விலங்குலகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு    

  (a)

  ஆர 

  (b)

  இருபக்க 

  (c)

  ஐந்தறைகளுடைய ஆர 

  (d)

  சமச்சீரற்ற 

 2. தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்  

  (a)

  புரோட்டோநெஃப்ரிடியா    

  (b)

  சுடர் செல்கள் 

  (c)

  சொலினோசைட்டுகள்   

  (d)

  இவை அனைத்தும் 

 3. கீழ்க்காணும் எந்த உயிரியல் 'சுயக் கருவுறுதல்' நடைபெறுகிறது? 

  (a)

  மீன் 

  (b)

  உருளைப்புழு 

  (c)

  மண்புழு 

  (d)

  கல்லீரல் புழு    

 4. கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு 

  (a)

  வளைத் தசைப் புழுக்கள்   

  (b)

  முட்தோலிகள் 

  (c)

  கணுக்காலிகள் 

  (d)

  குழியுடலிகள் 

 5. இயற்கையில், மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்ட உயிரிகள் 

  (a)

  பூச்சிகள் 

  (b)

  பறவைகள் 

  (c)

  ஆஞ்சியோஸ்பெர்ம்கள்   

  (d)

  பூஞ்சைகள் 

 6. இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி?     

  (a)

  இறால் மீன் 

  (b)

  நத்தை 

  (c)

  கடற்சாமந்தி 

  (d)

  ஹைட்ரா  

 7. பக்கக்கோட்டு  உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது. 

  (a)

  சலமான்டர்   

  (b)

  தவளை 

  (c)

  தண்ணீர் பாம்பு 

  (d)

  மீன்

 8. நான்கு அரை இதயம் இதில் காணப்படும். 

  (a)

  பல்லி 

  (b)

  பாம்பு 

  (c)

  தேள் 

  (d)

  முதலை 

 9. கீழ்க் காண்பவைகளில்  எது முட்டையிடும் பாலூட்டி? 

  (a)

  டெல்ஃபினஸ்    

  (b)

  மேக்ரோபஸ்   

  (c)

  ஆர்னிதோரிங்கஸ்    

  (d)

  ஈகுவஸ்  

 10. கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?

  (a)

  மெல்லுடலிகள்

  (b)

  முட்தோலிகள்

  (c)

  கணுக்காலிகள்

  (d)

  வளைத்தசைப் புழுக்கள்

 11. கடற்பஞ்சுகளின் உடலில் காணப்படும் கொயனோசைட்டுகள் பணியாதெனக் கண்டுபிடி.

  (a)

  உயிரியின் அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கிறது.

  (b)

  சுவாசத்திற்கு பயன்படுகிறது

  (c)

  உணவூட்டத்திற்கு பயன்படுகிறது

  (d)

  நீரோட்டத்தை உருவாக்குகிறது

 12. ஈரடுக்கு உயிரிகளின் உடற்சுவரில் காணப்படுவது

  (a)

  புறப்படை மற்றும் அகப்படை மட்டுமே உள்ளது.

  (b)

  புறப்படை, அகப்படை மற்றும் நடுப்பதை உள்ளது

  (c)

  மாறுபாடு அடையாத மீசோக்ளியா காணப்படுகிறது

  (d)

  தளர்வான நிலையில் இணைந்துள்ள செல்கள்

 13. நடுப்படையிலிருந்து தோன்றாத உறுப்பினைக் கண்டுபிடி

  (a)

  நரம்புகள்

  (b)

  இதயம்

  (c)

  எலும்புகள்

  (d)

  தசைகள்

 14. முட்தோலிகள் வகுப்பைச் சார்ந்த விலங்குகளின் சமச்சீர் தன்மை யாது?

  (a)

  சமச்சீரற்ற தன்மை

  (b)

  ஆரச்சமச்சீர் தன்மை

  (c)

  ஐந்தாரச் சமச்சீர் தன்மை

  (d)

  இருபக்கச் சமச்சீர் தன்மை

 15. நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்ற உடற்குழியை உடைய விலங்கு ___________ என அழைக்கப்படுகின்றன.

  (a)

  என்டிரோசீலோமேட்டுகள்

  (b)

  சைசோசீலோமேட்டுகள்

  (c)

  உண்மையான உடற்குழியுடையவைகள்

  (d)

  போலியான உடற்குழி உடையவைகள்

 16. தொகுதி: நிடோரியாவிலுள்ள அனைத்து விலங்குகளும் ஆரச்சமச்சீரமைப்புடையவைகள் ஆனால் இவ்விலங்கு மட்டும் இருபக்க சமச்சீரமைப்புடையது

  (a)

  பைசாலியா

  (b)

  ஆடம்சியா

  (c)

  பென்னாட்டுலா

  (d)

  மியான்ட்ரினா

 17. ட்ரோகோஃபோர் லார்வா எந்த விலங்கு தொகுதியில் காணப்படுகிறது.

  (a)

  தொகுதி: ஆஸ்கெல்மின்தஸ்

  (b)

  தொகுதி: கணுக்காலிகள்

  (c)

  தொகுதி: அன்னலிடா

  (d)

  தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்

 18. மெல்லுடலிகளில் நீரின் தரத்தை கண்டறிவதற்கு பயன்படும் உறுப்பு

  (a)

  உணர்நீட்சிகள்

  (b)

  ஆஸ்ஃபிரேடியம்

  (c)

  ராடுலா

  (d)

  மேன்டில்

 19. துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?

  (a)

  பின்னோக்கு வளர் உருமாற்றம்

  (b)

  மறைமுக கருவளர்ச்சி

  (c)

  டார்னேரியா லார்வாவுடன் கூடிய மறைமுகக் கருவளர்ச்சியைக் கொண்டது.

  (d)

  இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.

 20. எலும்பு மீன்களில் காற்று பரிமாற்றத்திற்கென காற்றுபைகள் உள்ளன. இவைகள் இதனுடன் இணைக்கப்படாமல் அமைந்துள்ளது.

  (a)

  உணவுக் குழல்

  (b)

  மூச்சுக் குழல்

  (c)

  இதயம்

  (d)

  நுரையீரல்

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் விலங்குலகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Biology Bio - Zoology - Kingdom Animalia One Marks Model Question Paper )

Write your Comment