அரையாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. 1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்கள்) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. மாதிரியின் மாசு சதவீதம்.

    (a)

    0%

    (b)

    4.4%

    (c)

    16%

    (d)

    8.4%

  2. \(3d_{xy}\) ஆர்பிட்டாலில் yz தளத்தில் எலக்ட்ரான் அடர்த்தி

    (a)

    பூஜ்யம்

    (b)

    0.50

    (c)

    0.75

    (d)

    0.90

  3. குவாண்டம் இயக்கவியல் உருவாக அடிப்படையாக அமைந்தது

    (a)

    ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றக் கொள்கை

    (b)

    னுந்துகளின் ஈரியல்புத் தன்மை

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    இவற்றுள் ஏதுவுமில்லை

  4. 1868-ல் தற்போதுள்ள நவீன ஆவர்த்தன அட்டவணையினை ஒத்த ஒரு தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியவர்.

    (a)

    நியூலண்ட்

    (b)

    மெண்டலீஃப்

    (c)

    லோதர் மேயர்

    (d)

    மோஸ்லே

  5. அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை 

    (a)

    25% பாராவும் 75% ஆர்த்தோவும்

    (b)

    1% பாரா 99% ஆர்த்தோ

    (c)

    75% பாராவும் 25% ஆர்த்தோவும்

    (d)

    99% பாரா 1% ஆர்த்தோ

  6. கார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது?

    (a)

    நீரேற்றும் ஆற்றல் : Li > Na > K > Rb

    (b)

    அயனியாக்கும் ஆற்றல் : Li > Na > K > Rb

    (c)

    அடர்த்தி : Li < Na < K < Rb

    (d)

    அணு உருவளவு : Li < Na < K < Rb

  7. கட்டுப்பாடற்ற விரிவடைதலின் போது ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை குறைவதில்லை ஏனெனில் மூலக்கூறுகள்

    (a)

    எதிர்மாறு வெப்பநிலையை விட அதிக வெப்பநிலையில் உள்ளது 

    (b)

    ஒன்றுக்கொன்று கவர்ச்சி விசையை செலுத்துவதில்லை 

    (c)

    இயக்க ஆற்றல் இழப்பிற்கு சமமான வேலையை செய்யும் 

    (d)

    ஆற்றல் இழப்பின்றி மோதுகின்றன.

  8. ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது 

    (a)

    வெப்பமடைகிறது 

    (b)

    குளிர்ச்சியடைகிறது 

    (c)

    வெடிக்கிறது 

    (d)

    a & b 

  9. பின்வரும் வினைகளில் எது அதிகபட்ச என்ட்ரோபி மாற்றத்தை கொண்டிருக்கும்?

    (a)

    Ca(S) + ½ O2(g) → CaO(S)

    (b)

    C(S) + O2(g) → CO2 (g)

    (c)

    N2(g) + O2(g) → 2NO(g)

    (d)

    CaCO3(S) → CaO(S) + CO2(g)

  10. வாயு கரைசல் சமநிலையினை விளக்குவதற்கு பயன்படும் விதி

    (a)

    வான்ட ஹாப் விதி 

    (b)

    லீ - சாட்லியர் விதி  

    (c)

    ஹென்றி  விதி 

    (d)

    ஜூல் தாம்சன் விதி 

  11. கூற்று (A): ஒரு வினைசெயல் தொகுதியின் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை மாறுபடுவதால் ஏற்படும் ஒரு சிறப்பு வகை மாற்றியும் மெட்டாமெரிசம் எனப்படும்.
    காரணம் (R): ஓரே மூலக்கூறு வாய்ப்பாட்டினை பெற்றுள்ள சேர்மங்களின் வினைச் செயல் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள  ஆல்கைல் தொகுதிகள் மாறுபடுவதால் இம்மாற்றியம் ஏற்படுகிறது.

    (a)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கமாகும்

    (b)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம் அல்ல

    (c)

    (A) சரி, (R) தவறு

    (d)

    (A) தவறு, (R) தவறு

  12. பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு.

    (a)

    II-பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுவுடன் தனித்த இரட்டை எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணு அல்லது தொகுதி இணைக்கப்பட்டிருக்கும் நேர்வுகளில் பிணைப்பில்லா உடனிசைவு விளைவு உணரப்படுகிறது.

    (b)

    தனித்த ஜோடி எலக்ட்ரான்கள் உடனிசைவில் ஈடுபட்டு II எலக்ட்ரான்களை இடப்பெயர்ச்சி செய்வதால் ஒன்றிற்கும் மேற்பட்ட உடனிசைவு அமைப்புகளை தருகின்றன.

    (c)

    எலக்ட்ரான் கவர்தன்மை அதிகமுடைய அணு அல்லது தொகுதி II பிணைப்பு உடன் உடனிசைவில் ஈடுபடும்போது II எலக்ட்ரான்கள் நகர்வினால் பல பிணைப்பு உருவாகிறது

    (d)

    இவை அனைத்தும் சரி

  13. பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளை பொருள் \(\left( { CH }_{ 3 } \right) _{ 2 } C=CH_{ 2 }\overset { ICI }{ \longrightarrow } \)

    (a)

    2- குளோரோ  -1- அயடோ  -2- மெத்தில் புரப்பேன்

    (b)

    1- குளோரோ  -2- அயடோ  -2- மெத்தில் புரப்பேன்

    (c)

    1,2- குளோரோ  - 2 - மெத்தில் புரப்பேன்

    (d)

