆக்ஸடு மற்றும் 0.54g நீரினைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் சதவிதத்தினைக் காண்க.

  24. கிரிக்னார்டு வினைப்பொருடன் நீரின் வினையை எழுதுக.

  25. சோதனைகளின் போது எவ்வாறு தேவையான செறிவுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. KOH கிராம் சமான நிறையை கணக்கிடுக.

  28. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

  29. Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?

  30. வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

  31. பாரா ஹைட்ரஜனை, ஆர்த்தோ ஹைட்ரஜனாக எவ்வாறு மாற்றலாம்?

  32. கார உலோகங்கள் எவ்வாறு பின்வருவனவற்றுடன் வினைபுரிகின்றன?
    (i) நீருடன் வினை
    (ii) ஆல்கஹால் உடன்
    (iii) ஆல்கைன்களுடன் வினை

  33. சல்பர் ஹெக்சாகுளோரைடு ஒரு நிறமற்ற மணமற்ற வாயு அது நல்லியல்பு தன்மை உடையதாக கருதி 5.43dm3 கனஅளவுள்ள ஒரு எஃகு கலனில் 69.50Cல் 1.82மோல் கொண்ட வாயுவின் அழுத்தத்தினைக் கணக்கிடுக.

  34. என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல்  (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின்  \(\triangle H^o _f\) கணக்கிடு. 

  35. N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
    373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. டீ-பிராக்ளே சமன்பாட்டை வருவி.

    2. மூலைவிட்ட தொடர்பினை விவரி.

    1. ஹைட்ரஜன் பெராக்சைடு சாய்வு விச அமைப்பினைக் கொண்டுள்ளது. அதன் வடிவத்தை உருவகப்படுத்துக்க.

    2. வார்த்தக ரீதியாக சோடியம் ஹைட்ராக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

    1. வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி

    2. யூரியா நீராற் பகுப்படைந்து அம்மோனியா மற்றும் நீரைத் தருகிறது. இவ்வினையின் திட்ட என்டரோபி மாற்றத்தைகை கணக்கிடுக. யூரியா, H2O, CO2, NH3 ஆகியவற்றின் திட்ட என்டரோபி மதிப்புகள் முறையே 173.8, 70, 2135 மற்றும் 192.5 J mol-1K-1.

    1. 298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15
      N2O4(g) ⇌ 2NO2(g);
      வினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 1000 C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண்.

    2. மீத்தேனின் இனக்கலப்பை விவரி.

    1. ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.

    2. பென்சீனில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது. ஆனால் சேர்க்கை வினைகள் நடைப்பெறுகின்றன ஏன்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி IV (11th Standard Chemistry Model Question Paper Part IV)

Write your Comment