    1,2- டை அயடோ -2- மெ த்தில் புரப்பேன

  14. கார்பன் டெட்ரா குளோரைடு பற்றி கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    உலர் சலவை காரணியாக பயன்படுகிறது

    (b)

    ஆல்கஹாலிற்கு கரைப்பானாக பயன்படுகிறது

    (c)

    ஆவிநிலையில் உள்ள CCl4 தீப்பற்றி எரியும் தன்மையுடையது

    (d)

    மேற்கண்ட அனைத்தும் சரி

  15. காற்றில் உள்ள நைட்ரஜனின் பகுதி அழுத்தம் 0.76 atm மற்றும் 300K வெப்பநிலையில் அதன் ஹென்றி விதி மாறிலி மதிப்பு 7.6 × 104 atm. 300 K வெப்பநிலையில், காற்றை நீரின் வழியாக குமிழிகளாக செலுத்தும்போது, கிடைக்கும் கரைசலில், நைட்ரஜன் வாயுவின் மோல் பின்ன மதிப்பு என்ன?

    (a)

    1 × 10–4

    (b)

    1 × 10–6

    (c)

    2 × 10–5

    (d)

    1 × 10–5

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. ஆக்ஸி ஜனேற்ற எண் எனும் வார்த்தையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய்?

  18. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.

  19. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.

  20. ஜூல் தாம்சன் விளைவை எழுதுக. 

  21. பின்வரும் செயல்முறைகளுக்கான நிபந்தனைகளை தருக.
    1.வெப்பம் மாறா செயல்முறை 
    2.வெப்பநிலை மாறா செயல்முறை 
    3.அழுத்தம் மாறா செயல்முறை 
    4. கனஅளவு மாறா செயல்முறை 
    5. சுற்று செயல்முறை 

  22. சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?

  23. குளோரோபுரப்பேனின் ஒடுக்க வினையை எழுது.      

  24. ஹேலோ ஆல்கேன்களில் காணப்படும் C-X பிணைப்பின் முனைவுத் தன்மைக்கு காரணம் தருக

  25. 5.845 கிராம் சோடியம் குளோரைடை நீரில் கரைக்கப்பட்டது. மேலும் அக்கரைசலானது திட்டக் குடுவையைப் பயன்படுத்தி 500 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கரைசலின் வலிமை மோலாரிட்டியில் கணக்கிடுக.

  26. பகுதி - III

    ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

    6 x 3 = 18
  27. ஹீண்ட் விதிப்படி சமமான ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்குக.

  28. வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

  29. டியூட்டிரியத்தின் பதிலீட்டு வினைகளை விளக்குக

  30. பாயிலின் விதியினை தருக.

  31. 298 K வெப்பநிலையில் :2A +B → C வினையின் ΔH=400 KJ mol-1, ΔS=0.2 KJK-1 mol-1 எனில் வினை தனிச்சசையாக நிகழ தேவையான வெப்பநிலையை கணக்கீடுக 

  32. Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத்  எவ்வாறு தீர்மானிப்பாய்? 

  33. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்பாடுகளை எழுதுக.
    i. m-டைநைட்ரோ பென்சீன்
    ii. p-டைகுளோரோ பென்சீன்
    iii. 1,3,5-ட்ரைமீத்தைல் பென்சீன்

  34. உர்ட்ஸ் ஃபிட்டிக் வினையை எழுதுக.

  35. வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு பல்வேறு கரைபொருளுக்கு எவ்வாறு மாறுபடுகிறது என விளக்கு.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. பிணைப்பில்லா உடனிசைவு ஒரு உதாரணத்துடன் விளக்கு. 

    2. கரைசல்கள் ரெளல்ட் வீதியிலிருந்து விளக்கமடைவதற்க்கான காரணங்களை பட்டியலிடு.

    1. பாம் கலோரிமீட்டரில், மாறா கனஅளவில் வெப்பம் உட்கவரப்படுதலை தெளிவான படத்துடன் விளக்குக.

    2. HI உருவாதல் வினைக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிட்டு .

    1. லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.

    2. பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக
      1) CH3–CH=CH–CH=CH–C≡C–CH3
      2) \({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ \underset { \overset { I }{ { CH }_{ 3 } } }{ C } } -\overset { \underset { | }{ { C }{ H }_{ 3 } } }{ \underset { \overset { I }{ { H } } }{ C } } -C\equiv C-{ CH }_{ 3 }\)
      3) (CH3)3 C – C ≡ C – CH (CH3)2
      4) எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலீன்
      5) CH ≡ C – C ≡ C – C ≡ CH

    1. பருப்பொருட்களின் ஈரியல்புத் தன்மைக்கான டி -பிராக்ளே தொடர்பை தருவி.

    2. ஹைட்ரஜனின் பயன்களை விவரி.

    1. ஆக்ஸிஜனேற்ற எண் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க
      i) K2Cr2O7 + KI + H2SO4 → K2SO4 + Cr2(SO4)3 +I2+H2O
      ii) KMnO4 + Na2SO3 → MnO2 + Na2SO4 + KOH
      iii) Cu+ HNO3 → Cu(NO3)2 + NO2+ H2O
      iv) KMnO4+H2C2O4 + H2SO4 → K2SO4 + MnSO4 + CO2 + H2O

    2. பெரிலியம் மற்றும் அலுமினியத்திற்குமான ஒத்தத் தன்மைகளை விவரிக்க

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Chemistry Half Yearly Model Question Paper )

Write your Comment